Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

Published:Updated:
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சுவாமி பாபா தரும் கனவுகள் விசித்திரமானவை. பின்னால் நடக்கப்போகும் சம்பவங்களை முன்னால் கூறும் குறியீட்டுக் கனவுகளாகவோ, வெளிப்படையான கனவுகளாகவோ அவை அமைவது உண்டு. அதுவரை நாம் பார்த்திராத இடங்கள், மனிதர்கள் மற்றும் சூழல்களுடன் சுவாமி காட்சி தருவது உண்டு. அந்தக் கனவுகள் தத்ரூபமாயிருக்கும். கைதொடும் தூரத்தில் நிகழ்வது போன்ற பாவனை தெரியும். தன் சங்கல்பத்தாலேயே அத்தகு கனவுகள் வருகின்றன என்பார் சுவாமி. மும்பையில் வசிக்கும் சாயி பக்தை மைதிலிக்கும் ஒரு விடியலில் அப்படியரு கனவு வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிகப் பிரமாண்டமான அழகும் அமைதியும் நிறைந்த பிரசாந்தி நிலையம், பளீரென்று தெரிகிறது. அதுவரை மைதிலி புட்டபர்த்தி போனதில்லை; பிரசாந்தி நிலையத்தையும் பார்த்ததில்லை. பின்னாளில்தான், அது சுவாமியின் மூலஸ்தானம் என்பது தெரியவந்தது. ''அங்கு சுவாமி வெள்ளை நிறக் காரில் வருகிறார். என்னை நோக்கிக் கையாட்டுகிறார். கார் சென்று கொண்டிருக்கிறது'' என, சுவாமியைக் கனவில் பார்த்த சந்தோஷத்தை, அடுத்த நாள் சக சாயி தோழியரிடம் மைதிலி சொல்லி மகிழ்ந்தபோது, ''சுவாமி உங்களைக் கூப்பிடுகிறார் போலிருக்கிறது'' என்றார்கள். அதென்ன அதிர்ஷ்டம்... ''கொஞ்ச நாட்களில் சக சாயி பக்தர்களுடன் புட்டபர்த்திக்குச் செல்லும் வாய்ப்பு வந்தது. ஆனந்தமான பயணமாக அது அமைந்தது'' என்கிறார் மைதிலி.

##~##
தரிசனத்துக்கு சுவாமி பாபா வருவதற்கு முன்னதாக, தெய்வ கீதமென புல்லாங்குழல் இசை மிதந்து வந்தது. சுவாமி, காற்றில் மிதப்பது போல் மிக மென்மை யாகவும், மிக நளினமாகவும் நடந்து வந்தார். அபய கரங்களாலும் பார்வையாலும் அனைவரையும் ஆசீர்வதித்தார். சுவாமி தரிசனம், எங்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. பஜன் ஆனதும் சற்று நேரத்தில், வெளியில் மழை வெளுத்து வாங்கியது. சுவாமிக்கு வெளியில் செல்லவேண்டிய வேலை இருந்தது போலும்! சுவாமியின் வெள்ளை நிறக் கார் வந்து நின்றது. அவ்வளவுதான்... சுவாமி நடந்து சென்று, அந்த வெள்ளை நிறக் காரில் ஏறி அமர்ந்து, காரின் கண்ணாடிக் கதவுக்கு வெளியே எங்களைப் பார்த்துக் கையாட்டினார். கார் நகரத் தொடங்கியது.  கனவில் கண்டது, அப்படியே நிகழ்ந்தது! 'ஆன்ட்டி! உங்க கனவு பலிச்சாச்சு!’ என்று பக்கத்தில் இருந்த பெண்கள் குரல் கொடுக்க, மைதிலி மகிழ்ச்சி அலைகளில் மிதந்தார்.

இன்னொரு முறை, கனவில் வந்த சுவாமி, 'மகள் லக்ஷ்மிக்கு எப்போது கல்யாணம் செய்யப் போகிறாய்?’ என்று கேட்டார். ''அதைப் பற்றி அதுவரை யோசிக்கவே இல்லை. நிதானமாய் நடக்கட்டும் என்று நினைத்தோம்'' என்ற பக்தை, மேலே தொடர்கிறார்...

''சுவாமி கனவில் வந்து கேட்டதும், கல்யாண ஏற்பாடு ஜரூராகியது. சென்னையிலிருந்த என் சகோதரி, சுவாமியின் அனுக்ரஹம் நிரம்பப் பெற்றவள். அவள் போன் செய்து, 'இன்டர்நெட் மூலம் மாப்பிள்ளை கிடைப்பார்’ என்று சுவாமி சொன்னதாகச் சொன்னாள். அதன்படியே அமெரிக்க மாப்பிள்ளை அமைந்தார். எல்லாப் பேச்சுவார்த்தைகளும் முடிந்து, கல்யாணம் நிச்சயமானது. அப்போது, சுவாமி மும்பைக்கு வந்தார். அவரின் வருகை, லக்ஷ்மியின் கல்யாணத்துக்கு ஆசீர்வாதம் செய்ய சுவாமி வந்ததாகவே எங்களுக்குத் தோன்றியது. ஹட்சி (பிணீபீsலீவீ) சத்யசாய் பாண்டுரங்கன் கோயிலைத் திறக்க சுவாமி வந்தபோது, அனைவருமாகச் சென்று தரிசித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டோம். சுவாமி கனவில் சொன்னபடியே நடப்பதை, என்னவென்று சொல்வது?!

அதுமட்டுமா? கல்யாணம் நடந்த அன்று, மணப்பெண்ணின் அறையில் சுவாமி பாபா, காவி நிறத்தில் ஆசீர்வதித்து எழுதி இருந்தார்... 'விஹ் ஞிவீஸ்வீஸீமீ றிஷீஷ்மீக்ஷீ வீs மிஸீ விணீஸீரீணீறீஹ்ணீனீ!’  அதாவது, 'திருமாங்கல்யத்தில் என் தெய்வசக்தி இருக்கிறது!’

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் அதைக் கண்டு சிலிர்த்தனர். '''சுவாமி, நீங்கள் கல்யாணத்துக்கு வந்ததற்கான அடையாளத்தைக் காட்டவேண்டும்'' என சுவாமியிடம் பிரார்த்தனை செய்திருந்தேன். ஒன்பது கஜப் புடவை அணிவதற்காக அறைக்குள் நுழைந்தபோது, அங்கே  மாட்டியிருந்த சுவாமியின் படத்தில் இருந்து விபூதி கொட்டி, அறையெங்கும் தெளித்திருந்தது. 'கும்’மென்று தெய்வீக நறுமணம் அந்த அறையெங்கும் நிறைந்திருந்தது. சுவாமி வந்திருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?!

ஹைதராபாத்தில் நாங்கள் குடியிருந்தபோது, வருடாவருடம் சாயிபக்தர் குழுவினராகத் தொடர்ந்து புட்டபர்த்தி சென்றுவந்தோம். ஒருமுறை, ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்போது, இரவு வேளையில் வழியில் பஸ் நின்று போனது. பஸ் எப்போது கிளம்பும் என்று தெரியவில்லை. வண்டியில் இருந்த பக்தர்கள் அனைவரும்  இறங்கி, பாதை ஓரத்தில் அமர்ந்து, பஜன் செய்யத் தொடங்கினோம்.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

கொஞ்சநேரத்தில் பஸ் புறப்பட்டது. சுவாமிக்கு மானசிகமாக நன்றி சொல்லியபடி ஏறிக்கொண்டோம். விடியும் வேளையில், புட்டபர்த்தி போய்ச் சேர்ந்தோம். சுவாமி தரிசனத்துக்கு அமர்ந்திருந்தபோது, நடந்து வந்த சுவாமி, ஆண்கள் பக்கம் சென்று, 'என்ன, ஹைதராபாத் டிவோட்டீஸ் வண்டி நின்று போய், வழியில் உட்கார்ந்து பஜன் செய்தீர்களா..? அங்கே நானும் இருந்தேன்’ என்று சொன்னாராம். எங்கும் நிறைந்தவரல்லவா சுவாமி! சர்வாந்தர்யாமி அல்லவா சாயி!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

பெண்கள் பக்கமாக வரும்போது, என்னைப் பாத நமஸ்காரம் செய்துகொள்ளச் சொன்னார். மகிழ்ச்சியுடன் சுவாமியின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தபோது... மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்வில் ஆடிப்போனேன். ஆண்கள் பக்கம் அமர்ந்திருந்த எங்களின் மகன் கணபதியின் தலையில் கையை வைத்து அழுத்தியிருக்கிறார் சுவாமி. அவனும் அதேவிதமான தெய்வீக அதிர்வை உணர்ந்தானாம்!

இப்போது மும்பையில்... பஜன்கள், சுவாமி கோயிலான தர்மக்ஷேத்திரா நிகழ்வுகள், பர்த்தி சர்வீஸ் என்று எங்கள் பொழுதுகள் தெய்வீகப் பொழுதுகளாகிவிட்டன. ஒருமுறை சுவாமியிடம், 'இந்த வீட்டில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்லக்கூடாதா?’ என்று கோரிக்கை வைத்தேன். என் சகோதரியிடமிருந்து, 'நடமாடிக்கொண்டே இருக்கிறேன்’ என்றார் சுவாமி. கால் வலிக்கும் போது பூஜையறையில் வந்து உட்காருவதாகவும் சொன்னார். அந்த நாற்காலிக்கு குஷன் தைத்துப் போட்டு அலங்காரம் செய்துவிட்டோம்'' என்று சொல்லும் இந்த பக்தை அடையும் மகிழ்ச்சியையும் சுவாமியின் பிரத்யட்சத்தையும் சாயிபக்தர்கள் எப்போதும் உணர்கிறார்கள்.

- அற்புதங்கள் தொடரும்

'கைக்கு எட்டிய தூரத்தில்..!’

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

னக்கு வயது 85. சுமார் 29 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.

'ஸ்ரீசத்ய சாயிபாபா, சென்னையில் சுந்தரம் பில்டிங்கில் தங்கியிருக்கிறார்’ என்று நாளிதழில் செய்தி வந்திருந்தது. அதைப் பார்த்த என் அம்மா, 'எல்லாரும் சாயிபாபா, சாயிபாபான்னு சொல்றாங்க. நாம அவரைத் தரிசிச்சதே இல்லை. வா... இன்னிக்குப் போய் பார்த்துடுவோம்’ என்றார். உடனே பஸ்ஸைப் பிடித்து, அந்தப் பகுதியில் இறங்கி, சுந்தரம் பில்டிங்கை நோக்கி நடந்தோம். எதிர்த் திசையில் இருந்து ஏகப்பட்ட பக்தர்கள், வந்து கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த எங்கள் உறவினர் ஒருவர், 'என்ன இவ்ளோ நேரம் கழிச்சு வர்றீங்க? தரிசனம் எப்பவோ முடிஞ்சுடுச்சே..! இப்பப் போனா பகவானைப் பார்க்க முடியாதே..!’ என்று சொல்லிச் சென்றார். 'பாபாவைத் தரிசிக்கும் பாக்கியம் நமக்கு இல்லையா?’ என்று வருத்தமும் துக்கமும் உள்ளே பொங்கியது. 'சரி.. பாபா தங்கியிருக் கும் அந்த வளாகத்தையாவது பார்க்கலாமே’ என்று மனம் சமாதானமாக யோசித்தது. ஆனால் அங்கே, மெயின் கதவைப் பூட்டியிருந்தனர். கதவின் வழியே, ஏக்கத்துடன் உள்ளே பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது அங்கிருந்த வாட்ச்மேன், கதவைத் திறந்து, 'உள்ளே வந்து நில்லுங்க’ என்றார். சட்டென்று வருத்தம் மறைந்து, இனம் புரியாத நிம்மதி படர்ந்தது.

உள்ளே சென்று, வரிசையில் அமர்ந்தோம். கடைசி வரிசையில் இருந்து மூன்றாவது வரிசையில் நானும், எனக்கு முந்தைய வரிசையில் அம்மாவும் அமர்ந்திருந்தோம். எதிரில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனம். மீண்டும் எனக்குள் பதற்றம்... 'பாபாவை, இவ்ளோ தூரத்து லேருந்துதான் பார்க்க முடியுமா?’ என்று! உள்ளுக்குள் என்னுடைய ஆசை, பிரார்த்தனையாக ஓடியது. எனக்கு முன்னால், அம்மா அமர்ந்திருக்கிற வரிசையில் எட்டு வயதுப் பெண் குழந்தையும் இருந்தாள். அவளுடைய சிரிப்பும் குறும்பும் மெள்ள என்னைத் தேற்றியது.

அப்போது உள்ளிருந்து மலர்ந்த முகத்துடன் வந்த சாயிபாபா, சட்டென்று எங்களை நோக்கி வந்தார். அன்பர்கள் எழுதி வைத்திருந்த கடிதங்களை வாங்கிக்கொண்டே வந்தவர், சிறுமியிடம் வந்ததும் நின்றார். குனிந்து அவளின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். இப்போது என் கைக்கு எட்டிய தூரத்தில், பகவானின் திருமுகம். கண்ணீரும் சந்தோஷமும் பூரித்துக் கிளம்ப... அவரைக் கண்குளிரத் தரிசித்தேன். பகவான் ஸ்ரீசாயி, எனது பிரார்த்தனையை உடனே நிறைவேற்றித் தந்ததை, இந்த ஜென்மம் முழுக்க மறக்க முடியாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism