Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளில் ஒன்றில், பிறந்த வேளை (லக்னம்), நட்சத்திரபாதம் (சந்திரன்) இருக்கும் நிலையில், சனி த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள் நபும்ஸகமாக அதாவது மூன்றாவது பாலினமாக - அலியாகத் தென்படுவாள். உண்மையில் அலி அல்ல; அலியைப்போல் இருப்பாள். பெண் பாலினத் துக்கான தகுதியை இழந்திருப்பாள்.

ஆண் பெண்ணாக மாறினான், பெண் ஆணாக மாறினாள் என்ற தகவல் நாளேடுகளில் தென்படு வது உண்டு. பிறக்கும் வேளையில் ஆண் அல்லது பெண் உடல் உறுப்புகளில் (வெளித் தோற்றத்தில்) மாறுதல் எதுவும் தென்படாமல், ஆண்மையும் பெண்மையும் அற்ற நிலை உருவாவதை, அலிக்குச் சமம் என்று சொல்லலாம். பும் நபும்ஸகம், ஸ்த்ரீ நபும்ஸகம், அதாவது ஆண் அலி, பெண் அலி என்ற விளக்கங்கள் ஜோதிடத்தில் உண்டு. சனியை ஆண் அலியாகவும், புதனை பெண் அலியாகவும் ஜோதிடம் சொல்லும். ஆண்மையும் பெண்மையும் இருபாலிலும் தென்படும். ஆண்மை தூக்கலாக இருந்தால், அவன் ஆண்; பெண்மை தூக்கலாக இருந்தால், அவள் பெண்; இரண்டும் சமமாக இருந்தால் அலி என்ற விளக்கத்தையும் ஜோதிடம் தரும்.

பெண்மையில் ஆண்மை கலந்திருக்கும் என்று வேதம் சுட்டிக்காட்டும் (ஸ்திரய:ஸதீ:தாஉமே பும்ஸ ஆஹு:). பிரஹன்னளை, சிகண்டி, சகுனி ஆகிய கதாபாத்திரங்கள் அலிகளாகத் தென்பட்டனர். செயல்பாட்டில் ஆண்மையும் பெண்மையும் இருந் தாலும், தகுதியில் அலியாகவே இருந்தார்கள். கொங்கையும் கேசபாசங்களும் பெண்மைக்கு அடையாளம், மீசையும் உடலில் அடர்ந்த ரோமங்களும் ஆண்மைக்கு அடையாளம் என்று சொல்வர் (ஸ்தனகேசவதீ நாரீ லோமச: புருஷ: ஸ்ம்ருத:). மீசை புருஷனின் அடையாளம் என்கிறது வேதம் (யத்ச்மச்ருண: தத்புருஷாணாம்ரூபம்). உள்ளத்தளவில் பெண்ணாக மாறிய ஆணை முழு அளவில் பெண்ணாகவும், ஆணாக மாறிய பெண்ணை முழுமையான ஆணாகவும் மாற்றும் முயற்சியில் விஞ்ஞானம் முனைந்திருக்கிறது. கருவறையில் நிகழும் இந்தப் பாகுபாட்டை, கருவறைக்கு வெளியே நிகழவைப்பதில் முனைப்போடு செயல்பட்டு, இயற்கையை எதிர்த்து வெல்லத் துடிக்கிறது விஞ்ஞானம். இதில் ஆராய்ச்சியாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; மக்களுக்கே பாதிப்பு. நரிக்கு விளையாட்டு, நண்டுக்கு பிராணாவஸ்தை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

கருவறை நீரில் விழுந்த ஆண் வீரியம், முதல் வாரத்தில் கலலமாகத் தென்பட்டு, அடுத்த வாரத்தில் ஆண், பெண், அலி என்ற நிலையை சுட்டிக் காட்டிவிடும் (பிண்டம் பேசி அர்புதம்). அதற்குத் தோதாக வளர்ந்த பிறகு, அந்தக் கருவறை மாற்றத்தை மாற்றியமைக்கும் முயற்சி நம்பிக்கைக்கு உகந்தது அல்ல! படைப்பின் ஆரம்ப காலத்திலேயே இம்மூன்று பாலினங் களும் தென்பட்டு வளர்ந்து வருகிறார்கள். மகாபாரத அரவானின் துணைவியர் அப்படித்தான் இருந்தார்கள். அரவாணிகள் என்ற இனத்தை எவரும் ஆராய்ச்சியால் மாற்ற முயற்சிக்கவில்லை. பிறப்பில் பெண்மை தென்பட்டாலும், பெண்மையற்றவளாக இருப்பாள் என்ற தகவலைச் சொல்ல வந்திருக்கிறது ஜோதிடம்.

சனியின் குணாதிசயங்களை விளக்கும் ஜோதிடம், குறிப்பாக தாமஸ குணத்தை அவனது இயல்பாகச் சொல்லும். செயலில் சுணக்கம், அறியாமை, மோகம், சோம்பல், உள்ளதை உள்ளபடி பார்க்காமல், ஒன்றை மற்றொன்றாகப் பார்க்கும் எண்ணம், ஆவரணம் அதாவது மறைவு ஆகியன தாமஸ குணத்தில் அடங்கும். அதற்கு இசைவாக, வீரமும் வெட்கமும் இருக்காது. தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடத் தயங்காது. அங்கே பெண்மையின் வெட்கம் இருக்காது. நேர்வழியில் எதிர்க்க இயலாத நிலையில், மறைமுகமான வழியில் எதிர்க்க முற்படும். ஆண்மைக்கான வீரம் குன்றியவர்களில் மறைமுகமாக எதிர்க்கும் குணம் தலைதூக்கும். சகுனியிடம் இதைக் காணலாம். சிகண்டியிடமும் பிருஹன்னளையிடமும் ஆண்மையின் வீரமும், பெண்மையின் வெட்கமும் தென்படவில்லை. இந்த இயல்புகளை சனியின் பங்காக எடுத்துரைக்கிறது ஜோதிடம். ஆகவே, அலி என்று சொல்லாமல், 'அலிக்குச் சமமானவளாக இருப்பாள்’ என்று விளக்கியது.

ஆணாக இருந்தும் அவன் ஆண்மையின் உணர்வையும், பெண்ணாக இருந்தும் அவள் பெண்மையின் உணர்வையும் முழுமையாக உணர இயலாமல் போவதே அலிக்குச் சமம் என்கிறது. துரதிர்ஷ்டவசமாக, திருமணத்தில் இணைந்த மனைவி அலிக்குச் சமமாக இருந்தால், ஒரு குழந்தையைத் தத்தெடுக்கப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம். விலங்கினங்களின் இனப் பெருக்கத்துக்கு மாற்று வீரியத்தைப் பயன்படுத்திப் பழக்கப்பட்ட மனம், பண்பை மறந்து வீரிய (விந்து) வங்கியையும், வாடகைத் தாயையும் நாடுகிறது. அதன் மூலம், வாழ்க்கைத் துணை அலி பண்புடன் அமைந்ததால் ஏற்பட்ட குறையை நேர்செய்கிறது. ஒன்றை இழந்து ஒன்றை ஏற்பதை சாதனையாகப் பார்க்கிறது அது.

வீக்கத்தின் வளர்ச்சி ஏற்புடையதல்ல. வளர்ச்சியானது ஊட்டச்சத்தால் அமையவேண்டும். மனத்தை மறந்து உடம்பில் நிகழும் மாறுபாட்டுக்கு மட்டும் ஆராய்ச்சியில் வழிவகைகளைக் கண்டு சரிசெய்வது, சிறந்த வழி அல்ல. மனம்தான் துயரத்தையும் இன்பத்தையும் உணர்கிறது. உடம்பை சீராக இயங்கவைத்தாலும் குறையை நிறை ஆக்கினாலும் மனத்துக்கு அமைதியும் சந்தோஷமும் அளிப்பதில் ஏமாந்து போனால், ஆராய்ச்சி சாதனையாகாது. இயற்கையை வெல்லும் முயற்சி தோல்வியுறும். இயற்கையை நாம் சரியான முறையில் பயன்படுத்தினால் மகிழ்ச்சியில் திளைக்கலாம்.

அன்றைய நாளில் செல்லப்பிராணிகளைக் குழந்தைகள் போல் பார்த்தது மனம். இப்போது, குழந்தைகளைச் செல்லப்பிராணிக ளாகப் பார்க்கிறது. இதுபோன்ற விபரீத மன மாற்றத்துக்கு சனியின் பங்கு உண்டு என்கிறது ஜோதிடம். பாசமும் அன்பும் அகன்று, காப்பாளனாகச் செயல்படும் எண்ணம் வந்துவிட்டது.

சூரியனிடம் இருந்து வெளிவந்த கிரகம் சனி என்பர். சூரியனின் 'சாரம்’ என்ற கருத்தில் சூரியனின் புதல்வனாகச் சித்திரிக்கும் ஜோதிடம். அப்பாவின் சாரம் மகன் என்பதால் சூரியபுத்திரன், சௌரீ என்றெல்லாம் சனிக்குப் பெயர்கள் உண்டு. அதற்காக, குடும்ப வாழ்வில் நாம் சந்திக்கும் அப்பா, பிள்ளை உறவில் தென்படும் நிகழ்வுகளை சூரியனிலும் சனியிலும் ஒட்டவைத்துப் பலன் சொல்வதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

சூரியனைவிட வெப்பத்தில் அதிகமானவன் சனி என்பது கவனத்துக்குரியது. அந்த வெப்ப மிகுதி வறட்சிக்குக் காரணமாகி, ஆண்-பெண் இரு பாலினத்தையும் மறையச் செய்தது. மகனின் சிந்தனையில் வறட்சியைப் பார்க்கும் தாய், 'அட சனியனே!’ என்று அலுத்துக்கொள்வாள். நீரை உறிஞ்சுவதில் வெப்பமும் காற்றும் திறமை பெற்றவை. வெப்பம் உறிஞ்சினால் வயல் பாளம் பாளமாக வெடித்துவிடும். காற்று உறிஞ்சினால் வயலில் வெடிப்பு இருக்காது. நன்மையையும் தீமையையும் தாட்சண்யம் இல்லாமல் ஒருசேர வழங்கி, வாழ்வையும் தாழ்வையும் சந்திக்க வைப்பான் சனி.

16 வழிகளில் பலம் பெற்ற சனி, பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வைப்பான். பலம் குன்றிய சனி, விகிதாசாரப்படி இரண்டை யும் வழங்குவான். முற்றிலும் பலமிழந்தும், மற்ற கிரகங்களின் ஒத்துழைப்பும் இல்லாமல், எதிரிடையான கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்ற சனி துயரத்தில் ஆழ்த்திவிடுவான்.

சனி என்றாலே தீமையை விளைவிப்பவன் என்ற எண்ணத்தை மக்கள் மனத்தில் திணித்திருக்கிறார்கள், பிற்காலத் தில் வந்த ஜோதிட மேதைகள். செவிவழித் தகவல்களும், புராணக் கதைகளும் அந்த மேதைகளை மேளதாளம் போட்டு ஊக்குவிக்கின்றன.

ஒற்றைப்படை(மிதுனம்) ராசியில் முதல் 5 பாகைகளுக்கு மேல் 10 பாகைகள் வரை சனியின் த்ரிம்சாம்சகம். இரட்டைப்படை(கன்னி) ராசியில் 20 பாகைகளுக்கு மேல் 25 வரை ஐந்து பாகைகள் சனி த்ரிம்சாம்சகம். ராசி (மிதுனம், கன்னி) முழுவதும் புதன் பரவியிருப்பான். முறையே முதல், 2-வது ஹோரையில் சூரியன் இருப்பான். முறையே முதல், கடைசி த்ரேக்காணங்களில் புதனும் சுக்கிரனும் பங்கு பெறுவார்கள்.

இவர்களுடன் இணைந்த சனி த்ரிம்சாம்சகம் அவளது இயல்பை அலிக்குச் சமமாக மாற்றி அமைத்தது என்று விளக்குகிறது ஜோதிடம். இங்கு சூரியன், சனி என்ற இரண்டு வெப்பக் கிரகங்கள்; புதன், சுக்கிரன் என்று இரு தட்பக்கிரகங்கள்; ஒன்றோடு ஒன்று இணைந்து பலனை இறுதியாக்கின. த்ரிம்சாம்சகத்தை எட்டிய சனி, பெண் அலியான புதனின் தொடர்பில், அதில் பிறந்தவளை அலிக்குச் சமமாக மாற்றியது. அலி என்று முற்றுப்புள்ளி வைக்காமல், 'அலிக்குச் சமம்’ என்று சொல்லியிருப்பதால், குறைந்த எண்ணிக்கையில் குழந்தைச் செல்வம் பெற வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

சூரியன், சந்திரன் (நட்சத்திர பாதம்) இவர்களது தொடர்பும் சேர்ந்திருப்பதால், 'பலம் பெற்ற சூரிய- சந்திரர்களின் இணைப்பு தென்பட்டால் குழந்தைச் செல்வத்தைப் பெற்றுத் தரவும் இடம் உண்டு’ என்பதைச் சூசகமாக விளக்குகிறது.

அலிக்குச் சமம் என்ற சொல் விகிதாசாரப்படி, தட்பக் கிரகம் வலுத்திருப்பதால், குழந்தைப்பேறு தடைப்படாது என்று பொருள். இன்பத்தின் முழுமை குழந்தைச் செல்வத்தின் தோற்றத்தில் நிறைவு பெறும். இருவரது மகிழ்ச்சியின் முடிச்சு குழந்தைச் செல்வம் என்று சொல்லுவார்கள் (ஆனந்த த்ரந்திரேகோயம் அபத்யமிகிகத்யதெ). 'அலி’ என்பதால் குழந்தை உருவாகாமல் இருப்பதும் உண்டு.

குழந்தை உருவாகவில்லையே என்ற ஏக்கம், இருவருடைய தொடர்பில் முழுமையான இன்பத்தை எட்ட விடாமல் தடுக்கும். இந்த இரண்டின் தாக்கத்தில் மனம் தளர்ந்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, துயரத்தில் ஆழ்ந்து அவதியுறவும் செய்யலாம். அதேநேரம், 'அலிக்குச் சமம்’ என்று சொன்னதால், அலியின் மொத்த இயல்பும் அவளில் தென்பட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

புதனும், சந்திரனும், சுக்கிரனும் பலம் பெற்று இருந்து, சனி பலம் இழந்த நிலையில் தென்பட்டால், அலியின் குறையைத் தென்படாமல் செய்துவிடும். த்ரிம்சாம்சகம் தனிப்பட்ட தகுதியை (இயல்பை) ஏற்படுத்தும் என்கிறது ஜோதிடம். இப்படியிருக்க, மூன்றாம் வரிசையில் இடம்பிடித்த 'யோகத்தை’ மிகைப்படுத்தி, 'வாழ்க்கை வளம் பெருகும்’ என்று விளக்கம் தருவதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.

கஜகேசரி யோகம் குருசந்திர யோகம், போன்ற யோகங்களைச் சுட்டிக் காட்டி பொருளாதாரம், குழந்தைச் செல்வம், வேலை வாய்ப்பு ஆகிய அத்தனையும் வளம் பெறும் என்ற விளக்கம், ஆராயாமல் சொன்ன தகவல்கள்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

'தெய்வஞ்ஞன்’ என்று ஜோதிடனை பெருமையாக அழைக்கும் ஜோதிடம். 'தெய்வம்’ என்ற சொல்லுக்கு முற்பிறவி யில் ஈட்டிய செயல்பாடு (கர்மவினை) என்று பொருள் (தெய்வம் த்ருஷ்டம் பாக தேயம் பாக்யம்...). கண்ணுக்குப் புலப்படாத கர்மவினையை அதிர்ஷ்டம் (கண்ணால் பார்க்க இயலாதது) என்று சொல்லும்.

கர்மவினை வலுவுற்று இருந்தால், அதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துவிடுவோம். வலுக்கட்டாயமாக நம்மில் திணிக்கப்படும்போது அதை 'விதி’ என்று அழைக்கும்.

நமது முயற்சி வலுவான கர்மவினையை வலுவிழக்கச் செய்யும்போது, முயற்சி வென்று கர்மவினை படுத்துவிடும். இதையே உழைப்பு, செயல்திறன், சாமர்த்தியம், தகுதி எனச் சொல்லும்.

இவை அத்தனையையும் அறிந்தவன் 'தெய்வஞ்ஞன்’. ஆகையால், துன்பத்திலிருந்து மக்களை விடுவிக்க, ஜோதிட விளக்கங்களை ஆழமாக ஆராய்ந்து, மக்களுக்கு சேவை செய்யும் பெரும் வாய்ப்பு ஜோதிடருக்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது. எனவே, நுனிப்புல் மேயாமல் செயல்படுவது மக்களுக்கும் ஜோதிடத்துக்கும் நல்லது.

- சிந்திப்போம்...