Published:Updated:

பிரம்மாக்கள் எத்தனை?

பிரம்மாக்கள் எத்தனை?

பிரம்மாக்கள் எத்தனை?

பிரம்மாக்கள் எத்தனை?

Published:Updated:
பிரம்மாக்கள் எத்தனை?

பிரம்மதேவன் ஒன்பது வடிவங்களைக் கொண்டு அருள்வதாக விவரிக்கின்றன புராணங்கள். அப்படி பிரம்மன், 9 வடிவங்களுடன் 9 சிவலிங்கங்களை, தனித்தனிக் கோயில்களில் ஸ்தாபித்து வழிபட்ட தலம், ஆந்திர மாநிலம்- கர்னூல் அருகேயுள்ள அலம்பூர் (ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தூரம்).

பிரம்மதேவனின் நவவடிவங்களாவன:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குமார பிரம்மன்: திருமாலுக்கு மகனாகப் பிறந்து, படைப்புத் தொழிலை நன்கு ஆற்ற தவம் புரியும் நிலையைக் குறிக்கிறது.

அர்க்க பிரம்மன்: சூரிய மண்டலத்தில் விளங்கும் பிரம்மதேவன், சிவாசனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் சூரிய மண்டலத்தில், அர்க்க பிரம்மனாக பூஜிக்கப்படுகிறான்.

வீர பிரம்மன்: பிரம்மன் அறியாமை மிகுந்த அரக்கர்களோடு போரிட்ட கோலத்தைக் குறிக்கிறது.

##~##
பால பிரம்மன்:
அத்திரி- அனுசுயா தம்பதியரிடம் குழந்தையாகத் தவழ்ந்த நிலையில் உள்ளவன்.

சுவர்க்க பிரம்மன்: யாகாதிகளால் மேன்மை பெற்றவர்கள் வசிக்கும், சொர்க்கலோகத்தை காப்பவனாகத் திகழும் திருவடிவம் இது.

கருட பிரம்மன்: பிரம்மன் கருடன் வடிவில் வந்து பறவை வடிவிலிருந்த முனிவர்களுக்கு உபதேசித்த கோலம்.

விஸ்வ பிரம்மன்: உலகை படைக்கும்போது விஸ்வ பிரம்மன் எனப் பெயர் பெறுகிறார் பிரம்மதேவன்.

பத்ம பிரம்மன்: திருமாலின் நாபியிலிருந்து தோன்றி தாமரை மலரில் வீற்றிருப்பதால், 'பத்ம பிரம்மன்’ என்று பிரம்மதேவனைப் போற்றுவர்.

தாரக பிரம்மன்: தாரக மந்திரத்துக்கு தலைவனாக இருப்பதால், 'தாரக பிரம்மன்’ என்று அழைக்கப்படுகிறார்!

- எம்.முருகேசன், திருச்சி-21

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism