Published:Updated:

விளக்கு பூஜை: கும்பகோணம்

விளக்கு பூஜை: கும்பகோணம்

விளக்கு பூஜை: கும்பகோணம்

விளக்கு பூஜை: கும்பகோணம்

Published:Updated:
விளக்கு பூஜை: கும்பகோணம்
##~##
கோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யில் நகரமாம் கும்பகோணத்தின் பெயருக்குக் காரணமாக திகழ்வது ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் ஆலயம். வாசகர்களின் மனங்களில் குடியிருக்கும் சக்தி விகடன், நயஹா வுடன் இணைந்து நடத்தி வரும் திருவிளக்கு பூஜை, கடந்த 7.12.10-ஆம் தேதி, இந்த ஆலயத்தில்தான் சிறப்புற நடைபெற்றது. சக்தி விகடனின் 49-வது திருவிளக்கு பூஜை இது.

''புதுக்கோட்டை அரைக்காசு அம்மன் கோயில்ல நடந்த விளக்குபூஜைல கலந்துக்க ஆசைப்பட்டேன்; ஆனா, முடியலை. இப்ப, இந்த விளக்குபூஜைக்கு முதல் ஆளா பேர் கொடுத்து, பதிவு பண்ணி, முதல் ஆளாவும் கோயிலுக்கு வந்துட்டேன். மனசே பூரிச்சுக் கிடக்கு!'' என்று உற்சாகம் பொங்க சொல்கிறார் ஸ்ரீரங்கம் வாசகி லட்சுமி சந்தானம்!

''சின்ன வயசுலேர்ந்தே, 'எல்லாரும் நல்லாருக் கணும்’னுதான் வேண்டிப்பேன். அப்படித்தான் என்னை வழக்கப்படுத்தியிருக்காங்க, அப்பாவும் அம்மாவும்! இப்பவும் அதே பிரார்த்தனையோடுதான் இந்த விளக்கு பூஜைக்கு வந்தேன்'' என்கிறார் ஓசூரிலிருந்து வந்திருந்த வாசகி கோகிலா ராஜகுரு.

''கும்பகோணத்துல நான் இருக்கேன். என் பொண்ணு தேவி அமெரிக்காவுல இருக்கா. 'சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜைல அவசியம் கலந்துக்கம்மா; நம்ம குடும்பம் சீரும் சிறப்புமா இருக்கும்’னு சொல்லி, அங்கேருந்தபடியே என் பேரைப் பதிவு பண்ணிட்டா. கடல் கடந்து இருக்கிற என் பொண்ணுக்கு, சக்தி விகடன்தான் புது எனர்ஜியைத் தருது!'' என்கிறார் வாசகி ராஜேஸ்வரி.  

விளக்கு பூஜை: கும்பகோணம்

'நல்ல வேலை கிடைக்கணும்’ என காமகோடியில் இருந்து வந்த வாசகி ஜோதியும், 'பெண்கள் சுமங்கலிகளாக நீடூழி வாழ வேண்டும்’ என்று கும்பகோணம் வாசகி ராணிபாண்டியனும், 'மகனுக்கு நல்ல வேலையும் வரனும் கைகூடி வரணும்’ என திருச்சி வாசகி ஸ்ரீலதாவும், 'உலகில் அமைதியும் அன்பும் தழைக்கணும்’ என்று கும்பகோணம் கஸ்தூரியும், திருவிடைமருதூர் சுந்தரியும் பிரார்த்தித்துக்கொண்டனர்.

''கணவருக்கு உடல்நிலை சரியில்லை. பழையபடி உடம்பு தேறி, நல்லபடியா நடமாடணுங்கறதுதான் என் வேண்டுதல். பூஜைல கலந்துக்கிட்டவங்க நிறையப் பேர் எங்கிட்ட வந்து, 'சீக்கிரமே சரியாயிடும்; கவலைப்படா தீங்க’ன்னு ஆறுதல் சொன்னாங்க. அதை அந்த அம்பா ளின் அருள் வார்த்தையாவே உணர்றேன்!'' என்று நா தழுதழுக்கச் சொன்னார் தஞ்சாவூர் வாசகி சாந்தி.

பிறரின் துயரங்களில் பங்கேற்று, அவர்களுக்கு மன ஆறுதல் தருவதும்கூட பக்தியின் ஒரு வகை வெளிப்பாடுதான்! சகோதரத்துவமும் வாஞ்சையுமாக ஆறுதல் வார்த்தைகள் கூறிய சக்தி விகடன் வாசகியர் கூட்டத்துக்கு, மனமார்ந்த நன்றிகள் பல!

- இரா.மங்கையர்க்கரசி
படங்கள்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism