Published:Updated:

கல்வெட்டுகள் மூலம் வரலாறு அறியலாம்! - கங்கைகொண்ட சோழபுரத்தில் பயிற்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கல்வெட்டுகள் மூலம் வரலாறு அறியலாம்! - கங்கைகொண்ட சோழபுரத்தில் பயிற்சி
கல்வெட்டுகள் மூலம் வரலாறு அறியலாம்! - கங்கைகொண்ட சோழபுரத்தில் பயிற்சி

கல்வெட்டுகள் மூலம் வரலாறு அறியலாம்! - கங்கைகொண்ட சோழபுரத்தில் பயிற்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மிழர்களின் பெருமைமிக்க வரலாற்றுக்குச் சான்றாக இருப்பவை, கல்வெட்டுகள். கோயில்கள், மலைகள் என எங்கெல்லாம் தமிழ் மன்னர்கள் காலடி பதித்தார்களோ, அங்கெல்லாம் கல்வெட்டுகளை வெட்டிப் பொதித்து வைத்திருக்கிறார்கள். இதுவரை பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை, படிக்கப்பட்டு அச்சாக்கமும் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் படிக்கப்படவில்லை. இன்னும் பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கவேபடவில்லை. 

தமிழ் சமூகத்தின் அடையாளங்களாக உலகெங்கும் இருக்கும் கல்வெட்டுகளைப் பாதுக்காக்கவேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கின்றது. 

பெரும்பாலான கல்வெட்டுகள் வட்டெழுத்து, பிராமி, பழங்காலத் தமிழ் எழுத்துகளில் இருக்கின்றன. பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே படிக்க முடியும். 

வரலாற்று ஆர்வம் உள்ள அனைவரும் கல்வெட்டுகளைப் படித்து அறிந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தில், தமிழகத் தொல்லியல் கழகம் என்கிற அமைப்பு கல்வெட்டுகளைப் படிப்பதற்ககான சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறது. இந்தப் பயிற்சி, கங்கை கொண்ட சோழபுரத்தில் ஜூலை 18 முதல் 21 வரை நடைபெற உள்ளது. பயிற்சியை அடுத்து ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் கல்வெட்டு பற்றிய கருத்தரங்கம் நடைபெறுகிறது. 

 "தமிழகத் தொல்லியல் கழகம் என்பது வரலாற்று அறிஞர்கள், ஓய்வுபெற்ற பேராசியர்கள், முதுநிலை அறிஞர்கள் உள்ளடக்கிய ஓர் அமைப்பு. தொல்லியல் கழகத்தால் ஆண்டுதோறும் இதுபோன்ற கருத்தரங்கங்கள் நடத்தப்படுகிறன. இந்த வருடம் நடத்தப்படுவது 28 ம் ஆண்டு நிகழ்வு . ஆண்டுதோறும் நடைபெறும் கருத்தரங்கத்தில் புதிதாகக் கண்டெடுக்கபட்ட கல்வெட்டுகள், இதுவரை வெளியிடப்படாத கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் நடத்தப்படும் 'ஆவணம்' என்கிற பத்திரிக்கையில் வெளியிடப்படும். 

நம் வரலாறையும், பண்பாட்டையும் அறிவதற்கான ஆதாரமாகக் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளின் தேவையையும் சிறப்பையும் நம் மக்கள் இன்னும் உணரவில்லை. கல்வெட்டுகளில் கிறுக்குவது, உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பாக அரசும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. இளம் தலைமுறைக்குக் கல்வெட்டுக் குறித்த ஆர்வத்தை உருவாக்கவே இந்தப் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். 

கல்வெட்டு அறிஞர்கள் முனைவர் சு. இராசகோபால், பேராசிரியர் எ.சுப்பராயலு, பேராசிரியர் இல.தியாகராசன், முனைவர் சொ.சாந்தலிங்கம். பேராசிரியர் சு. இராசவேலு ஆகியோர் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். ஆர்வமுள்ள மாணவர்கள், ஆர்வலர்கள், ஆசிரியர்கள் இதில் பங்கேற்கலாம்" என்கிறார், இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பொறியாளர் கோமகன். 

பயிற்சி நடைபெறும் இடம் கங்கைகொண்ட சோழபுரம்

நாள் : ஜூலை 18 முதல் 21 வரை (காலை 10.00 முதல் 5.00 வரை)

உணவு இடைவேளை :  பிற்பகல் 1.00 - 2.00

ஆர்வலர்களுக்கு  வயது வரம்பு இல்லை

நான்கு  நாள்களுக்கு கட்டணம் :  ரூ.600  ( உணவு, தங்குமிடம், எழுதுபொருள்கள்)

உள்ளூர் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குக் கட்டணம் கிடையாது

தொடர்புக்கு : முனைவர் சு. இராசவேலு  :  9444261503  

பொறியாளர் கோமகன் : 9443949692

பதிவு செய்யவேண்டிய கடைசி நாள் : ஜூலை 12

விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொண்டு அரிதான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தான் கற்றுக்கொள்வதோடு, விடுமுறை நாள்களில் ஓய்வு நேரங்களில் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம். நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் வருங்கால சந்ததியினரை அறிவுடையவர்களாக உருவாக்கலாம். கல்வெட்டுகள் நம் பாரம்பர்யத்தின் சான்றுகள் என்பதை நினைவில்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு