''நேத்து ராத்திரி ஒரு கனவு கண்டேன். அதுல சிங்கம் ஒண்ணு என்னை ஆக்ரோஷமா கடிச்சுத் தின்னுடுச்சு. பயந்து போய் விழிச்சுக்கிட்டேன். ஆனா, அந்தச் சிங்கத்தைக் காணோம்...''

- நண்பர் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், தான் முதல் நாள் கண்ட கனவை விவரிப்பது வழக்கம்.

''ஒரு வேடிக்கை கவனிச்சீங்களா? ஒரு டாக்டர் ராத்திரி தூங்கி காலைல விழிக்கும்போதும் டாக்டராவேதான் இருப்பார். அதே மாதிரிதான் வக்கீலும்! தூங்கி எழுந்திருக்கும்போது அவர் இன்ஜினீயரா மாறிடறது இல்லே. சங்கீதக்காரர் கண் விழிக்கும்போது ஓவியரா மாறி, கைல பிரஷ்ஷை எடுக்கறது இல்லே...'' என்று நண்பர் பேசிக்கொண்டே போக, நான் குறுக்கிட்டுத் தடுத்து, ''இப்ப என்ன சொல்ல வரீங்க?'' என்றேன்.

''இருங்க, நான் இன்னும் முடிக்கலை. ஆனா, கனவு காண்பவர் இவங்களை மாதிரி கிடையாது. ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் கனவுல ஒலிம்பிக்ல கலந்துக்கிட்டு கப் வாங்குவார். அவரே கனவு கலைஞ்சதும் நிஜத்துல, கால் எலும்பு முறிஞ்சு, கட்டுப்போட்டு ஆஸ்பத்திரி ஐ.சி.யு-ல படுத்திருப்பார்.''

''அதுக்கென்ன இப்போ?'' என்றேன், அறுவை தாங்காமல்.

''என்னைக் கொஞ்சம் பேச விடுங்க. நேத்து ஒரு நாடகம் பார்த்தேன். அதுல கிழிஞ்ச டிரஸ்ஸும், அழுக்கு தாடியுமா பிச்சைக்காரர் வேஷத்துல பிரமாதமா நடிச்சார் ஒருத்தர். நாடகம் முடிஞ்சதும் படு டீக்கான டிரஸ்ல, பி.எம்.டபிள்யூ கார்ல ஏறி, பந்தாவா வீட்டுக்குப் போனார்..!''

''இதுல என்ன அதிசயம் இருக்கு? மகாராஜா வேஷம் போடறவர் மாநகர பேருந்துல வீட்டுக்குப் போறதும் உண்டே..?'' என்றேன்.

''அதைத்தான் சொல்ல வரேன். சில சமயம் எது நிஜம், எது மாயைங்கறதே தெரிய மாட்டேங்குது. கனவு, நாடகம்னு இல்லை; நிஜமா நடக்குற சில சம்பவங்கள்கூட சில நேரம் மாயையோனு தோணுது!''

''உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். எல்லாமே மாயைதான்!''

''இப்ப நீங்க பேசற வேதாந்தமும் மாயைதானா?''

''ஒரு வகைல பார்த்தா அப்படித்தான். ஆனா, ஒரு வித்தியாசம் உண்டு. வேதாந்தம்கறது சிங்கத்துக்கு ஒப்பானது. நீங்க ஆரம்பத்துல சொன்ன மாதிரி, உங்க கனவுல வர்ற சிங்கத்தைக் கண்டு, நீங்க அலறி அடிச்சு எழுந்திருப்பீங்க. அதாவது, உங்களை கனவு உலகிலிருந்து ஒரே செகண்டுல நிஜ உலகுக்கு சிங்கம் அழைச்சுட்டு வந்துடுது. வேதாந்தமும் அதையேதான் செய்யுது. மாயா உலகிலிருந்து உங்களை முழுவதுமா விலக்கி, நீங்க யார் என்பதை உங்களுக்குப் புரிய வைக்குது. போர்க்களத்தில் அர்ஜுனனின் மாயைகளை அகற்றிய கீதோபதேசத்தில், பகவான்கூடச் சொல்றாரே... வேதங்களில் நான் ஸாமம், மலைகளில் மேரு, மரங்களில் அரச மரம், மிருகங்களில் சிங்கம்...''

ஏதோ புரிந்துவிட்ட மாதிரி நண்பர் தலையாட்டிவிட்டுப் போனார். நாளை சந்திக்கும்போது கனவுச் சிங்கத்தைப் பற்றிக் கதைக்காமல் இருந்தால் சரி!