Published:Updated:

புத்தக பொக்கிஷம் - ஸ்ரீமத் பஜனாம்ருதம்!

புத்தக பொக்கிஷம் - ஸ்ரீமத் பஜனாம்ருதம்!

புத்தக பொக்கிஷம் - ஸ்ரீமத் பஜனாம்ருதம்!

புத்தக பொக்கிஷம் - ஸ்ரீமத் பஜனாம்ருதம்!

Published:Updated:

ந்தன வருடம் புரட்டாசி மாதம் 30-ம் நாள்... தஞ்சை ஜில்லா- அறந்தாங்கி தாலுகாவில் உள்ள வல்லவாரி கிராமம் பெரும் புண் ணியம் கட்டிக்கொண்டது. ஆம்! இந்தப் புண்ணிய நாளன்று, நாம சங்கீர்த்தனத்தின் ஞானகுருவாம் ஸ்ரீகோபாலகிருஷ்ண பாகவத ஸ்வாமிகள் அவதரித்தது இந்தக் கிராமத்தில்தான்.

புத்தக பொக்கிஷம் - ஸ்ரீமத் பஜனாம்ருதம்!

புருஷார்த்தங்கள் நான்கு என்று எடுத்துச்சொல்கின்றன ஞான நூல்கள். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கில் அதிவிசேஷமானது மோக்ஷம். இதை 'பரமபுருஷார்த்தம்’ எனச் சிறப்பிப்பார்கள். பிறவாப் பெரும்பலனாகிய மோக்ஷகதியை அடைவதற்குப் பல்வேறு வழிமுறை கள் உண்டு. அவற்றுள், இந்தக் கலியுகத்துக்கு ஏற்ற மிக எளிய வழியாக பெரியோர்கள் அடையாளம் காட்டியது, நாம சங்கீர்த்தனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாமதேவர், துகாராம், புரந்தர தாஸர், கனகதாஸர், மீராபாய், கபீர்தாஸர், துளசிதாஸர், சைதன்ய பிரபு, வல்லபாச்சார்யர், ராமதாஸர், அன்னமாச்சார்யார் போன்ற அடியார்களும், தமிழகத்தின் ஆழ்வார்களும் நாயன்மார்களும், போதேந்திராள், ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள், வேங்கடரமண பாகவதர் முதலான மகான்களும் பகவன் நாமாவின் பெருமையைச் சொல்லி, பக்தி வளர்த்தனர்.

பரந்துவிரிந்த பரத கண்டத்தில் பல்வேறு இடங்களில் இப்படி பஜனை சம்பிரதாயம் சிறப்புற்றிருந்தாலும், அந்தந்த இடங்களில் வழங்கும் மொழியில் மட்டுமே சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. தோடயமங்களம், அஷ்டபதி, தரங்கம் ஆகிய அம்சங்களுக்கு மற்ற இடங்களில் வழங்கும் பத்ததிகளில் தனி இடம் கிடையாது. அப்படியின்றி மொழி, மாநில பேதமின்றி அனைத்து மகான்களின் கீர்த்தனங்களையும் அனுஷ்டிக்கும் வகையில், ஸ்ரீமத் பஜனாம்ருதம் எனும் ஞானப் பொக்கிஷம் நமக்குக் கிடைத்தது நாம் செய்த பாக்கியமே! இதற்குக் காரணம், சத்குரு ஸ்ரீகோபால கிருஷ்ண பாகவதரின் திருவருள்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த சுவாமிகள் தன் சகோதரியின் கணவர் வெங்கிட கிருஷ்ணய்யாவின் பராமரிப்பில் வளர்ந்தார்.  சுவாமிகள் தெலுங்கு, சம்ஸ்கிருதம், சங்கீதம் பயின்றதும் மந்திரோபதேசம் பெற்றதும் இவரிடமே! பஜனை சம்பிரதாயத்தில் ஆர்வம்கொண்ட சுவாமிகளுக்கு 'நாமா’விலும் விருப்பம் அதிகமானது. அய்யாவாள், புரந்தரதாஸர், தியாகபிரம்மம் முதலான மகான்களின் சரித்திரத்தைப் படித்தறிந்தவர், தாமும் நாமஸ்மரணையைக் கடைப்பிடித்தார். ஊத்துக்காடு வேங்கட ரமண பாகவதரிடம் ஹரிகதா காலக்ஷேபமும் பரதநாட்டியமும் கற்றுணர்ந்தார்.

புத்தக பொக்கிஷம் - ஸ்ரீமத் பஜனாம்ருதம்!

புதுக்கோட்டையில் தங்கிப் படித்துவந்த தனது மகன்களைப் பார்க்க, அவ்வூருக்கு அடிக்கடி வருகைதந்தார் சுவாமிகள். அந்நாள்களில் இவரது நித்ய பஜனை வழிபாடுகளால் புதுக்கோட்டை நகரம் புண்ணியம் பெற்றது. பிற்காலத்தில் சுவாமிகள் இங்கேயே நிரந்தர மாகக் குடியேறினார்.

தமது 42-வது வயதில் கோவிந்தபுரம் போதேந்திராளைத் தரிசித்தவர், அவரிடம் இருந்து அக்ஷயபாத்ரம் ஸ¨த்ரம் பெற்றார். அதுமுதல், சுவாமிகளின் நித்ய கர்மாக்களில் உஞ்சவிருத்தியும் இடம்பெற்றது. 1947-ல் பண்டரிபுரம் சென்று திரும்பினார். நித்ய கர்மாக்களுக்குத் தடங்கல் இல்லாமல் யாத்திரை செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட, அதன்பிறகு சுவாமிகளின் நாம பிரசார யாத்திரைகள் அதிகமாயின.

குறிப்பாக 1953-ல், சுமார் ஆறு மாத காலம் பரதகண்டம் முழுவதும் சுவாமிகள் மேற்கொண்ட க்ஷேத்தி ராடனத்தால் அவரது புகழ் திசையெங்கும் பரவியது. மிகப் பரந்த நாம சாம்ராஜ்ஜியம் உருவானது.

அன்பாலும் பண்பாலும் பக்தியாலும் அனைவரது மனங்களையும் ஆட்கொண்டார் ஸ்ரீகோபாலகிருஷ்ண பாகவத ஸ்வாமிகள். ஜாதி-மத பேதமின்றி சகலருக்கும் நாமாம்ருதத்தை வாரி வழங்கி, எல்லோர் உள்ளங்களிலும் ஞான ஒளியை ஏற்றிவைத்தார். அவர் காலத்துக்குப் பிறகு அவருடைய மைந்தர் ஸ்ரீஸஞ்சீவி பாகவதர், தந்தையின் திருப்பணியை தான் ஏற்று, ஆயுள் முழுவதும் செவ்வனே நிறைவேற்றினார்.

ஸ்ரீகோபாலகிருஷ்ண பாகவதர் ஏற்றி வைத்த ஞானஒளி மேன்மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் வகையில், அவர் அனுபூதியுடன் பாடிக்கொண்டிருந்த கீர்த்தனைகளுடன் மற்ற கீர்த்தனங்களையும் சேர்த்து, ஸ்ரீமத் பஜனாம்ருதம் எனும் புத்தகம் முதல் பதிப்பாக 1950-ல் வெளிவந்தது.

அடுத்தடுத்து அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்பட்டு ஏழு பதிப்புகள் வெளிவந்திருக்கும் நிலையில், இதோ இப்போது... ஸ்ரீமத் பஜனாம்ருதம் 8-ம் பதிப்பு, ஸ்ரீஸ்ரீராமானந்த ஸ்வாமிகளின்- மதுரை ஸ்ரீசக்ர ராஜ ராஜேஸ்வரி பீடத்தின் சார்பாக வெளிவந்துள்ளது.

மூன்று பாகங்களை உள்ளடக்கி ஒரே புத்தகமாக வெளியாகியுள்ள இந்தப் புத்தகம், பக்தியிலும் பஜனை ஸம்பிரதாயத்திலும் ஈடுபாடு கொண்ட அன்பர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விலை: ரூ.150

வெளியீடு: ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம்
டி-5/ புதிய எண் 14., ராஜம் ரோடு,
(நலம்புரி விநாயகர் ஆலயம் எதிரில்),
டி.வி.எஸ் நகர், மதுரை - 3

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism