மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த உதவிகளை மற்றவருக்குச் செய்து, இறையருளைப் பெற முயற்சிக்க வேண்டும். அப்படி எத்தனையோபேர் தங்கள் வாழ்க்கையையே மனித சேவைக்கும், மகேசனின் சேவைக்கும் அர்ப்பணித்து இருக்கின்றனர்.

இறைத் தொண்டாலும், அடியார்களுக்கு செய்த தொண்டாலும், ஆல யங்களுக்குச் சென்று அங்கு செய்த சேவைகளாலும் இறைவனை அடைந்த எத்தனையோ அடியார்களை நாம் அறிவோம். அதுபோலவே, இறைவன்மீது கொண்ட அன்பை, பக்தியை தனது ஓவியத் திறமையால் வண்ணமயமான தொண்டா கவே செய்து வருகிறார் ஓவியர் இராமலிங்கம்.

சென்னை, கவின்கலைக் கல்லூரியில் 1980-ம் ஆண்டு மாணவராகச் சேர்ந்ததில் இருந்து இன்றுவரை, கிட்டத் தட்ட 33 வருடங்களை இறை ஓவியங்கள் வரைவதற்காகவே செலவிட்டு உள்ளார் இராம லிங்கம். அவர் வீடு முழுவதும் அவர் வரைந்துள்ள ஆன்மிக ஓவியங்கள் அத்தனை ரம்மிய மாய்க் காட்சி அளிக்கின்றன. ஒவ்வொரு ஓவியத்திலும் அத்தனை கலை நுணுக்கங்கள்!

அவற்றைப் பார்க்கப் பார்க்க, கோயில்களுக்குச் சென்று இறைவனை நின்று நிதானமாகத் தரிசித்துவிட்டு வந்த உணர்வே எழுகிறது. குறிப்பாக, சிதம்பரம் கோயிலின் வெளிப்புறத் தோற்றமும், நடராஜர் ஓவியமும், ஏதோ நாமே சிதம்பரம் கோயிலுக்குச் சென்று நடராஜரை நேரில் தரிசித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

''எனக்குச் சொந்த ஊர், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சிதான். எங்களுடையது விவசாயக் குடும்பம். நான்தான் எங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி. நான் ஓவியத் துறையைத் தேர்ந்தெடுத்தது இறைவனின் கருணைதான். பள்ளிக்கூட நாள்களில் நான் நன்றாக ஓவியம் வரைவதைப் பார்த்த என் தலைமை ஆசிரியர்தான் என்னை உற்சாகப்படுத்தி, நான் ஓவியக் கல்லூரியில் சேரத் தூண்டுகோலாக இருந்தார்.

1977-ல் சென்னை, அரசு கவின்கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தேன். ஆனால், அதை நிராகரித்துவிட்டார்கள். எப்படியாவது அந்தக் கல்லூரியில்தான் சேர வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடும், ஓவியக் கலை மீது எனக்கு இருந்த ஈர்ப்பாலும், மீண்டும் 1980-ம் ஆண்டு விண்ணப்பித்தேன். இறையருளால் அந்த முறை கல்லூரியில் இடம் கிடைத்தது. அது முதல் என்னுடைய பேச்சு, மூச்சு எல்லாமே ஓவியம், ஓவியம், ஓவியம்தான்!

படிப்பு முடிந்ததும், அதே கல்லூரியில் ஓவிய ஆசிரியராக வேலை கிடைத்தது. 1985-ம் ஆண்டு டெக்ஸ்டைல் துறையிலும், அதன் பின்னர் ஓவியத் துறையிலும் பணியாற்றி னேன். கும்பகோணத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றியபோது, அங்கே உள்ள கிராமப் புறக் கோயில்களின் அமைப்பும், ஸ்வாமி விக்கிரகங்களின் சிற்ப நுட்பமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அதை அப்படியே ஓவியமாக வரைய வேண்டும் என்று ஆசை எழுந்தது. ஆனால், அதை அப்போது என்னால் செயல்படுத்த முடியவில்லை. மீண்டும் சென்னைக்கே பணி மாற்றலாகி வந்த பின்னர்தான், என்னுள் இருந்த ஆன்மிகம் சார்ந்த ஓவிய ஆசை மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது!'' என்று சொல்லும் இராமலிங்கம், தான் வரையும் ஆன்மிக ஓவியங்களை, விரும்பிக் கேட்கும் ஆன்மிக அன்பர்களுக்கு நூற்றுக்கணக்கில் இலவசமாகவே கொடுத்து வந்திருக்கிறாராம். இவரிடம் தற்போது இருப்பது வெறும் ஐம்பதே படங்கள்தான்.

திறமை வாய்ந்த ஓவியர்கள் பலருண்டு. ஆனால், 'மகேசனைப் பாடும் வாயால் மனிதர்களைப் பாட மாட்டேன்’ என்று வைராக்கியத்துடன் வாழ்ந்த ஒருசில இறை அடியார்களைப் போன்று, இராமலிங்கம் வரையும் ஒவ்வொரு ஓவியமும் இறைவனையும், இறை நினைப்பையும் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன.

தான் வரைந்த படங்களைக் கொண்டு புதுவையிலும் சென்னையிலுமாக இதுவரை ஐந்துமுறை ஓவியக் கண்காட்சியும் நடத்தியிருக் கிறார் இராமலிங்கம். ''விற்பனை எனது நோக்கமல்ல; எனது ஓவியம் ஒன்றை ஒருவர் வாங்கிச் செல்கிறார் என்றால், எனது கடவுள் புரிதலை அவரோடு பகிர்ந்துகொண்ட திருப்தி கிடைக்கும். அதுபோதும் எனக்கு'' என்கிறார்.

ஓவியம் வரைவது மட்டுமல்லாது, தனது வாழ்நாள் முழுவதையும் இறைப்பணியிலேயே ஈடுபடுத்திக்கொண்டு, பயனுற வாழ விரும்பு கிறார் இவர். தீவிர ஐயப்ப பக்தரான இவர், இதுவரை தொடர்ந்து 14 வருடங்கள் மாலை அணிந்து சபரிமலைக்குச் சென்றுள்ளார். ஐயப்பனின் அருளாடல்கள் இவரது வாழ்வில் நிறையவே நடந்துள்ளதாம்.

'இந்த வாழ்க்கையே சுவாமி ஐயப்பன் தந்ததுதான்’ என்று நெகிழ்ச்சியோடு சொல்லும் இராமலிங்கத்தின் வீட்டில் இவர் வரைந்த ஐயப்பனின் ஓவியத்தை வைத்துதான் வழிபாடு நடக்கிறது. இவர் வீட்டில் மட்டுமல்ல; இவர் வசித்து வரும் திருமுல்லைவாயில் பகுதியில் வாழும் பலரும் இவர் வரைந்த ஓவியத்தையே தங்களின் பூஜையறையில் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

ஷீரடி சாயிநாதரின் சத்சரிதத்தைப் படித்ததில் இருந்து, ஸ்ரீசாயியின் நெறிமுறைகளைப் பின்பற்றி வருவதாகச் சொல்கிறார். ''சாயி அழைக்காமல் யாரும் ஷீரடிக்குச் செல்ல முடி யாது. உண்மையான அன்பும், அவரிடத்திலே பாசமும் கொண்டவர்களைத்தான் சாயி ஷீரடிக்கு அழைப்பார். எனக்கும் அந்த பாக்கி யம் கிட்டியது. ஷீரடி சென்றபோதுதான் என் பிறவிப் பயனையே உணர்ந்தேன்'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார் இவர்.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்மிகத் தலங்களுக்கும் சென்றுள்ள இவர், தனக்குப் பிடித்த இடமாகச் சொல்லுவது காசியை.

''காசியில் இருப்பவர்களுக்குச் சித்தமெல்லாம் சிவமயம்தான்! அதுபோலவே, எனது ஓவியங்களும் ஆன்மிகத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில், கங்கை நீரில்தான் வண்ணங் களைக் குழைத்துப் படங்களை வரைகிறேன். என் படங்கள் அனைத்துமே புனிதத்தை பிரதிபலிப்பதாகவே இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த கங்கை நீர் ஓவியம்.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் சக்தியை, இறைவன் தந்த இந்த ஓவியக் கலையின் துணை கொண்டு என்னால் இயன்ற அளவு உலகுக்கு வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது, உண்மையிலேயே நான் செய்த மிகப் பெரிய பாக்கியம்தான். இனி இருக்கும் என் வாழ்நாள் முழுவதையும் இதேபோல் இறைவனுக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன். காவி வேட்டி உடுத்தி, காசியில் இறைப்பணி செய்து அங்கேயே என் இறுதி நாள்களைக் கழிக்க விரும்புகிறேன்'' என்று உறுதியாகச் சொல்லும் ஓவியர் இராமலிங்கம், ஒளியாய் விளங்கும் இறைவனை வண்ணமாய் நமக்குக் காட்டி, இப்படியும் இறைப்பணி செய்யலாம் என்று நமக்கெல்லாம் உணர்த்துகிறார்.

படங்கள்: க.பாலாஜி