சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிங்கபெருமாள் கோயில். இங்கு சிறிய குன்றின் மீது கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மர். 'பாடலாத்ரி’ என்றால் செந்நிறக் குன்று என்று பொருள். குடைவரையாகத் திகழும் கோயில் கருவறையில் அருளும் ஸ்வாமியுடன், குன்றையும் சேர்த்து கிரிவலமாக வருவது இத்தலத்தின் சிறப்பம்சம்.

சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில், ஸ்ரீஅஹோபிலவல்லித் தாயார், ஸ்ரீதேவி - பூதேவியுடன் உத்ஸவர் ஸ்ரீபிரகலாதவரதர் ஆகியோரையும் தரிசிக்கலாம். பிரதோஷ காலத்தில் இங்குள்ள ஸ்ரீபிரதோஷ நரசிம்மருக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிப்பது பெரும் புண்ணியம்.

ஜாபாலி மகரிஷிக்காக ஸ்வாமி உக்கிரகோலத்தில் காட்சி தந்த தலம் என்கிறது ஸ்தல புராணம். இங்கு வந்து பானகம் சமர்ப்பித்து ஸ்ரீநரசிம்மரை வழிபட, வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இத்தகு சிறப்புமிகு சிங்கபெருமாள் கோயிலில் சமீபத்தில் (19.3.14) வெகுகோலாகலமாக நடந்தேறியது மகாகும்பாபிஷேகம். வரும் மே- 13 செவ்வாய் அன்று ஸ்ரீநரசிம்ம ஜயந்தியும் சிறப்புறக் கொண்டாடப்படும். கோயிலின் மகாகும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண காட்சிகள் இங்கே உங்களுக்காக!

படங்கள்: தி.குமரகுருபரன்