'காரைச் சித்தர் வழிபட்ட கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?’ என்ற தலைப்பில் கும்பகோணம் அருகில் உள்ள நாகரசன்பேட்டை ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலைப் பற்றி 1-4-14 சக்தி விகடன் இதழில் எழுதி இருந்தோம். கட்டுரையைப் படித்துவிட்டு ஏராளமான வாசக அன்பர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கியதன் பயனாக, கோயில் திருப்பணிகள் விரைவில் பூர்த்தி அடைந்து, 12-6-14 அன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தேறியது. 10-6-14 அன்று யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி, 12-6-14 அன்று காலை பூர்ணாஹூதியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றன. கடங்கள் பிரதட்சிணமாக வந்து, காலை சரியாக 10.45 மணிக்கு அனைத்து விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ நாகநாதர், ஸ்ரீ நித்ய கல்யாணசுந்தரி மற்றும் உள்ள பரிவார தெய்வ மூர்த்தங்களுக்கும் மஹா அபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானம், சூரியனார்கோயில் சீர்வளர்சீர் ஆதீனம், திருப்பனந்தாள் காசிமடம் தம்பிரான் சுவாமிகள், புதுடில்லி ஸ்ரீ அருட்சக்தி நாகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

- எஸ்.கே.