மானிடர் அனைவருக்கும் சில நோக்கங்கள் உண்டு. அதை விருப்பம், ஆசை, பேராசை என்று வகைப்படுத்தலாம். அந்த நோக்கங்கள் நிறைவேறும்போதும், அவற்றை முழுமையாக அடையும்போதும் தான் வெற்றிபெற்றுவிட்டதாகக் கருதுகிறான். அதனால், அவன் பேரானந்தம் அடைகிறான். அந்த நிலையில், அவன் மனம் மற்றுமோர் உயர்ந்த நிலையைக் குறிக்கோளாகக் கொள்கிறது. ஆசை பேராசையாகிறது. மீண்டும் வெற்றியை நோக்கி அவனது பயணம் தொடர்கிறது.

இப்படி, நினைத்ததை நடத்தி முடிப்பவன் வெற்றி பெற்றதாகக் கருதுகிறான். மற்றவர்களும் அவனையே வெற்றியாளனாகக் கருது கிறார்கள். இந்த வெற்றிக்கு ஆதார சக்தி எது என சிந்திப்போம்.

‘The wish of a man may not match with the will of God’

தனி மனிதனின் விருப்பங்கள் எல்லாம் இறைவனது சங்கல்பமாக அமையவேண்டிய அவசியம் இல்லை. '‘Man Proposes; God disposes’ என்றொரு பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. மனிதன் ஒன்றைத் தீர்மானிக்கலாம்; இறைவன் அதை நிராகரிக்கலாம், அல்லது அங்கீகரிக்கலாம்.

இறைவன் எதை விரும்புகிறான், எந்தெந்த நோக்கங்களை நிறைவேற்றி வைத்து மனிதனின் வெற்றிக்கு வழிகாட்டுகிறான் என்பது குறித்துச் சிந்தித்துச் செயல்பட்டால், அது வெற்றி எனும் சிகரத்தில் நம்பிக்கையோடு ஏறும் வழியை நமக்குக் காட்டும். இதற்குச் சமய நூல்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.

வாழ்க்கையின் வெற்றிக்கு ஆதார சக்தி, தனி மனிதனின் சிந்தனைத் திறனே! உடல், மனம், அறிவு, ஆத்மா ஆகிய நான்கு பரிமாணங்களில் மனமும் அறிவும் ஒன்றுபட்டுச் செயல்படும்போது உண்டாகும் தன்னம்பிக்கையே வெற்றிக்கு ஆதார சக்தியாக அமைகிறது. மனோபலம்தான் நமது குறுகிய கால நோக்கங்களும் தொலைநோக்குத் திட்டங்களும் நிறைவேற வழிசெய்கிறது.

என் நோக்கங்கள் நிறைவேறுவதால் எனக்கு என்ன லாபம், அதனால் மற்றவர்களுக்கு என்ன நன்மை, எனது செயல்பாடுகளால் பாவங்கள் உண்டாகுமா, தீமைகள் விளையுமா என்கிற கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் திட்டங்களை உருவாக்கிக்கொண்டு செயல்பட்டால் நோக்கங்கள் நல்ல முறையில் நிறைவேறி, சாதனைகள் புரிந்து, வெற்றி அடையும் வாய்ப்பு நிச்சயம் உண்டாகும்.

உயரிய எண்ணங்களின் உன்னத சக்தி!

மனம், அறிவு ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியில் உருவாகும் எண்ண அலைகளே செயல்புரியும் திறனை நமக்குத் தருகின்றன. அந்தச் சக்தியே நமது வெற்றிக்கு வழிகோலுகிறது. ஆக, நமது நோக்கங்கள் நிறைவேறி, நாம் வெற்றிபெறுவதற்கு, நமக்குள் புதைந்திருக்கும் அமானுஷ்ய சக்திகளை உணரவேண்டும்.

முதலில்...

'நான் அடைய விரும்புவது எது?’ என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, அந்த நோக்கத்தை ஓரிரு வரிகளில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். இது எளிதாகத் தோன்றலாம். ஆனால், கடல் போல் பரந்து விரிந்த ஆசை அலைகளை ஒன்றாகச் சேர்த்து, ஒரு நீர்த்துளிக்குள் அடைப்பது போன்ற முயற்சி இது.

உதாரணமாக, ஒருவன் உலகத்தின் பெரிய பணக்காரர்கள் வரிசையில் தானும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். இது மிகப்பெரிய ஆசை.

அவன் இதைப் பற்றிச் சிந்தித்து, அப்படி ஒரு பணக்காரனாகும் தகுதி தனக்கு இருக்கிறதா, அதற்காக அயராது உழைக்கும் சக்தி தன்னிடம் உள்ளதா, அதற்கு எவ்வளவு காலமாகும், நேர்வழியில் பணம் சம்பாதித்து அந்த நிலைக்கு உயர முடியுமா என்றெல்லாம் சிந்தித்தால், நமது பேராசையின் பரிமாணம் சற்றுக் குறைந்து ஆசையாக மட்டுமே மாறும். மேலும் இது பற்றிச் சிந்திக்கும்போது, அது ஒரு நல்ல நோக்கமாக மாறி, அதைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் உருவாகும்.

‘God grants what you deserve and not what you desire.’ 'நீ விரும்புவதைக் கடவுள் தரமாட்டார்; உன் தகுதிக்கேற்றபடியே அருள்புரிவார்’ என்பது தத்துவம்.

இரண்டாவதாக...

நமது நோக்கங்களை ஒரு வரியில் எழுதிக் கொண்ட பிறகு, அதை அடைவதற்கான ஒரு செயல்முறைத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

‘Plan of Action should be enriched by Action plan’ என்றொரு விதி நிர்வாகப் பயிற்சியில் உண்டு.

எதைச் செய்ய வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், அதற்கான கால வரம்பு என்ன என்பதை வரிசைப்படுத்தி உருவாக்கும் திட்டமே செயல்பாடுகளின் வரைபடமாகிறது.

அந்தத் திட்டத்தில் எதை முதலில் செய்ய வேண்டும், அதைச் செய்து முடிக்க என்னென்ன செயல்பாடுகள் (tasks) உள்ளன, அவற்றை எப்போது, எப்படி, யார் மூலம் செய்ய வேண்டும் என்று வகுத்துக்கொள்ளும் வரைபடமே Action Plan ஆகும்.

மூன்றாவதாக...

ஒரு புகைப்படத்தை ஒருமுறை கூர்ந்து பார்த்துவிட்டு, பிறகு கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகைப்படத்தை நினைவுகூர்ந்தால், அது நம் மனக்கண் முன் தோன்றும். மனத்தின் இந்தச் சக்தியைப் பயன்படுத்தி, நமது நோக்கங் களின் பரிமாணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

நமது நோக்கங்களை ஒருமுறை உற்றுப்பார்த்து, கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, அதற்கான பதில்களைத் தெரிந்துகொண்டு செயல்படுவது, வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்க ஏதுவாகும்.

* இதை ஏன் அடைய விரும்புகிறேன்?

* அதனால் என்ன பலன்கள் கிட்டும்?

* எப்படி அடைய விரும்புகிறேன்?

* எனது நோக்கங்கள் தார்மிகமானவையா?

* என் பலம் என்ன?

* என் பலவீனம் என்ன?

* என் நோக்கங்கள் நிறைவேற யார் யார் துணை நிற்பார்கள்?

* எனது ஆசைகள் அல்லது நோக்கங்களை இறைவன் அங்கீகரிப்பாரா?

இவைதான் அந்தக் கேள்விகள்!

நேர்முகச் சிந்தனைகள்

வெற்றிச் சிகரத்தை அடைய உதவும் மற்றுமொரு மானிட சக்தி, நேர்முகச் சிந்தனைகள். ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் தோன்றும் நேர்முகச் சக்தி, நமது ஆழ்மனத்தில் பதிந்துவிடுகிறது. இது ஒருவனது நடத்தையையும் செயல் திறனையும் சாதகமாக மாற்றும்.

எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடம் தராமல், நேர்முகச் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டால், மனஇறுக்கம் குறையும்; செயல்பாடுகள் முறைப்படி நடக்கும்.

தவறான எதிர்பார்ப்புகள் நேர்முகச் சிந்தனைகள் ஆகாது. பெரும்பாலும் நம்மில் பலர் தன்னைப் பற்றியும், தன்னுள் அடங்கி யுள்ள மானிட சக்தியையும் சரியாக மதிப்பீடு செய்யாமல், நிறைவேறாத ஆசைகளை வளர்த்துக்கொண்டு, சிறிதளவும் தகுதி இல்லாதபோதும், தகுதிக்கு மீறிய பதவிகளுக்கும் வாழ்க்கை வசதிகளுக்கும் ஆசைப்படுவது உண்டு. பெரும்பாலும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

தகுதிக்கு மீறிய ஆசைகளும், முரணான எதிர்பார்ப்புகளும் ஏமாற்றத்தையும், தோல்வியையும்தான் தரும். அதனால் ஏற்படும் அதிர்ச்சியும் துயரமும் ஒருவனை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, மன இறுக்கம் அடையச்செய்யும்.

இயற்கைக்குப் புறம்பான எதிர்பார்ப்புகளால் ஏமாற்றம் ஏற்படுகிறது. ஏமாற்றத்தால் தாங்க முடியாத துயரம் உண்டாகிறது. அது ஒருவனைத் தீவிர மனஇறுக்கத்துக்கு ஆளாக்கி விடுகிறது.

அதனால் அவனுடைய நடை- உடை- பாவனைகள் மாறுகின்றன. அப்போது அவனுக்கு மனநல வைத்தியரின் ஆலோசனை தேவைப்படுகிறது. இதற்கெல்லாம் மூலகாரணம் ஆசைதான். அதைத்தான் புத்தபிரான் முக்கிய தத்துவமாகக் கூறினார்...

'ஆசையே துன்பத்துக்குக் காரணம்!’

'அதற்காக ஆசைப்படாமல் வாழ முடியுமா? ஆசைதானே எந்தவொரு முன்னேற்றத்துக்கும் அடிப்படை!’ என்ற கேள்வி எழலாம்.

தாராளமாக ஆசைப்படுங்கள்; உணவு, உடை, இருப்பிடம் ஆகியன வாழ்வின் ஆதாரங்கள். அவை குறித்து ஆசைப்படுங்கள். அதற்காக உழையுங்கள். தேவையைத் தாண்டி மனிதன் ஆசைப்படுவது வசதியும் ஆடம்பரமும். அவற்றை அடைய முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால், அதில் தோற்க நேரிடுகையில், வாழ்க்கையில் நிம்மதி குறைகிறது.

'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று சான்றோர் கூறுவர். அதன்படி 'திருப்தி’ என்ற குணத்தை வளர்த்துக் கொண் டால் ஆசைகள் கட்டுப்படும்; அப்போது அடைய முயல்வதை அடைய முடியும்; அதனால் திருப்தியும் நிம்மதியும் ஏற்படும். சரி... திருப்தி என்ற குணத்தை எப்படி வளர்த்துக்கொள்வது?

(விருட்சம் வளரும்)

'பிள்ளையார் சொன்ன கணக்கு!’

சுந்தர் பத்தாம் வகுப்பு மாணவன். நன்கு படித்து, நிறைய மார்க் வாங்கவேண்டும், முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்பது அவனது ஆசை. அவனது குடும்பம் தெய்வ பக்தியும் நம்பிக்கையும் கொண்ட குடும்பம்.

தேர்வுக்குப் பத்து நாட்களுக்கு முன்பு அவன் தாத்தா, ''அடேய் சுந்தர்! ஸ்கூலுக்குப் போகும் வழியில், தெருக்கோடியில் இருக்கும் பிள்ளையாரை பிரதட்சிணம் செய்து வழிபட்டுவிட்டுப் போ. அவர் அருளால், வகுப்பில் நீ முதல் ஆளாக வருவாய்'' என்றார். எப்படியாவது படிப்பில் முதலிடத்துக்கு வரவேண்டும்; அதற்குப் பிள்ளையாரும் உதவினால் நல்லதுதானே என்று சுந்தரும் அதற்கு ஒப்புக் கொண்டான். அன்று முதல் பிள்ளையாரைச் சுற்றி வந்து வழிபட ஆரம்பித்தான்.

அவனது நம்பிக்கை தீவிரமாயிற்று. ஒன்றுக்குப் பத்து முறை பிள்ளையாரை வலம் வந்தான். அதற்காகச் சில மணி நேரம் முன்பே வீட்டிலிருந்து புறப்படுவதை வழக்கமாக்கிக்கொண்டான். பரீட்சை வந்தது. நன்றாகவே எழுதினான். ரிசல்ட்டும் வந்தது. ஆனால், ஏனோ அவன் முதல் ரேங்க்கில் பாஸாகவில்லை.

இதனால், பிள்ளையார்மீது கோபம் கொண்டான். தான் வழக்கமாக வழிபடும் கோயிலுக்குச் சென்று, ''என்ன பிள்ளையாரப்பா! உன்னை நம்பி தினமும் பக்தியோடு சுற்றிக் கும்பிட்டேனே! அதற்கு நீ தந்த பலன் இதுதானா? நான் அதிக மதிப்பெண் எடுத்து பரீட்சையில் முதல் ரேங்க்கில் பாஸாகவில்லையே! உன்னைச் சுற்றி வந்து கும்பிட்ட நேரத்தில் பரீட்சைக்குப் படித்திருந்தால், நல்ல மார்க் கிடைத்திருக்கும்; விரும்பியபடி முதல் ரேங்க்கில் பாஸாகியிருப்பேன். என்னை ஏமாற்றிவிட்டாயே... ஏன்?'' என்று ஆவேசமாகக் கேட்டான்.

உடனே விநாயகர் தோன்றி, ''குழந்தாய்! உனக்கு ஒன்று நினைவிருக்கிறதா? முதல் நாள் நீ பரீட்சைக்குப் போகும்போது, வேகமாக ஒரு தண்ணீர் லாரி உன்மேல் இடிப்பதுபோல வந்தது அல்லவா?'' எனக் கேட்டார்.

''ஆமாம், வந்தது. நல்ல காலம்... அப்போது அங்கு நின்றிருந்த பெரியவர் ஒருவர் என் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினார். அதற்கென்ன?'' என்று கேட்டான் சுந்தர்.

உடனே விநாயகர், ''அந்தப் பெரியவர் நான்தானப்பா! நீ என்னைச் சுற்றி வந்ததால் உண்டான புண்ணிய பலனை உனக்குக் கொடுத்து, உன் உயிரைக் காப்பாற்றினேன். உனக்குப் பரீட்சை முக்கியமாக இருந்தது. எனக்கு உன் உயிர் முக்கியமாகத் தெரிந்தது. உன் புண்ணிய பலனால் உயிர் பிழைத்தாய். ஆக, நீ விரும்பியது போன்று அந்தப் பலனானது உனது பரீட்சைக்குப் பலன் தரவில்லை. போகட்டும், நீ எப்போதும் போல் கவனமாகப் படி; நல்ல மதிப்பெண் கிடைக்கும். தொடர்ந்து ஆலய வழிபாடு செய். அதனால் புண்ணியம் சேரும். உன் முயற்சிகள் கைகூடும். ஆனால், உன் பிரார்த்தனைக்கான பலனை எப்போது, எப்படி உனக்குத் தருவது என்பதை நான் முடிவு செய்துகொள்கிறேன்'' என்று கூறி மறைந்தார்.

ஆம்... இறைவன் நாம் வேண்டுவதைக் கொடுப்பதில்லை; நமக்கு வேண்டியதைக் கொடுக்கிறார்!