Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

நடக்கப் பழகணும்?! வீயெஸ்வி, ஓவியம்: சசி

கலகல கடைசிப் பக்கம்

நடக்கப் பழகணும்?! வீயெஸ்வி, ஓவியம்: சசி

Published:Updated:

''முப்பது வருடங்களுக்கு மேலா, ஒருநாள் விடாம வாக் போயிட்டிருக்கேன். தினமும் காலைல மூணேமுக்கால் மணிக்கு எழுந்திருந்தேன்னா, நாலரை மணிக்கெல்லாம் மெரினா பீச்சுல நடந்துட்டிருப்பேன்'' என்றார், நண்பர் பெருமையாக.

''அத்தனை சீக்கிரமாவா..? மெரினா பீச்சை திறந்திருக்கக்கூட மாட்டாங்களே..?'' என்று நான் சொன்ன ஜோக்கை 'சரியான மொக்கை’ என்று ஒதுக்கிவிட்டார் அவர். வாக் போவதில் இருக்கும் ஆரோக்கிய அம்சங்களை நான் புரிந்துகொள்ளாமல் அலட்சியம் செய்வதாக அவருக்குக் கோபம்.

ஷார்ட்ஸ், டீ ஷர்ட், கால்களில் ஸ்போர்ட்ஸ் ஷூ, கையில் மந்திரக்கோல் (பின்தொடரும் நாய்களை விரட்ட?!) சகிதம் தினமும் கிளம்பிவிடுவார். அவரின் வற்புறுத்தலின்பேரில் நானும் சில நாள் அவருடன் கடற்கரையில் நடைபயின்றிருக்கிறேன். நண்பர் மாதிரியே இதே காஸ்ட்யூமில் நிறையப் பேர் வாக்கிங் போவதைப் பார்த்திருக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாக் போகிறவர்களில் பல ரகம் உண்டு. முக்கால்வாசி பேர் பூங்காக்களில் நடக்கிறார்கள். சிலர் வேகமாக, அதி வேகமாக வியர்வை சொட்டச் சொட்ட நடப்பார்கள். 'அப்படித்தான் நடக்க வேண்டும்; அதுதான் சரி! மற்றவர்கள் அசைந்தாடி நடப்பதெல்லாம் வேஸ்ட்!’ என்பது அவர்கள் அபிப்ராயம். 'எந்த ஹார்ட் அட்டாக்கும் இந்த ஜென்மத்தில் என்னை அண்டாதாக்கும்’ என்கிற மிதப்பு பெரும்பான்மையான 'வாக்’காளர்களின் முகங்களில் பிரதிபலிப்பதைக் கவனித்திருக்கிறேன்.

கலகல கடைசிப் பக்கம்

வாக்கிங் போகும்போது சிலர் நாலைந்து பேராகச் சேர்ந்து கும்பலாக சளசளவென்று பேசிக்கொண்டே நடக்கிறார்கள். 'அதிகப்படியான பேச்சு ஆரோக்கியத்தை பாதிக்காதா?’ என்று அடுத்த தடவை டாக்டரைப் பார்க்கும்போது கேட்க வேண்டும். நாட்டு அரசியல், வீட்டு பாலிடிக்ஸ் என்று எதையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. பூங்காக்களில் நிறைய மனைவிமார்களுக்கு பூக்கள் இல்லாமலேயே அர்ச்சனை நடப்பதைக் கவனித்திருக்கிறேன். அதேபோல், சில பெரிசுகள் பார்க் வரை நடந்து வந்துவிட்டு, அங்கே பெஞ்சில் உட்கார்ந்து வெட்டியாக அரட்டை அடித்துவிட்டுப் போவதும் உண்டு.

'சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம், நித்தம் நடையும் நடைப்பழக்கம்...’ என்று ஒளவை சொன்னது வாக் போகிறவர்களைப் பற்றித்தானா என்று குழப்பமாக இருக்கிறது. நடப்பதற்குக்கூடப் பழக்கம் வேண்டுமா என்ன? அதிகாலையில் எழுந்திருப்பதற்கு வேண்டுமானால் பழக்கம் வேண்டியியிருக்கலாம்.

இலக்கியங்களும் 'நடை’ பற்றி நிறையப் பேசுகின்றன. சீதையும் ராமனும் நடந்து வருவதை அழகு நயத்துடன் வர்ணிக்கிறார் கம்பர்.

   'மாகந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின்
   பாகம்தரும் நுதலாளோடு பவளம்தரும் இதழான்
   மேகம்தனிவருகின்றது மின்னொடு என்று மிளிர்பூண்
   நாகம் தனிவருகின்றது பிடியொடு என நடவா’

மேகம் போன்ற ராமன் மின்னலைப் போன்ற சீதையுடன் நடந்து வருவதானது, ஆண் யானை ஒன்று தன் இணையான பெண் யானையுடன் நடந்துவருவது போல் இருந்ததாம்.

ஓரிடத்தில் 'சீதா பிராட்டியிடம் எந்தக் குறையும் கிடையாது, அவளுக்கு இடை மட்டுமே இல்லை என்பதைத் தவிர...’ என்கிறார் கம்பர். சீதையை வர்ணிக்க இன்னொரு கம்பர்தான் பிறந்து வரவேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism