Published:Updated:

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Published:Updated:
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

விருந்தாளியைக் காக்க வைத்துவிட்டு (அதாவது, அவர் கண்ணில் தின்பண்டத்தைக் காட்டாமல்) தான் மட்டும் உண்பதைச் சான்றோர் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் சின்ன வயதில், நான் செய்த ஓர் அற்பத்தன மான செயலை நினைத்து இன்றைக்கும் வெட்கப் படுகிறேன்.

மாம்பழத்துக்குப் பெயர்பெற்றது எங்களின் சேலம் மாவட்டம். என் சொந்த ஊரான ஜலகண்டபுரத்தில் அப்போது ஹைஸ்கூல் வசதியெல்லாம் இல்லை. எனவே, பத்து வயதுச் சிறுவர்களான நாங்கள் ஒரு ஐந்தாறு பேர் சின்னதாக அறை ஒன்றைச் சேலத்தில் வாடகைக்கு எடுத்து தங்கிப் படித்து வந்தோம். என் மூத்த சகோதரர் அடிக்கடி சேலத்துக்கு வந்து, எங்களைப் பார்த்துவிட்டு, ஓட்டல் பில், வீட்டு வாடகை மற்றும் இதரச் செலவுகளுக்கு உரியவர்களிடம் பணம் கொடுத்துச் செல்வார். அப்படி ஒருமுறை வந்தபோது, மல்கோவா மாம்பழங்களைக் கொண்டு வந்து தந்தார். அவை, எங்கள் தோப்பில் காய்த்தவை. கூடுதல் பருமன்; அதிக வாசனை; அருமையான ருசி கொண்டவை. அதில் ஒரு மாம்பழம், இயல்பான அளவைக் காட்டிலும் ரொம்பப் பெரிதாக இருந்தது. அதை என் பங்கில் இணைத்துக் கொண்டேன்.

##~##
மூன்று நான்கு வீடுகள் தள்ளி, பள்ளியின் தமிழ்ப் பண்டிதர் குடியிருந்தார். அவருடைய மகன், எனக்கு இனிய சிநேகம். அவனிடம் எங்கள் தோப்பின் மாம்பழப் பெருமையை, முக்கியமாக பெரிய சைஸ் மல்கோவா பெருமையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. சாயந்திரம் பள்ளி விட்டதும், அவன் என்னோடு வந்து அந்த அதிசய மாம்பழத்தைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னான். அவ்வளவுதான்... என் மனம் அற்பத்தனமாக யோசிக்கத் தொடங்கிவிட்டது.

தினமும் பள்ளி விட்டதும், வழக்கமாக நானும் அவனும் ஒன்றாகத்தான் வீடு திரும்புவோம். அன்றைய தினம், கடைசி பாட வேளை ஆசிரியரிடம், ''மாமா வந்திருக்கார்; போகணும்’ என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, அனுமதி வாங்கி, பள்ளி விடுவதற்கு முன்பே வேக வேகமாக வீடு திரும்பி, பெரிய சைஸ் மல்கோவாவைத் தின்று தீர்த்தேன்.

நண்பன்தான் பாவம்... பள்ளி முடிந்து, விளையாட்டு மைதானத்தில் என்னைத் தேடி, காணாமல் விசாரித்து, விவரம் அறிந்து, என் அறைக்கு வந்தான். ''அந்த அதிசய மாம்பழத்தைக் காட்டுடா, பார்க்கலாம்!'' என்றான் ஆசை ஆசையாக. ''என் மாமா அவசரமாக ஊருக்குக் கிளம்பணும்னார். அதனால், அதை அறுத்துச் சாப்பிட்டுட்டார். எனக்கும் ரெண்டு துண்டு தந்தார்'' என்று கூறி, மல்கோவா கதையை முடித்துவிட்டேன். கேவலம், ஒரு மாம்பழத்துக்காக அன்று நான் அப்படி நடந்துகொண்டதை நினைத்தால், இப்போதும் வெட்கமாக இருக்கிறது.

பிறருக்கு கொடுத்துச் சாப்பிடுகிற பழக்கம், சின்ன வயதிலேயே வரவேண்டும். இந்தப் பழக்கத்தைத் தாய்மார்கள்தான் தங்கள் குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

முன்னெல்லாம் குழந்தைகளுக்குச் சாதம் ஊட்டும் போது, 'அப்பாவுக்கு ஒரு வாய், அம்மாவுக்கு ஒரு வாய், நிலாவுக்கு ஒரு வாய், நாய்க் குட்டிக்கு ஒரு வாய்...’ என்று எல்லாருக்கும் பங்கு சொல்லியவாறு ஊட்டுவார்கள் தாய்மார்கள். ஆனால் இன்றைக்கோ, ''தோ தோ நாய்க்குட்டி... என்ன, உனக்கும் ஒரு வாய் வேணுமா? போ போ! உனக்குக் கிடையாது. எங்க குட்டிப் பாப்பாக்குதான்!'' என்றல்லவா ஊட்டி வளர்க்கிறார்கள்!

'விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று’ என்கிறது திருக்குறள்.

அமுதமாகவே இருந்தாலும், அதை அந்த நாய்க் குட்டிக்கும் தருவோமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism