சடசடவென அடித்துப் பெய்கிற கோடை மழை போல, கிரேஸி மோகன் வாயைத் திறந்தாலே நகைச்சுவையும் வார்த்தைச் சிலேடைகளும் அருவியாய்க் கொட்டுகின்றன. ஒரு கேள்விக்கு கிரேஸி மோகன் பதில் சொல்லி முடித்ததும், அடுத்த கேள்வியைக் கேட்கத் தொடங்கும் வாசகர், தான் கேட்க வந்த கேள்வியைக் கேட்கமுடியாமல், முந்தைய பதில் உண்டாக்கிய சிரிப்பிலிருந்து மீளமுடியாமல் திணறுவதைக் காண முடிந்தது. அதுதான் கிரேஸி மோகனின் தனி ஸ்பெஷல்!

இப்போ சிரிப்பு மருத்துவம் பிரபலமாயிடுச்சு. நீங்களும் ஜனங்களை நிறைய சிரிக்க வைக்கறீங்க. மருத்துவரைக் கடவுளுக்கு நிகரா சொல்வாங்க! உங்களையும் அப்படி எடுத்துக்கலாமா?'' - கேட்டார் சரவணன்.

''சேச்சே! அதெல்லாம் பெரிய வார்த்தை. நமக்கு அப்பெண்டிசிடிஸ் அல்லது அல்சர் வந்தால் டாக்டரிடம் போறோம். அவர் ஸ்கேன் செய்து பார்த்து, 'அடடா! உடனே ஆபரேஷன் பண்ணியாகணுமே!’ன்னு அப்பவே நம்மை மடியில் போட்டு, ஹிரண்யகசிபுவை நரசிம்மம் செஞ்சது மாதிரி வயித்தைக் கிழிச்சு ஆபரேஷனைத் தொடங்கிடமாட்டார். முதல்ல மயக்க மருந்து கொடுத்து, பேஷன்ட்டோட உணர்வுகளை மட்டுப்படுத்தணும். பிறகுதான் ஆபரேஷன்!

அதே போல, இந்தச் சமுதாயத்திலும் நிறைய வியாதிகள் உள்ளன. அவற்றைக் குணப்படுத்த ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், மதர் தெரஸா, பாரதியார், ரமணர், காஞ்சிப் பெரியவர், வாரியார் சுவாமிகள்னு பல மகான்கள் அவதரிச்சிருக்காங்க. அவங்க சிகிச்சை யைத் தொடங்கறதுக்கு முன்னாடி, மக்களுக்கு மயக்க மருந்து கொடுக்கும் 'அனஸ்தெடிஸ்ட்’னு (Anesthetist) வேணா எங்களைச் சொல்லலாம். ஏன்னா, எல்லோரையும் சிரிக்கவைத்து, கவலைகளை மறக்கடிக்கிறோம்; அவர்கள் அமைதியாக இருக்க வழிவகுக்கிறோம்!''

''உங்கள் நாடகங்களில், ஜானகி, மைதிலி என்றே பெண் கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைக்கிறீர்களே...!'' என்று வாசகி உதய சாதனா கேட்டார்.

''இப்போ ஜானகிக்கு 85 வயசு. அவங்க என்னுடைய டீச்சர். 'ஜானகி’யின் இன்னொரு பெயர்தான் மைதிலி! பள்ளிக்காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக என்னை நடிக்க வெச்சு, நடிப்பு சொல்லித்தந்தது அவங்கதான். ஆக, அவங்களுக்கு மரியாதை செய்யும் விதமா, நன்றி கூறும் விதமா, அவங்களோட பேரை என் கதாபாத்திரங்களுக்கு வைச்சேன். அதனால, 'ஜானகி’ன்னு என் நாடக பெண் பாத்திரத்தைக் கூப்பிடும்போதெல்லாம் எனக்கு ஆசிரியர் தினம்தான்! சமீபத்தில் பெங்களூரில் நாடகம் நடந்தபோது, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் அவங்களை கௌரவித்து, அறிமுகப்படுத்தினேன்.''

''மனித ரூபத்தில் உங்களுக்கு உதவிய கடவுள்கள் யார்?'' - இது வாசகர் நாராயணனின் கேள்வி.

''நான் பார்க்கும் அனைவருமே எனக்கு உதவி செய்யும் தெய்வங்கள்தான்! மனிதனை மனிதனாகப் பார்க்கும்போதுதான் அவன் நமக்கு எதிரியாகிறான். மிருகமாகப் பார்த்தால், நம்மை ஜெயித்துவிட்டுப் போய்விடுவான். மனிதனை தெய்வமாகப் பார்ப்பதுதான் மிகவும் நல்லது. அதனால்தான் 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்கிறோம். தெய்வத்தைப் பார்க்க முடியாது. ஆனால், மனிதனைப் பார்க்கமுடியும். கண்ணதாசனும்கூட 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்று பாடியிருக்கிறாரே!

கல்கி, தேவன், பாக்கியம் ராமசாமி ஆகியோர்தான் எனக்கு எழுத்துத் தெய்வங்கள்! கமல், ரஜினின்னு யாருக்கு எழுதப் போவதாக இருந்தாலும், இவர்களின் புத்தகங்களைப் புரட்டிவிட்டுத்தான் எழுதப்போவேன். எழுத்துக்கள் தானா வந்து பேப்பர்ல உக்கார்ந்துக்கும்.

வரலாறாக வாழ்ந்த, வாழும் பெரியவங்களும் தெய்வங்கள் தான்! ஒருமுறை, ராஜாஜி அமைச்சராக இருந்தபோது, சுடுகாட்டுக்குச் சுற்றுச் சுவர் கட்டவேண்டும் என்று பெரிய வாதம் வந்துச்சாம். ராஜாஜி குறுக்கிட்டு, 'வெளியில் இருப்பவன் உள்ளே போக விரும்ப மாட்டான். உள்ளே இருப்பவனால் வெளியே வர முடியாது. அதனால், சுவர் கட்டவேண்டிய அவசியமே இல்லை’ன்னு சொல்ல, அவையே சிரிப்பில் கலகலத்ததாம்.

ஒரு தடவை, திருவல்லிக்கேணி ராகவேந்திரா கோயிலுக்குப் போயிருந்தேன். ஏதோ கட்டுமானப் பணி நடந்துட்டிருந்த தால, வேறு வழியாகத்தான் போகமுடியும்னு என்னை திசை திருப்பி விட்டுட்டாங்க. அதிகாலை நாலரை மணி!

பின்பக்கமாகச் சுத்தி ஒரு வழியா உள்ளே வந்துட்டேன். விடியும்போது பார்க்கிறேன்... நிறைய எருமைகளும், பசுமாடுகளும் அங்குமிங்கும் படுத்திருக்கு. இருட்டுல அதுங்களுக்கிடையில நுழைஞ்சு நுழைஞ்சு வந்திருக்கேன். அந்த மாடுகளுக்கிடையில் கன்னங்கரேல்னு ஒரு பையன் மூக்கொழுக உட்கார்ந்திருந்தான். கண்ணனும் கூட கறுப்பு நிறம்தானே! இங்கு உட்கார்ந்திருக்கிற பையனும் சாட்சாத் அந்தக் கிருஷ்ணன்தானோன்னு ஒரு யோசனை மனசுக்குள் ஓடிச்சு. ஆனாலும், அவனை ஆரத் தழுவிக்கொள்வோமா? நம்மால முடியாது. ஆனா, குஷ்டரோகியைத் தொட்டு உதவிகள் செய்திருக்கார் பாபா. மகாத்மா காந்தி தொழுநோயாளிகளுக்கு சேவை செய்திருக்கார். அவங்கதான் உண்மையிலேயே தெய்வங்கள்!

அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார்னு வைஷ்ணவப் பெரியவர் ஒருத்தர் எங்களுக்கெல்லாம் குரு. கடவுளை அவர் எப்பவும் 'நாளைய கடவுள்’னுதான் சொல்லுவார். அதாவது, இன்னிக்கு நீ ஒரு நல்லது பண்ணினால், நாளைக்கு கடவுள் உனக்கு ஒரு நல்லது செய்வார்!

ஆக, நம்மைக் கைதூக்கி மேலே விடும் ஒவ்வொருத்தருமே மனுஷ ரூபத்தில் வந்த தெய்வங்கள்தான்!''

''சார், நீங்கள் ஓவியங்களும் வரைவீங்கன்னு கேள்விப் பட்டேன். உண்மையா?'' - ஆச்சரியத்துடன் கேட்டார் வாசகர் சதீஷ்.

''ஆமாம். நிறைய வரைஞ்சிருக்கேன்! ஒருமுறை, ரவிவர்மா வரைஞ்ச 'அம்பாள்’ படத்தைப் பார்த்து, அப்படியே வரைஞ்சேன். ரெண்டு மூணு முறை வரைஞ்சு கொண்டு போய்க் காண்பிச்சபோதும், 'வேலைக்காரி மாதிரி இருக்குடா’ன்னார் என் தாத்தா. எனக்குக் கோபமான கோபம். அப்புறம், வேலைக்காரியையே ஓவியமா வரைஞ்சேன். அதைப் பார்த்துட்டு, 'ஆஹா! அப்படியே அம்பாள் மாதிரி இருக்குடா!’ன்னார். நான் டென்ஷனாயிட்டேன். அவரிடம் கோபத்தோடு முறுக்கிக்கிட்டேன். 'விடுறா! அம்பாளைவிட பெரிய வேலைக்காரி அகிலத்தில் இருப்பாளாடா?’ன்னார். அடடா... எத்தனை பெரிய உண்மை இது! அவர் சொன்ன வரி, கவிதை மாதிரி என் நெஞ்சுல பதிஞ்சுடுச்சு!'' (கிரேஸிமோகன் வரைந்த சில ஓவியங்களும், அதற்கு அவரே எழுதிய வெண்பாக்களும் இங்கே!)

அடுத்த கேள்வியைக் கேட்டவர் வாசகர் பிரகாஷ் அழகர்சாமி.

சார், தத்துவார்த்தமா ஒரு கேள்வி கேக்கலாம்னு இருக்கேன். கடவுள் தன்மை என்றால் என்ன? நம்மைப் போன்றவர்களுக்கு அது வாய்க்குமா?

''ஒரு பாடல்ல, 'உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும்போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவதும் உன் அருள் அன்றோ’னு எல்லா உயிர்களையும் கடவுள் நிலைக்கு உயர்த் தியிருப்பார் கண்ணதாசன். ஆக, வாழ்த்துக்களை தெரிவிக்கும்போது மனிதன் கடவுள் நிலையை அடைகிறான் என்பது உண்மை. சில நேரங்களில் அந்தக் கடவுள் தன்மை, தானே வந்து நம்மை அடையும். அதாவது, ஒரு நிறைவுத் தன்மை!

இதை ஜென் தத்துவத்தில் 'சட்டோரி’ என்பார்கள். காரணமே இல்லாமல் சில நேரம் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.அதுவும்கூட கடவுள் நிலைதான்! எனக்குள்ளே சந்தோஷமும் குஷியும் தோன்றிவிட்டால் வெளியிலிருந்து இவற்றை நான் எதிர்பார்க்க மாட்டேன். சந்தோஷத்தைத் தேடி 'ஆலயம்’ போறோம். இதை இங்கிலீஷ்ல சொன்னா, 'கிறீறீ மி ணீனீ’. அதாவது, எல்லாமாக நீ இருக்கே. எல்லாம் உனக்குள் இருக்கு!

'இரண்டு தருணங்களில் கடவுள் சிரிக்கிறார்’னு ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார். அதாவது, வக்கீல் தனது கட்சிக்காரரைப் பார்த்து, 'கவலைப்படாதே! உன்னை இந்த கேஸ்லேருந்து நான் காப்பாத்தி விடறேன்’னு சொல்லும்போதும், டாக்டர் 'இந்த பேஷன்ட்டைக் சாகாம நான் காப்பாத்தறேன்’னு சொல்லும்போதும் இறைவன் சிரிப்பானாம்!'' - கிரேஸி மோகன் சொல்லி முடித்த போது, அற்புதமான ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்ட திருப்தி, வாசகர்களுக்கு.

''இது கடவுள் அனுக் கிரகத்தால்தான் சாத்தியமானது என்று எதைச் சொல்வீர்கள்?''- கேட்டார் வாசகர் ராஜசேகர்.

''நாங்கள் ஒருமுறை சிங்கப்பூருக்கு 'மீசை யானாலும் மனைவி’ நாடகம் நடத்தச் சென்றிருந்தோம். சிலவற்றைச் செய்யக்கூடாது என்று எங்களுக்கு நாங்களே சில நிபந்தனைகளை விதித்துக்கொண்டோம். அதைக் காப்பாற்றியாக வேண்டும் அல்லவா! ஆனால், எங்களில் ஒரு சிலர் நாங்கள் விதித்துக்கொண்ட விதிகளையே மீறிவிட்டோம். சொன்னால் நம்பமாட்டீர்கள்... நாடக தினத்தன்று, எங்கள் குழுவில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கும் ஒருவருக்குக் குரலே வராமல் போய்விட்டது. எவ்வளவு முயற்சியெடுத்தும், குரல் எழும்பவே இல்லை. மேடையிலிருந்து திரையை விலக்கி அரங்கத்தைப் பார்த்தால், இரண்டாயிரம் பேர் நாடகத்தை ரசிக்கக் காத்துக்கொண்டிருக் கிறார்கள். எனக்கு அழுகையே வந்துவிட்டது. இதற்குக் காரணம் சில விதிகளை மீறியதால்தான் என்று புரிந்துவிட்டது. அந்தக் கடவுள், இந்தக் கடவுள் என்றெல்லாம் பார்க்கவில்லை. பாரதியார் சொன்னாரே, 'அந்தப் பெரிய கடவுள் காக்கவேண்டும்’ என்று அவரைத்தான் மனசார வேண்டிக்கொண்டேன். என்ன ஆச்சரியம்..! அடுத்த ஒரு சில நிமிடங்களில், பாதிக்கப்பட்டவருக்குக் குரல் 'கணீர்’ என்று வந்துவிட்டது. வழக்கத்தைவிட அழகாக வசனங்களை ஏற்ற இறக்கங்களுடன் பேசி அசத்திவிட்டார். அரங்கத்தில் ஒரே கைதட்டல் மயம்! நாடகம் முடிந்தது. சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும்... அவருக்கு மறுபடியும் குரல் போய்விட்டது. அப்புறம், சென்னைக்கு வந்து டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்புதான் அவர் குரல் சரியானது. இது கடவுளின் அருளால்தான் சாத்தியமாயிற்று என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய ஒரு நாடகத்துக்குப் பெயர் அமைந்ததுகூட தெய்வத்தின் சக்தியால்தான்! காற்றினிலே வரும் கீதம், கண்ணன் ஒரு கைக் குழந்தை, எங்கிருந்தோ வந்தான்... இப்படிப் பல பெயர்களை யோசித்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருந்தது. அது ஒவ்வொரு ஹாலிடேவுக்கும் வெளி நாட்டிலிருந்து இங்கே வரும். நான் யோசித்த பெயர்களையெல்லாம் அதுங்கிட்டே சொல்லி, எது பிடிச்சிருக்குன்னு கேட்டேன். குழந்தை கொண்டாடினா ஊரே கொண்டாடும்னு சொல்வாங்க இல்லையா? ஆனா, அந்தக் குழந்தை திடீர்னு 'சாக்லேட் கிருஷ்ணா’ என்றது. அதே பெயரை டிராமாவுக்கு வெச்சேன். இன்னிக்கு வரைக்கும் பிரமாதமாக போயிட்டிருக்கு...'' - ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கிரேஸி மோகன் விவரிக்க, வாசகி ராஷ்மிராஜாவும் குழந்தையைப் பற்றியே தனது அடுத்த கேள்வியை முன்வைத்தார்...

'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்பார்கள். இதை, உங்கள் பாணியில் விளக்குங்களேன்!

''உண்மையில், எல்லா குழந்தைகளுமே தெய்வங்கள்தாம். 'உன் பையன் மண்ணைத் தின்றால் வையாதே. வாயைத் திறந்து பார். வாய்க்குள் வையம் தெரியாவிட்டால், சந்தேகமே வேண்டாம்; நீ யசோதை அல்ல!’ என்று எங்கள் நாடகத்தில் ஒரு வசனம் எழுதினேன்.

நமது பிள்ளைகள் சரியில்லைன்னா, நம்மகிட்டே என்ன குறை இருக்குன்னுதான் பார்க்கணும். ஜெயகாந்தன்கூட ஒருமுறை, 'விஸ்வரூபம் காட்டப்படுவதன்று; அது காணப்படுவது!’ன்னு சொன்னார்.

என் நாடகத்துக்கு ஒரு குழந்தை பெயர் வெச்சுதுன்னு சொன்னேன் இல்லையா, அந்தக் குழந்தையை அதன் தாத்தா ஒரு தடவை கோயிலுக்கு அழைச்சிட்டுப் போயிருந்தார். அப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 'என்ன செய்யறாங்க தாத்தா?’ன்னு கேட்டுது குழந்தை. 'காட் இஸ் டேக்கிங் பாத்’னு சொன்னார். அடுத்து, அலங்காரத்தின்போது திரை போடப்பட்டது. 'ஏன் தாத்தா ஸ்க்ரீன் போட்டுட் டாங்க?’ன்னு குழந்தை கேட்டுது. 'காட் டிரஸ் பண்ணிக்கிறார்!’னு சொன்னார் தாத்தா. 'என்ன தாத்தா, குளிக்கும்போதே பார்க்கவிட்டாங்க. டிரஸ் பண்ணிக்கும்போது பார்த்தா என்ன தப்பு?’ன்னு கேட்டுது குழந்தை. பாருங்க, அந்தக் குழந்தையோட கேள்வி நியாயமானதா, இல்லையா?

நமக்கும் சின்ன வயசுல இது மாதிரியான சிந்தனைகள் தோணியிருக்கும். வயசாக ஆக எல்லாம் போயிடுது. ஆப்பிள் மரத்துக்குக் கீழே அமர்ந்த நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்ததால்தான் அவர் புதியதாக ஒன்றைக் கண்டுபிடித்தார். பொதுவா, 'மரத்துக்குக் கீழே உட்காராதே! தலையில எதுவாவது விழுந்து வைக்கும்’னு வீட்டுல தடுத்துடுவாங்க. அதனாலதான் இன்னொரு நியூட்டன் உருவாகலையோ, என்னவோ!''

''எழுத்தாளர் என்ற முறையில் சொல்லுங்கள். சிறந்த படைப்பாளி யார்? வேத வியாசரா? வால்மீகியா?'' - இது, வாசகி உதயசாதனாவின் கேள்வி.

''வேத வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர்

எழுதினார் பாரதத்தை. 'பொருள் புரிந்து எழுதவேண்டும்’ என்று விநாயகருக்கு வியாசர் நிபந்தனை விதிக்க, நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போகவேண்டும் என்று விநாயகர் வியாசரிடம் சொல்ல... அப்படி உருவானதுதான் 'மகாபாரதம்’! வால்மீகியா இருக்கட்டும், வியாசரா இருக்கட்டும்... இருவரையுமே எழுதவைத்தது கடவுள்தான்! ஆக, கடவுள்தான் மிகப்பெரிய எழுத்தாளன்!'' என்று மேலே வானத்தைக் காட்டிச் சிரிக்கிறார் கிரேஸி மோகன்.

நீங்கள் காசி, ரிஷிகேஷ் எல்லாம் போயிருக்கிறீர்களா? - வாசகர் விக்ரமின் கேள்விக்கு பளிச்சென வருகிறது பதில்.

''நான் இதுமாதிரி எங்கேயுமே போனது கிடையாது, சார்! வெறுமே படம் பார்த்துக் கதை சொல்றதுதான் என் பாணி; என் பணி! வீட்டில் புத்தகங்களுக்கு நடுவில்தான் நான் அமர்ந்திருப்பேன். தினமும் ஓவியர் கேஷவ் ஒரு கிருஷ்ணர் ஓவியத்தை எனக்கு அனுப்புவார். எனது ஐபேடில் அதைப் பார்த்து ஒரு வெண்பா எழுதுவேன். அதுதான் எனது பூஜை. 'உன் வேலையை நீ ஒழுங்கா செய்; மத்ததை நான் பார்த்துக்கறேன்!’னு கிருஷ்ணர் சொன்னதைத்தான் பின்பற்றுகிறேன்.

நான் இன்ஜினீயரிங் படித்தாலும் நாடகமும், சினிமாவும் எழுத வேண்டும் என்று கடவுள் எனக்கு விதித்துவிட்டார். அதில், எனக்கு மிகவும் சந்தோஷம். பல இன்ஜினீயர்கள் இருப்பார்கள்; ஆனால், கிரேஸி மோகன் ஒருவன்தானே இருக்கிறேன்.

'தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறுவேன்’ என்பதுதான் எனது கொள்கை. எல்லா மதமும் சம்மதமே! ஏதோவொரு வழியைத் தேர்ந்தெடுத்து, அதில் செல்லுங்கள். புராணங்களும், கதைகளும் அதை விளக்க ஏற்பட்டவையே! சில பேர் பல கடவுள்களை மாற்றி மாற்றிக் கும்பிடுவார்கள். கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பையன், 'ஐயா! ஏதாவது கொடுங்கய்யா’னு கேட்டானாம். 'இருப்பா! பிள்ளையார் பூஜையை முடிச்சுட்டு வந்து தரேன்’னாராம் வீட்டுக்காரர். அந்தப் பையன் சும்மா இல்லாம பள்ளம் தோண்ட, கொஞ்சம்போல் தண்ணி வந்ததாம். மறுபடியும் அந்தப் பையன் பிச்சை கேட்டிருக்கான். 'இருப்பா, முருகர் பூஜையை முடிச்சுட்டு வரேன்’னு பதில் வந்தது. இப்படியே பல பூஜைகள் செய்த பிறகு ஒருவழியாக அவர் வந்து வெளியே பார்த்தால், வரிசையா ஏகப்பட்ட பள்ளம் தோண்டி வெச்சிருந்தான் பையன்.

'என்னப்பா! ஒரே பள்ளமா, ஆழமா தோண்டி யிருந்தா ஒரு கிணறாவது கிடைச்சிருக்குமே!’ன்னு வீட்டுக்காரர் கேலியா சொல்ல, பதிலுக்கு அந்தப் பையன், 'நீங்களும் ஒரே சாமியைக் கும்பிட்டிருந்தா இத்தனை நேரம் அந்த சாமியே உங்க முன்னாடி வந்து நின்னிருக்குமே!’ன்னானாம். இது எத்தனை பெரிய தத்துவம்!''

கிரேஸி மோகன் சொல்லிமுடிக்க, வாசகர்கள் முகத்தில் அப்படியொரு பூரிப்பும் நிறைவும்!

தொகுப்பு: பாரதி மித்ரன்

படங்கள்: 'க்ளிக்’ ரவி

ஒருவருக்கு சோகம் அதிகமாக இருக்கும்போது, அதிலிருந்து மீண்டு வருவதற்கு இசை பயன்படுமா? நகைச்சுவை பயன்படுமா?

- பாவணா, கோவை

இரண்டுமே பயன்படும். ஆஸ்திரேலி யாவில் ஒருவர் பார்க்கின்சன் வியாதி, அதாவது கைகால்கள் நிரந்தரமாக நடுங்கிக் கொண்டிருக்கும் அந்த வியாதியில் பாதிக்கப்பட்டிருப்பவருக்கு மருத்துவர்கள் நாள் குறித்துவிட்டனர். ஆனால் அவர் நிறைய டாம் அண்ட் ஜெர்ரி கேசட்டுகள் வாங்கி, ஒரு அறையில் தனியாகப் போட்டு பார்த்துக்கொண்டேயிருந்தாராம். என்ன ஆச்சரியம்... அவரது நோய் குணமாகிவிட்டதாம்.

இசையை எடுத்துக் கொண்டால், நித்யஸ்ரீ மகாதேவன், ஓ.எஸ்.அருண் இவர்களின் இசையை ரசித்துக் கேட்பேன். மற்றபடி எனக்கு இசை நுணுக்கங்களெல்லாம் தெரியாது. சமீபத்தில்தான் படுக்கவைத்து வாசித்தால் அது வீணை, நிற்க வைத்திருந்தால் அது தம்புரா என்று தெரியும் எனக்கு! ஓவியங்கள் வரையவும் பிடிக்கும். ஓவியங்கள் வரையும்போது கூடவே நாடகம் எழுதவும் யோசித்துக் கொண்டிருப்பேன். கவிதையும், வெண்பாவும் எழுதுவது மிகவும் பிடிக்கும். எந்தவொரு கலையையும் சொல்லித்தர முடியாது. சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பார்கள். எந்தக் கலையையுமே சொல்லித் தரமுடியாது. கலையை மட்டும் அல்ல... கடவுளையும்தான்!''

கடவுளிடம் உங்களின் பிரார்த்தனை?

- எம். ரமேஷ், திருச்செந்தூர்

'தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் நின்னைச் சரணடைந்தேன்’ என்பது பாரதியின் பிரார்த்தனை. அதுவே எனக்கும் மிகவும் பிடித்த பிரார்த்தனை! பலனை எதிர்பார்க்காது பணியாற்றுவது என்பது அதுதான்!