Published:Updated:

டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலில் திரைக்கு வராமலே பிரபலமான முருகன் பாடல்கள்!

டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலில் திரைக்கு வராமலே பிரபலமான முருகன் பாடல்கள்!
டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலில் திரைக்கு வராமலே பிரபலமான முருகன் பாடல்கள்!

டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலில் திரைக்கு வராமலே பிரபலமான முருகன் பாடல்கள்!

மிழ் சினிமாவுக்கு அப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக புது வெளிச்சம் பாயத்தொடங்கிய நேரம். நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பக்தி ரசத்தால் தமிழ்சினிமா ததும்பிக் கிடந்தது.

கிட்டப்பா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜ பாகவதர் என கர்னாடக இசையும் தமிழிசையுமாக கலந்துகட்டி தமிழகத்துப் பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். 


ஊர் பெரியவர், ஊர் மிராசுதாரர் என ஒரு சிலர் வீடுகளில்தான் வானொலிப் பெட்டி இருக்கும். இல்லாவிட்டால், ஊர்த்திருவிழா, கல்யாண வீடுகள், டூரிங் டாக்கீஸ்கள் என எங்கோ தொலைதூரத்தில் குழாய் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்கள் இவைதான் அன்றைய மனிதர்களின் மன இறுக்கத்தைப்போக்க வந்த மகிழ்வான நிகழ்வுகள். 

இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில்தான் வராது வந்த மாமணி போல் வந்து சேர்ந்தார் டி.எம்.எஸ் என்கிற டி.எம்.சௌந்தரராஜன். சிம்மகுரலெடுத்து அவர் பாடிய பாடல்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி எனத் திரையுலகின் இரு ஆளுமைகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ்க்கொடி வீசிப்பறந்தன. இவர் பாடிய சினிமாப் பாடல்கள் பலவிதங்களில் ஹிட் அடித்தவை. ஆனால், திரைக்கு வராமலே இவர் பாடி தமிழர்களின் வாழ்வில் கலந்த 'முருகன் பக்திப்பாடல்கள்' சாகா வரம்பெற்றவை. முருகனின் ஆறுபடை வீடுகளிலும் இன்றும் இரவு பகல் பாராது எந்நேரமும் ஒலிப்பவை. இத்தனைச் சிறப்புமிக்க தனிப்பாடல்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக... 

'உள்ளம் உருகுதைய்யா' என்னும் இந்தப் பாடலைக்  கேட்கும்போது, கேட்பவரின் கவலைகள் யாவும் காற்றில் பறக்கும்பஞ்சாக பறந்துபோகும். இறைவன் மேல் இந்த அளவு கசிந்துருகி எவரும் இனிப் பாட முடியுமா என்பதே பெரும் கேள்விக்குறிதான். இந்த லிங்க்கில்

'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' எனக் கேட்கும்போதே நம் மனம் திருச்செந்தூர் கடற்கரையில் கால் நனைக்கும். 

'முருகா..., முருகா, அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா' பாடலைக் கேட்கும்போதே முற்றிலும் நாம் கரைந்து போய்விடுவோம். எளிய இசைக்கருவிகளுடன் கனிவான டி.எம்.எஸ்ஸின் குரல் கல்நெஞ்சையே கரைய வைக்கும். தமிழ்க்கடவுள் முருகன் கசிந்துருக மாட்டாரா என்ன?

`சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா... சுவையான அமுதே செந்தமிழாலே...’ இந்தப் பாடலும் கேட்கும்போதே மனம் லயித்துப்போகும். அத்தனை அருமையான பாடல்.  தமிழ் வார்த்தைகளும், அவரது உச்சரிப்பும் நம் மனதை மயக்குபவை.

'அன்று கேட்பவன் அரசன் மறந்தால், நின்று கேட்பவன் இறைவன்' அதிகார சக்திகளால், அவதூறு மனிதர்களால் சாதாரண மனிதர்களுக்கான நீதி மறுக்கப்படும்போது பெருத்த ஆறுதலாக இந்தப் பாடல் வரிகள் அமைந்திருக்கும். மனக் கவலைகளெல்லாம் ஈரத்துண்டைப் பிழிந்து காயவைத்ததுபோல் நம் மனத்தை இந்தப் பாடல் ஆக்கிவிடும். 


திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திருவரங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னிடமிருந்த பாடலைக் காண்பித்து, 'நன்றாக இருக்கிறதா? எனப் பார்த்து சொல்லுங்கள்' என்கிறார். பாடலைப் படித்துப் பார்த்த டி.எம்.எஸ்ஸின் மனம் மலர்கிறது. அவருக்கு மிகவும் பிடித்த முருகப்பெருமானைப் பற்றியப் பாடல். விடுவாரா? அந்த இளைஞருடைய பாடலைத் தானே பாடினார். பாடலும் புகழ்பெற்றது. எழுதிய கவிஞரும் புகழ்பெற்றார் அவர்தான் கவிஞர் வாலி.

 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற பாடல்தான் அது.


 

அடுத்த கட்டுரைக்கு