Published:Updated:

அருட்களஞ்சியம்

ஓவியங்கள்: ஸிம்ஹா

அருட்களஞ்சியம்

ஓவியங்கள்: ஸிம்ஹா

Published:Updated:

திரிசூலம்

சென்னையிலிருந்து தாம்பரம் போகும் வழியில், மீனம்பாக்கத்திற்கும் பல்லாவரத்திற்குமிடையே இடது புறத்தில் காணப்படும் நான்கு குன்றுகளை எல்லைச் சுவர்களாகக் கொண்டு 'திரிசூலம்’ என்ற பல்லவர்புர க்ஷேத்திரம் விளங்குகிறது. அந்நான்கு குன்றுகளையும் நான்கு வேதங்களாகக் கருதி, அவற்றினிடையேயுள்ள தலத்தை சதுர்வேதி மங்கலம் என்று முன்னோர்கள் அழைத்தார்கள். அவ்விடத்திற்கு திருச்சுரம் என்று பெயருமுண்டு. ஆகவே, அங்கு கோயில் கொண்டிருக்கும் ஈசுவரனை திருச்சுரமுடையார் என்று போற்றி வணங்கினார்கள். நாளடைவில் 'திருச்சுரம்’ திரிசூலம் ஆகி, திருச்சுரமுடையாரும் திரிசூல நாதர் ஆகிவிட்டார் போலும்!

அருட்களஞ்சியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அருட்களஞ்சியம்

பிரும்மா ஆராதித்ததால், ஈசுவரனுக்கு 'பிரும்மபுரீச்வரர்’ என்ற திருநாமமும் ஏற்பட்டுள் ளது. அம்பிகை திரிபுரசுந்தரியாய்த் தனியே கோயில் கொண்டிருக்கிறாள். சுவாமியின் கர்ப்பக் கிரஹம் கஜப்ருஷ்ட வடிவத்தில் தூங்கானை மாடமாக அமைக்கப்பட்டிருக்கிறது. தென் புறத்தில் ஸர்ப்ப கணபதியும், சின்முத்திரையுடன் தட்சிணாமூர்த்தியும், மேற்குப்புறத்தில் லிங்கோத்பவரும், வடக்கில் பிரும்மாவும், துர்க்கையம்மனும் எழிற் கோலம் கொண்டிருக்கிறார்கள்.

- 1965 விகடன் தீபாவளி மலரில் இருந்து...

அருட்களஞ்சியம்

வர்க்கலை

கொல்லம் - திருவனந்தபுரம் ரயில் தொடரில் சென்றால், இந்த க்ஷேத்திரத்தை அடையலாம்.

இங்கு கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் ஸ்ரீ மகாவிஷ்ணுவை 'ஜனார்த்தன ஸ்வாமி’ என்று அழைக்கிறார்கள். கடற் கரையிலிருந்து இருநூறு கஜத்திற்குள் தேவாலயம் அமைந்திருக்கிறது.

பித்ரு கர்மாக்களைச் செய்ய விழையும் மாந்தருக்குக் காசியும், கயையும், ராமேச்வரமும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியத்வம் வாய்ந்தது இந்த ஸ்தலமும். கயாவில் உள்ளது போலவே இங்கும் ஆலவிருக்ஷம் ஒன்று இருக்கிறது. இங்கு ஸ்தல விருக்ஷங்களாக ஆல், அரசு, வேம்பு இவை மூன்றும் ஒன்றாக இணைந்து வளர்ந்திருக்கின்றன.

வர்க்கலையில் கோயிலை அடுத்த தென்புறம் சக்கர தீர்த்தம் என்று ஒன்று இருக்கிறது. சகல பாவங்களையும் போக்கவல்லது.

இதன் தென்புறமிருக்கும் கோமுகி வழியாகத் தீர்த்தம் வந்து விழுந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்தத் தீர்த்தம் எங்கிருந்து வருகிறது என்பதை இதுகாறும் கண்டவர்கள் எவருமில்லை.

ஜனார்த்தனப் பெருமாளின் திருப்பாதத்திலிருந்து பூமி வழியாக வருகிறதாகச் சொல்லப்படுகிறது.

இந்த திவ்ய ஸ்தலத்தில் 'ஜனார்த்தன ப்ரியதாம்’ - எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் - என்று பித்ருகடன்களைச் செய்கின்றனர்.

அருட்களஞ்சியம்

ஒரு சமயம் நாரதர் வீணா கானத்துடன் விஷ்ணுவைத் தரிசிக்கச் சென்றிருந்தார். தரிசித்தபின் திரும்பும் வழியில் பிரும்மாவைப் பார்த்து வணங்கி வர எண்ணினார். ஆனால் விஷ்ணுவோ நாரதரின் வீணாகானத்தினால் கவரப்பட்டு அவரைத் தொடர்ந்து வந்து பிரும்ம லோகத்தையே அடைந்துவிட்டார்.

பிரும்மதேவன் அந்த சமயத்தில் ஸ்ரீமந்நாராயணனை அங்கு எதிர்பார்க்கவில்லை. ஆயினும், அவருக்கு அர்க்கிய பாத்தியங்கள் செய்து வணங்கும்போது, திடீரென்று விஷ்ணு மறைந்துவிட்டார். நிமிர்ந்த பிரம்மா, தம் எதிரில் நாரதர் (தமது மகனே) நின்றிருக்கக் கண்டு திடுக்கிட்டார். அங்கு நின்றிருந்த நவ பிரஜாபதிகள் இக்காட்சியைக் கண்டு சிரிக்கவும், பிரும்மாவுக்குக் கோபம் வந்து 'பூவுலகில் நீங்கள் உழன்று துன்புறுவீர்களாக’ என்று சபித்துவிட்டார். நாரதர் அவர்களைத் தேற்றி, தான் கூறும் இடத்தில் அவர்கள் தவம் செய்தால் நற்கதியடையலாமென்று கூறி, அடையாளத்துக்காக தமது மரவுரியை வீசியெறிய, அந்த மரவுரி விழுந்த தலமே புனிதம் எனக் கருதி அவர்கள் அங்கு தவம் செய்தனர். அந்த மரவுரி வீழ்ந்த இடம்தான் வர்க்கலை எனும் புண்ணிய க்ஷேத்திரம்.

அருட்களஞ்சியம்

ராவண வதத்திற்குப் பின், ஸ்ரீ ராமன் நந்திக் கிராமம் திரும்பும்போது பிரம்மா, காமதேனுவின் உதவியால் பெரிய யாகம் ஒன்று துவக்கினார். ஆனால் ராமர், முனிவர்கள் புடைசூழ பரதனைக் காணும் அவசரத்தில் அயோத்திக்குச் சென்று விட்டமையால், பிரும்மா யாகத்துக்கு ஏற்பாடு செய்த பெரிய விருந்தைப் புசிக்க அங்கு யாரும் வரவில்லை. இதனால் பிரம்மா மிக மனமுடைந்து போகவும், மகாவிஷ்ணு, ஜனார்த்தனன் என்ற பெயர் தாங்கிய சிறுவனாகத் தோன்றி அன்னத்தையெல்லாம் புசித்து, தம்மை இன்னார் என்று பிரம்ம தேவனுக்குக் காட்டியருளினார்.

- 1966 விகடன் தீபாவளி மலரில் இருந்து...