''திருச்சி- தஞ்சாவூர் சாலையில், திருவெறும்பூரில் மலைக்கோயிலில் ஸ்ரீஎறும்பீஸ்வரரைத் தரிசித்திருப்போம். அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில், ஸ்ரீலலிதாம்பிகை குடிகொண்டிருக்கும் திருமீயச்சூர், ராகு-கேது பரிகாரத் தலமாகத் திகழும் திருப்பாம்புரம் தலங்களுக்கு அருகில் உள்ள ஆலத்தூரிலும் ஸ்ரீஎறும்பீஸ்வரரைத் தரிசிக்கலாம். வழிபாடுகள், விழாக்கள் ஏதுமின்றி, சுமார் 200 வருடங்களாக சிதிலம் அடைந்த நிலையில் பரிதாபமாகக் காட்சி தருகிறது இந்த ஆலயம்'' என்று, கடந்த 22.3.11 இதழில், ஆலயம் தேடுவோம் பகுதியில் எழுதியிருந்தோம்.

ஸ்வாமி- ஸ்ரீஎறும்பீஸ்வரர். அம்பாள்- ஸ்ரீசௌந்தர்ய நாயகி. 'சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்ற எறும்புகள் வழிபட்ட தலத்தின் திருப் பணி, நிதியின்மையால், ஆமை வேகத்தில் நடைபெறுகிறது’ என வேதனையுடன் அந்தக் கட்டுரையில் தெரிவித்திருந்தோம். அதையடுத்து, சக்திவிகடன் வாசகர்களிடமிருந்து நிதிகள் வரத் தொடங்க, மளமளவென திருப்பணிகள் நடக்கத் துவங்கின.

''சக்திவிகடனுக்கும் வாசகர்களுக்கும் கோடி முறை நன்றி சொன்னாலும் தீராது. எங்கிருந்தெல் லாமோ வாசகர்கள் நிதி அனுப்பினாங்க. நேரிலும் வந்து தரிசனம் பண்ணிட்டுப் போனாங்க. இதோ... முக்கால்வாசி பணிகள் முடிஞ்சு, வரும் ஜூலை 2-ம் தேதி, புதன்கிழமை காலை 9 முதல் 10.30 மணிக்குள், ஸ்ரீஎறும்பீஸ்வரர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சுமார் 200 வருடங்கள் கழித்து, இந்த விழா நடைபெறுவதை நினைக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது!'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் திருப்பணிக் கமிட்டியில் உள்ள கலியமூர்த்தி ஐயா.

ஜூலை 2-ம் தேதி, ஆலத்தூர் ஸ்ரீஎறும்பீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு வாருங்கள். மயிலாடுதுறை பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பாளையும் ராகு-கேது தோஷம் போக்கும் திருப்பாம்புரம் திருத் தலத்தையும் அப்படியே கண்ணாரத் தரிசியுங்கள். ஸ்ரீசௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீஎறும்பீஸ்வரரின் பேரருளையும் பெறுங்கள்! உங்கள் வாழ்வில் நலமும் வளமும் உண்டாகும்!

- வி.ராம்ஜி