Published:Updated:

நாயனாரின் அர்ச்சனைப் பூக்'கல்'!

நாயனாரின் அர்ச்சனைப் பூக்'கல்'!

நாயனாரின் அர்ச்சனைப் பூக்'கல்'!

நாயனாரின் அர்ச்சனைப் பூக்'கல்'!

Published:Updated:
நாயனாரின் அர்ச்சனைப் பூக்'கல்'!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டவுளைப் பூக்களால் அர்ச்சிப்போம்; தென்னாடுடைய சிவனாரை வில்வத்தாலும், திருமாலை துளசியாலும் அர்ச்சித்து வணங்குவோம். ஆனால், சிவனாரை ஒருவர் கல்லெறிந்து வழிபட்டார் என்றால், நம்புவீர்களா?! அவருடைய திருநாமம்- சாக்கியர். அப்படிக் கல்லெறிந்து வழிபட்டுக் கடவுளின் பேரருளைப் பெற்றதால், அவர் சாக்கிய நாயனார் எனப் போற்றப்பட்டார்.

தொண்டைவள நாட்டில், திருச்சங்கமங்கை எனும் அழகிய கிராமத்தில் பிறந்த சாக்கியர், பௌத்த மதத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். காஞ்சியம்பதியை ஒட்டியுள்ள இந்தக் கிராமத்திலிருந்து அடிக்கடி காஞ்சி மாநகருக்குச் சென்று, பௌத்தத்தில் ஈடுபாடு காட்டிவந்தார். ஆனாலும், அவரது மனத்தில் அமைதியில்லை; சிந்தையில் சர்வேஸ்வரனே நிலைத்திருந்தார்; பௌத்தத்துக்கு உரிய ஆடைகளை உடலால் உடுத்தியிருந்தாலும், உள்ளத்தால் சிவனாரையே வரித்திருந்தார்.

ஒருநாள்... சிவலிங்கம் ஒன்றை தரிசித்தவருக்கு, உள்ளம் சிலிர்த்தது. அன்பின் மிகுதியால் சிவத் திருமேனியை அர்ச்சிக்க எண்ணினார். ஆனால், அர்ச்சனைப் பொருட் கள் எதுவும் கிடைக்காமல் போகவே, கற்களை எடுத்து லிங்கத் திருமேனியின் மீது எறிந்தார் சாக்கியர். உடனே அவரது மனதுள் இனம் புரியாத மகிழ்ச்சி. பிறகு, 'இது இறைவனின் கட்டளை’ என்பதாக உணர்ந்து, தினமும் லிங்கத் திருமேனி மீது கல்லெறிவதை வழக்கமாகக் கொண்டார்.  

தினமும் நீராடிவிட்டு, லிங்கத் திருமேனி மீது கல் எறிந்து வழிபட்டுவிட்டே சாப்பிடுவார். ஒருநாள், சாப்பிடுவதற்காக அமர்ந்த சாக்கியர், பதறியடித்துக்கொண்டு எழுந்தார். 'இன்றைக்குக் கடவுளின் மீது கல் வீசவே இல்லையே!’ என்று வருத்தமானார். 'நான் இப்படி ஈசனை மறப்பதற்கு, ஈசனின் சூழ்ச்சியே காரணம்’ என சிவனார்மீது கோபம் கொண்டார். விறுவிறுவென சிவலிங்கத்தை நோக்கிச் சென்ற சாக்கியர் கண்கள் சிவக்க, முகமெல்லாம் ஆக்ரோஷம் பொங்க, சிவலிங்கத் திருமேனி மீது, கல்லெறிய முற்பட்டார். அப்போது, சாக்கியருக்குத் திருக்காட்சி தந்த சிவனார், அவரை ஆட்கொண்டருளினார். அன்று முதல் 'சாக்கிய நாயனார்’ என்றும், 'கல்லெறிந்த நாயனார்’ என்றும் அவர் போற்றப்பட்டார்.

நாயனாரின் அர்ச்சனைப் பூக்'கல்'!

சாக்கியநாயனார் உள்ளம் உருக வழிபட்ட அந்தச் சிவலிங்கத் திருமேனியை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் இன்றைக்கும் தரிசிக்கலாம். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் புதிய ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது கோனேரிகுப்பம். இந்தப் பகுதியில், அப்பாராவ் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கோயில். கொங்கண முனிவரும் இந்தக் கோயில் இறைவனை வழிபட்டுள்ளதாக சிலாகிக்கிறார்கள் சிவபக்தர்கள்!

இரண்டாம் பரமேஸ்வர மன்னனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு ஏராளமான மன்னர்கள், திருப்பணி செய்துள்ளனர். ஆலயத்தில், மேற்குப் பார்த்தபடியும் கிழக்குப் பார்த்த நிலையிலுமாக இரண்டு லிங்கத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடுவில், ஸ்ரீநடராஜர் மற்றும் ஸ்ரீசிவகாமி அம்மையின் திருப்பாதங்கள் அமைந்துள்ளன. அதையடுத்து ஸ்ரீவீரட்டானேஸ்வரர்; இவரது சந்நிதிக்கு அருகிலேயே, சாக்கிய நாயனாருக்கும் சந்நிதி உள்ளது. கையில் பெரிய கல்லுடன் காட்சி தருகிறார் சாக்கிய நாயனார்.

சாக்கிய நாயனாரின் அவதாரத் திருத்தலம் இது. மார்கழி மாத பூராட நட்சத்திர நாள்தான் அவருடைய திருநட்சத்திர தினம் (4.1.11- செவ்வாய்க்கிழமை). எனவே, இந்த நாளில் இங்கு சிறப்பு பூஜைகள், சொற்பொழிவு என யாவும் விமரிசையாக நடைபெறுகின்றன. இந்த நாளில் இங்கு வந்து ஸ்ரீவீரட்டானேஸ்வரர் ஸ்ரீசாக்கிய நாயனாரையும் வணங்குங்கள்; வளம் பெறுங்கள்!  

- அ.ராமநாதன்
படங்கள்: பு.நவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism