விருகம்பாக்கம் பெருமாளுக்கு விமானத்தில் வரும் ஸ்ரீஆண்டாள் மாலை!

'சென்னையில், விருட்சம்பாக்கம் எங்கே இருக்கிறது என்று தெரியுமா? குழம்பவே குழம்பாதீர்கள்! விருகம்பாக்கம்தான் ஒருகாலத்தில் விருட்சம்பாக்கம் என அழைக்கப் பட்டதாம். இங்கே, காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது, ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள் கோயில். சுமார் 700 வருடப் பழைமை வாய்ந்த இக்கோயிலில் கருடஸேவை...’

- ஆர்வத்துடன் ஃபோனில் தகவலைப் பகிர்ந்து கொண்ட விருகம்பாக்கம் வாசகர் கே. மாணிக்கம், இந்தக் கோயிலையும் திருவிழா குறித்த விஷயங்களையும் சக்திவிகடனில் வெளியிடலாமே’ என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார். அதை ஏற்று நாமும் புறப்பட் டோம், ஸ்ரீசுந்தர வரதராஜரைத் தரிசிக்க!

புராதனமான இந்தக் கோயில், ஒருகட்டத்தில் முழுவதுமாகச் சிதைந்துவிட, அந்தப் பகுதி மக்கள் பெருமாளுக்குக் குடிசை ஒன்றை எழுப்பி, பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார்கள். பிறகு, ஆராவமுத ஐயங்கார் போன்ற பலரின் கூட்டுமுயற்சியால் கட்டடங்கள் எழுப்பப்பட்டு, சந்நிதிகள்

அமைக்கப்பட்டு, அழகிய ஆலயமாக உருவெடுத்து, கடந்த 2003-ம் வருடம் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவியுடன் அழகு ததும்பக் காட்சி தருகிறார் சுந்தர வரதராஜ பெருமாள். இவரின் சந்நிதியில் வந்து நின்றாலே, நம் சங்கடங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்!

ஸ்ரீஅனுமன், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீஅழகிய மணவாளர், திருமங்கை ஆழ்வார் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. பெருமாளுக்கு எதிரில் ஸ்ரீகருடாழ்வார் சந்நிதி கொண்டிருக்க, பக்கத்தில் ஸ்ரீஆண்டாள் சந்நிதி கொண்டு, பெருமாளைச் சேவித்தபடி காட்சி தருகிறார்.

வருடந்தோறும் வைகாசி மாத விசாகத்தின்போது பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் நடை பெறுகிறது, பிரம்மோத்ஸவ விழா. இந்த வருடம், வருகிற மே மாதம் 11-ம் தேதி துவங்கி, ஏழு நாள் விழாவாகச் சிறப்புற நடைபெறுகிறது.

இதையொட்டி, பிரம்மோத்ஸவ விழாவில் பெருமாளுக்குச் சிறப்பு வழிபாடுகள் தினமும் நடை பெறுகின்றன. இந்திர விமானம், சேஷ வாகனம், தோளுக்கினியான், சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, அனுமன் வாகனம், கருட வாகனம் ஆகிய வாகனங்களில் தினமும் பெருமாள் திருவீதியுலா வந்து, சேவைசாதிப்பதைக் காணக் கண் கோடி வேண்டும்.

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை நடைபெறும் அதேநாளில், இங்கேயும் கருடசேவை நடைபெறும் என்பது சிறப்பு. அதற்கு முதல் நாள், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னார் கோயிலில் இருந்து, ஸ்ரீஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்டு, மறுநாள் பெருமாளுக்கு அலங்கரிக்கப்படும் எனப் பூரிப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள். அருகில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து ஸ்ரீஆண்டாள் மாலை, மேளதாளத்துடன் கொண்டு வரப் படும் அழகே அழகு!

- ரெ.சு.வெங்கடேஷ்

படங்கள்: எஸ்.பி.ஜெர்ரி ரெனால்ட் விமல்