. 'ம.னவளக் கலை பயிற்சி எடுத்துக்கிட்டா, மூட்டுவலியெல்லாம் இருந்த இடம் தெரியாமப் போயிரும்னு நண்பர்கள் சொன்னாங்க. ஏனோ... அந்த முயற்சி தள்ளிப் போயிக்கிட்டே இருந்துச்சு. இப்ப சக்தி விகடன் மூலமா நிறைவேறியிருக்கு'' என்று சொல்லி நெகிழ்ந்தார் வாசகர் அண்ணாமலை..
சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தி வரும் 'மனவளக் கலை யோகா உடற்பயிற்சி முகாம்’ மதுரையில் நடைபெற்றது. தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி என பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் வாசகர்கள்.

''யோகா பண்ணினா, உடம்பும் மனசும் நல்லாருக்கும்னு எல்லாரும் சொன்னாங்க. போதாக்குறைக்கு, சக்தி விகடன்ல வர்ற 'வாழ்க வளமுடன்’ தொடர், யோகா செய்யும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டுச்சு. இதோ... இப்ப சக்தி விகடன் நடத்தற பயிற்சியிலயே கலந்துக்கறது ரொம்பப் பெருமையா இருக்கு'' எனப் பூரிப்புடன் தெரிவித்தார் வாசகர் ஜெயராமன்.

''வேலை வேலைன்னு ஓடிக்கிட்டிருக்கிற வாழ்க்கைல, மனசுக்குத் தேவையான அமைதியை, இந்த மனவளக் கலைப் பயிற்சி கொடுத்துருக்கு. தொடர்ந்து கத்துக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்'' என உறுதியுடன் தெரிவித்த வாசகர் கோபால்சாமி, ரயில்வே துறையில் பணிபுரிகிறார்.

''ரெண்டு மணி நேரப் பயிற்சியைச் செய்றது கஷ்டமா இருக்குமோங்கற தவிப்போடதான், கலந்துக்கிட்டேன். ஆனா, ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை. தவிர, இவ்ளோ பயிற்சிகள் செஞ்சதுல, உடம்புல புதுரத்தம் பாய்ஞ்சா மாதிரி ஒரு உணர்வு'' என விழிகள் விரியத் தெரிவித்தார் வாசகி சித்ரகலா. இதே கருத்தை, வாசுகிதேவி, அமுதா, லிகிதா பானு, மோகன்ராம் ஆகியோரும் தெரிவித்தனர்.

''சில வருஷங்களுக்கு முன்னாடி ஏற்பட்ட விபத்துலேருந்து, இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வரேன். அதுக்கு இந்த மனவளக் கலைப் பயிற்சி ரொம்ப உதவியா இருக்கும்னு நம்பறேன்'' என்று நெகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார் வாசகர் மகராஜன்.

பயிற்சியும் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற முயற்சியும் இருந்தால், உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளில் இருந்து விரைவில் நலம் பெறலாம், என்பது உறுதி!

- ரா.அண்ணாமலை
படங்கள்: ச.லட்சுமிகாந்த்