விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
தொடர்கள்
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##
கி
ரகங்களின் இயல்பை வைத்து மூன்று வகையாகப் பிரிப்பார்கள். சூரியனும் சந்திரனும் பிரகாச கிரகங்கள்; ஒளியை உமிழும் தகுதி கொண்டவை. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை தாரா கிரகங்கள்; அதாவது, நட்சத்திர வகையானவை. ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள்; நிழல் கிரகங்கள் என்கிறது ஜோதிடம். நிழலின் ஆரம்பம் ராகு. அதன் எல்லை கேது!

சந்திரனின் சரம் அதாவது பாதம், இந்த நிழல் கிரகங்களை வரையறுக்கும். கிரகண காலத்தில் ராகு தென்படுவான் என்கிறது தர்மசாஸ்திரம் (ராகு க்ரஸ்தே திவாகரே). மேகத்தில் மறைந்த சூரியன், கிழக்கு நோக்கி நகரும் போது, மேகமானது மேற்கு நோக்கிச் செல்வதுபோல் தோன்றும் (அது ராகு இடம் வருவதுபோல் தெரிகிறது). அந்த நிழல் அதாவது இருள் கிரகம், ஒருமுறை தனது சுற்றினை முடித்துக் கொள்ள 18 வருடங்கள் எடுத்துக் கொள்ளும். கேதுவின் பங்கு, பலம் சொல்லும் ஜோதிடத்தில் தென்படும். செவ்வாய்க்கு இணையான பலனைச் சொல்லலாம் என்றும் பரிந்துரைக்கிறது. (குஜவத்கேது:). பிற்பாடு, உச்சம், ஸ்வஷேத்திரம் முதலான தகுதிகளை வழங்கி, மற்ற கிரகங்களின் தரத்துக்கு உயர்த்தியுள்ளனர்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ஒருவன், இரண்டு கூறாகப் பிரிந்த பிறகு, இரண்டு பகுதிக்கும் தனித்தனிப் பெயர் வந்தது என்று ராகு-கேதுவை விவரிக்கிறது புராணம். ராகு மறைக்கும் வேளையில், மறுபகுதியில் கேதுவும் தொடர்ந்து இருக்கும். ராகு மறைக்கிறான் என்பதை தர்மசாஸ்திரம் ஏற்கும். கேது மறைக்கிறான் என்பதை ஏற்காது. பஞ்சாங்கமானது, 'இது ராகு க்ரஸ்தம், அது கேது க்ரஸ்தம்’ என்று குறிப்பிடும். வானவியல் சாஸ்திரம், கேது கணங்கள் என்று சொல்லும். உலகில் ஏற்படும் உபாதைகளுக்குக் காரணமானவற்றை, தூமகேது என்பார்கள் (தூமகேதுரி வோத்தித:). பலன் சொல்லும் கேது குறித்து வானசாஸ்திரம் கவலைப்படாது.  

குரூர கிரகமான கேது, சந்திரனை மறைக்க முற்படுகிறான். ஆனால் புதனின் இடையூறு அதைத் தடுத்துவிட்டது எனும் தகவல், முத்ராராஷச நாடகத்தில் உண்டு (க்ரூரகிரஹ:ஸகேது:...). புதனின் இடையூறு, கிரகணம் நிகழாமல் தடுத்துவிடும் என்பதை விளக்குகிற தகவல் அது. அந்தக் கேதுவை நாம் நினைக்கிற நவக் கிரகங்களில் வழிபடுகிற கேதுவாக சித்திரிக்காமல், உலகை துயரத்தில் ஆழ்த்தும் ராகு என்று அதற்கு விரிவுரை தந்தவர்களும் உண்டு. இரண்டு கூறான அசுரன், தலை பாம்பாகவும் உடல் மனிதனாகவுமாக, உடல் பாம்பாக வும் தலை மனிதனாகவுமாக இரண்டு கூறாகச் சித்திரித்து நமக்குப் புரியவைத்துள்ளனர். ராகு சாரத்தை வரையறுக்கும்போது, கேது சாரமும் தானாகவே கிடைத்துவிடும். எனவே இரண்டுக்கும் உள்ள தொடர்பு புலனாகிறது, அல்லவா?!  

ஒருமுறை தன் சுற்றினை முடிப்பதற்கு, ராகுவுக்கு 18 வருடங்கள் வேண்டும் என்பர். ஆனால் கேது வுக்கு தனியே சொல்வது இல்லை. ராகு சார பலன் சொல்பவர்கள், கேது சார பலனைச் சொல்வதில் இன்னும் முனைப்புக் காட்டவில்லை. ஆனால் தசா வருடம் ராகுவுக்கு 18 என்றவர்கள், கேதுவுக்கு ஏழு என்றனர். ராகுவின் தொடர்ச் சியை மறந்து, செவ்வாய்க்குச் சமமானவன் என்ற விளக்கத்துக்கு முன்னுரிமை அளித்து, அதன் தசா காலத்தை 7 வருடம் என்றனர்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சூரியனை 'ரவி’: என்று குறிப் பிட்டதால் 'கடபயாதி’ முறைப் படி ர-2 வி-4 இரண்டையும் கூட்டினால், ஆறு என தசா காலம் சொல்லப்பட்டது. முதலில், சந்திரனை அறிமுகம் செய்யும் வேளையில், 'சசுபிருத்’ எனக் குறிப்பிட்டனர். இரண்டு ஐந்து எண்களைத் தாங்கியிருப்பவன் என்ற பொருளும் அதற்கு உண்டு (ச-5, ச-5, 5 5=10). ஆகவே, சந்திரனுக்கு தசாகாலம் பத்து வருடங் கள் எனக் கணக்கிட்டதாகச் சொல்கிறது ஜோதிடம். அதை ராகுவிலும் கேதுவிலும் நடைமுறைப்படுத்தவில்லை.  'சனிவத்ராகு:’ என்கிற கோட்பாடும் 'குஜவத்கேது’ என்கிற கோட்பாடும் பலன்கள் சொல்ல உதவிபுரிந்தன. பலன் சொல்லும் பகுதி, கேதுவுக்குத் தனியே பலன் சொல்லும் தகவலைத் தருகிறது.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

குலத்தின் உயர்வை அடைய வைப்பவன் கேது என்கிறது தர்ம சாஸ்திரம் (கேது: குலஸ்யோன்னதிம்). 12-ல் இருக்கும் கேதுவை ஞானகாரகனாகச் சித்திரிக் கிறது ஜோதிடம். ஒட்டுமொத்த இழப்பையும் சுட்டிக்காட்டுவது 12-ஆம் வீடு! பொருளாதாரத்துடன் அறியாமையையும் இழக்கச் செய்வ தால் அவன் ஞானகாரகனாக மாறுகிறான். அவன் சூரியனுடன் இணைந்தால், சூரியனால் விளையும் நன்மைகளை முடுக்கி விடுவான்.

உச்ச சூரியனாக இருப்பின், அதில் மங்கிச் செயலிழந்து விடுவதால், உயர்ந்த மனித னாக மாற்றி விடுவான்!

செவ்வாய், சனி ஆகிய பாபகிரகங்களுடன் இணையும் வேளையில், அவர்களின் கெடுதல்களுக்கு ஊக்கம் தருபவன் இவன்! கேதுவின் 7-வது கேந்திரத்தில் எப்போதும் ராகு இருப்பதால், அவனது தாக்கம் இரண்டு மடங்காக இருப்பது உண்டு. கேதுவுடன் குரு இணைந்தால், கேது நல்லவனாக மாறுவான். அப்போது, ஏழில் இருக்கும் ராகு, குருவின் பார்வை பட்டு, கெடுதல் விலகுவதால் குருவின் பலத்தையட்டி தன்னை மாற்றிக் கொண்டு உயர்வுக்கு உதவுவான். கேதுவுடன் சேர்ந்த கிரகம், ராகுவைப் பார்ப்பதும் கேந்திரத்தில் இருப்பதும் தீர்மானம் ஆனதால், கேதுவுக்குப் பலன் சொல்லும்போது நம்மையும் அறியாமல் ராகுவின் பலனும் சேர்ந்துகொள்கிறது.

பன்னிரண்டில் கேது இருக்கும்போது, ராகு 6-ல் இருப்பான். பிணிகள், விபத்து, எதிர்ப்புகள் ஆகிய அனைத்தையும் ராகு சுட்டிக்காட்டுவான். விபரீதமாக இருந்தால், கேது சுட்டிக்காட்டுவான். ஒன்றை ஒதுக்கி, மற்றொன்றுக்குப் பலன் சொல்ல முடியாததால், தனியே சொல்லிப் பழக்கப்பட்டாலும் மற்றதன் பங்கைச் சேர்த்துத் தான் பலன் சொல்வது பொருந்தும். கேதுவுக்குப் பலன் சொல்லும் போது, ராகுவை கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. கேதுவை நல்ல கிரகங்கள் பார்த்தாலும் சேர்ந்தாலும், அது ராகுவின் பலத்தில் மாறுபாட்டை நிகழச் செய்யும். தனிப்பட்ட முறையில் பலன் சொல்லுமிடத்தை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

எட்டில் இருக்கும் கேது 2-ல் இருக்கும் ராகுவை வைத்து வலுப்பெறுகிறான். கேதுவின் 4-வது கேந்திரம், 10-வது கேந்திரம், தான் இருக்குமிடம் ஆகியவை சுபக்கிரகங்களோ அசுபக்கிரகங்களோ இருந்தால், அது ராகுவுக்கும் பொருந்துவதாக மாறிவிடும். ஆகவே, கேதுவை தனியே கவனிக்காமல், ராகுவுடன் சேர்த்து கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

சந்திரனுடன் இணைந்தால் மனத்துடன் இணைந்த பலன் என்றாலும் பிரகாச கிரகத்துடன் இணையும் வேளையில், இருள் அகலுவதும் உண்டு. பூரண பிரகாசம் பெறாத தேய்பிறை சந்திரன் ஆனால், இருள் அதனை விழுங்கி விடும் எனும் கோணத்தில், தேய்பிறை இணைப்பில் கெடுதலும் வளர்பிறையின் இணைப்பில் நல்லதும் நிகழும்.

செவ்வாயுடன் இணைந்தால் 'குஜவத்கேது’ எனும் கோட்பாட்டின்படி, செவ்வாயில் நல்லது அல்லது கெட்டது என்கிற பலன் இருமடங்காகப் பெருகிவிடும். வலுவான செவ்வாயாக இருந்தால், சுலபமான முயற்சியில் கிடைக்க வேண்டியதை அளவு கடந்த முயற்சிக்குப் பின் கிடைக்கச் செய்வான்!

புதனுடன் இணைந்தால் ஆராயும் திறன் அடிபட்டுவிடும் அல்லது திறமை இருந்தும் மெத்தனமாகச் செயல்படத் தூண்டும். வலுவான புதனுடன் இணைந்தால், உரிய தருணத்தில் செயல்படச் செய்து, துயரத்தை அடைவதில் இருந்து நிவாரணத்தைத் தருவான்.

குருவுடன் இணைந்தால், அறிவுப்பூர்வமாகச் செயல்பட்டாலும் ஆதாயம் இல்லாத நிலையைத் தருவான். வலுவான குருவுடன் இணைந்தால், எதையும் இழக்கச் செய்யாமல், விழிப்பு உணர்வுடன் இருக்கச் செய்வான். செயலின் தரத்தை உயர்த்தி, புகழுடன் திகழச் செய்வான்.

சுக்கிரனுடன் இணைந்தால் பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்பட்டு கலங்கடிப்பான். வலுவான சுக்கிரன் என்றால், உலக சுகத்தைத் தந்து, பொரு ளாதாரம் மற்றும் மகிழ்ச்சியிலும் உயர்த்துவான்.

சனியுடன் இணைந்தால் உழைப்பையும் சிந்தனையையும் வீணாக்குவான்; விரக்தியைத் தருவான். வலுவான சனியா னால், தரம் தாழ்ந்த செயலில் வெட்கத்தை மறந்து, ஈடுபடச் செய்து, காரியத்தை சாதித்துக் கொள்வான்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ராகுவுடன் இணைய இயலாது. கேந்திரத்தில் அதிலும் ஏழாவது கேந்திரத்தில்தான் அவனுடைய தொடர்பு இருக் கும். உலகவியல் பலன்கள், ஆன்மிகப் பலன்கள் என்று இரண்டு உண்டு. உடலுடனும் உறுப்புகளுடனும் இணைந்த பலன்கள் மனதை மகிழச் செய்யும் பலன்கள்  என்று பிரித்துக் கூறுவர்.

கேதுவுடன் இணையும் கிரகம், ஒன்றை இழக்கச் செய் தால் மற்றொன்றையும் இழக்கச் செய்யும் என்பதில்லை; இது, மற்ற கிரகங்களுக்கும் பொருந்தும். ஆனால், கேது நிழல் கிரகம் என்பதால், அதன் தாக்கம் மானசீகமான பலத்தை மட்டுமே இழக்கச் செய்ய முற்படும். உலகவியல் பலன்களை முழுமையாகப் பாதிக்காது.

நிழல் நமக்குப் பிடிக்காது. நிஜம்தான் பிடிக்கும். நம் குழந்தையின் நிழல், நாம் பார்க்கிற புத்தகத்தை மறைத்தாலும் எழுத்துக் களைப் பார்க்க முடியாதுதானே?! 'என் குழந்தைதான்’ என்றாலும் அந்த இடையூறு இருக்கத்தானே செய்யும்! கேது எங்கு இருந்தாலும், நிழல் பட்ட இடம் போல் மங்கிவிட வாய்ப்பு உண்டு.  6, 8, 12 போன்ற இடங்களில் நிழல் படிந்தால்,  இடையூறை மறைப்பதால்... நிழலும் பலனையே அளிக்கும். கடும் வெயிலில் நடப்பவனுக்கு, தென்னை மர நிழல் கூட ஆறுதல் தரும். கேது, நம்மை நோக்கி வரும் துயரத்தை மறைத்து, வலு விழக்கச் செய்வதால் அவனது ஆராதனை மிகவும் தேவை!

'கேதும் க்ருண்வன்...’ என்கிற வேதப்பகுதியை ஓதினால் அவன் நம் மனதில் தோன்று வான் என்கிறது வேதம்.  வேதகாலத்திலிருந்து அவன் வழிபாடு தொடர்கிறது. குலம் செழிக்க, கேதுவின் அருள் அவசியம். உலகில் நம்மை முதலில் அடையாளம் காட்டுவது குலம். மற்ற தகுதிகள் அதையடுத்து வந்தவை! அது பரம்பரைச் சொத்து. அதைக் காப்பாற்றும் திறன் கேதுவிடம் உண்டு என்கிறது சாஸ்திரம். பிறப்பில் விளைந்த தகுதியே பண்புக்கு ஆதாரம். பிற்பாடு வந்து ஒட்டிக்கொண்டவை அனைத்துமே நம்மை அறியாமலே மறைந்து விடும்! கேம் கேதவேநம: என்று சொல்லி 16 பணிவிடைகளை கேது பகவானுக்குச் செய்யலாம்.

'சூர்யாஸ்யம் தூம்ரவஸனம் வரதம் கதினம் ததா. சித்ரகுப் தாதி தைவத்யம் பிரம்மப்ரத் யதிதைவதம்’ என்ற ஸ்லோகத் தைச் சொல்லி, மலர்கள் தூவி வழிபடலாம். எண்ணிக்கையில் ஒன்பது என்பது எல்லை. அந்த எல்லையை வரையறுக்கும் விதமாக, கடைசியில் கேதுவை குறிப்பிடுவது உண்டு. குறையை நிறைவு செய்யும் வகையில் ஒன்பதாவதாகக் குறிப்பிடும் கிரகம் என்பதால் கேது வழிபாடு நவக்கிரக வழிபாட்டின் நிறைவை அளிக்கிறது.

நம: சூர்யாய சோமாய மங்களாய புதாயச. குரு சுக்கிரசனிப்ய:ச ராகவே கேதவே நம: என்ற ஸ்லோகம்... பிரகாச கிரகத்தை முதலிரண்டில் குறிப்பிட்டு, பிறகு தாரா கிரகத்தை விளக்கி, நிழல் கிரகங்களில் முற்றுப் பெற்று விளங்குகிறது.

அதன் நிறைவைக் கேது நடைமுறைப் படுத்துகிறான். ஆகவே நிறைவான வாழ்வுக்கு கேதுவை வணங்கி, வளம் பெறுவோம்!

- வழிபடுவோம்