Published:Updated:

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

அம்மன் அலங்காரம்...

சென்னை- கோடம்பாக்கம், ஆண்டவர்நகரில் அமைந்துள்ளது  ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோயில். மங்கையரின் குங்குமத்தில் மங்கலகரமாகக் குடியிருக்கும் இந்த அன்னைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் வீதம் 108 நாட்களுக்கு 108 அலங்காரங்களுடன் விசேஷ ஆராதனை நடைபெற்று வருகிறது. 11.6.14 அன்று துவங்கிய இந்த வைபவம், 29.9.14 வரை நிகழ்கிறது.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உலகெங்கும் துன்பங்கள் தொலைந்து சர்வமங்கலங்களும் பெருகும் வகையில், அம்மன் அருளும் அற்புத அலங்கார திருக்கோலங்களில் சில இங்கே உங்களுக்காக..!

படம், தகவல்: என்.சங்கர், சென்னை-24

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

திருவருள் மிகு திருவையாறு!

திருவையாறு. இந்தப் பெயரைக் கேட்டதுமே சட்டென்று நம் நினைவுக்கு வருவது, அப்பர் பெருமானுக்கு ஸ்ரீஐயாறப்பர்  திருக்கயிலாயக் காட்சி தந்தருளிய சம்பவமும், தியாக பிரம்மத்தின்  திருப்பெயரும்தான்! இதுபோக, இன்னும் பல மகிமைகள் இந்தத் தலத்துக்கு உண்டு.

* திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதுபோல், திருவையாறு மண்ணை மிதித்தாலே முக்தி என்பார்கள்.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

* சுரதன் எனும் மன்னனுக்காக இறை ஆணைப்படி நந்திதேவரின் மூலம் கயிலை மலையே இரு பகுதிகளாக இங்கு கொண்டுவரப்பட, பூலோக கயிலாயம் எனும் சிறப்புப் பெற்றது இந்தத் தலம். வெளிப் பிராகாரத்தில் வட கயிலாயம், தென் கயிலாயம் இரண்டும் தனிக் கோயில்களாக அமைந்திருக்கின்றன.

* கடலரசன், வாலி, இந்திரன், மகாலட்சுமி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகளார், ஸ்ரீதியாகராஜர் போன்ற மகான்களால் பாடப்பட்ட தலம் இது.

* இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் காலில் முயலகனுக்கு பதிலாக ஆமை உள்ளது. சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இது.

* திருவையாறு தலத்தில் சிலாத முனிவருக்கு மகனாய் அவதரித்த நந்திதேவர், சுயசா தேவியை மணந்து ஸ்ரீஐயாறப்பரை பூஜித்து, சிவசொரூபம் பெற்று, சிவ வாகனம் ஆனார். இத்தலத்தின்  விழாக்களில் 'நந்திதேவர் திருமண திருவிழா’ வெகு சிறப்பானது.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

* ஸ்ரீஓலமிட்ட விநாயகரின் திருவருளால் சுந்தரரும், சேரமான் நாயனாரும் ஈசனைத் தரிசிப்பதற்காக காவிரி வெள்ளம் விலகி வழிவிட்ட தலம் இது.

* திருக்கடவூரில் மார்க்கண்டேயனுக்கு அருளியது போன்று, இந்தத் தலத்திலும் சிறுவன் ஒருவனுக்கு அருளினார் ஈசன். சுசரிதன் எனும் சிறுவனைப் பிடிக்க வந்த யமனை விலக்கி, அந்த சிறுவனை ஆட்கொண்டதால் இறைவனுக்கு 'ஆட்கொண்டார்’ என்ற பெயரும் உண்டு. இவரின் சந்நிதி, கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் உள்ளது.

* ஸ்ரீஐயாறப்பரை பூஜித்து வந்த அர்ச்சகர் ஒருமுறை காசிக்குச் சென்றுவிட்டார். இதனால், ஆலயத்தில் பூஜை முறை தவறும் நிலை ஏற்பட்டது. அப்போது ஐயாறப்பரே அந்த அர்ச்சகரின் வடிவில் வந்து தன்னைத்தானே பூஜித்துக்கொண்ட சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு.

* ஸ்ரீஐயாறப்பரின் கூந்தல் (சடை) இன்றும் வளர்வதாக ஐதீகம். எனவே, முதல் பிராகாரத்தில் வலம் வந்தால் ஈசனின் சடையை மிதிக்கும் பாவம் உண்டாகும் என்பதால், இங்கு பக்தர்கள் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

* மூன்றாம் பிராகாரத்தில், தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி 'ஐயாறா’ என்று அழைத்தால், அது ஏழு முறை எதிரொலிக்கும்!

- அ.விஜய்பெரியஸ்வாமி, கல்பாக்கம்

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சிறுவாபுரியில் கல்யாண மஹோற்ஸவம்!

வல்வினைகள் யாவற்றையும் களைந்து கந்தப்பெருமான் தன் அடியார்களுக்கு வீடு பேறு தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம் சிறுவாபுரி. இங்கே, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழுவின் 5-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 10.8.14 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணியளவில் வள்ளி மணவாளப் பெருமானுக்கு திருக்கல்யாண மகோற்ஸவம் நடைபெறவுள்ளது. கல்யாணத் தடைகளும் தோஷங்களும் உள்ள அன்பர்கள் இந்த வைபத்தில் கலந்துகொண்டு, முருகனின் திருவருளால் குறைகள் நீங்கி, கல்யாண வரம் பெற்று வரலாம்.

- மணி, சென்னை-44

ஸ்ரீசாஸ்தாவின் அருள் பெறுவோம்!

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி - கரந்தையார் பாளையத்தில் பூரண- புஷ்கலா தேவியருடன் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் 'ஸ்ரீகுளத்தூரில்ஐயன்’ என்ற தர்மசாஸ்தா. கலியுக வரதனாம் ஸ்ரீசாஸ்தா கொலுவிருக்கும் இந்தக் கோயிலில், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதிதீர்த்த ஸ்வாமிகளின் பரிபூரண அனுக்கிரகத்துடன், ஸ்ரீசாஸ்தா ப்ரீதி வைபவம் நிகழவுள்ளது.

நிகழும் ஜய வருடம், ஆடி மாதம், 31-ம் தேதி சனிக்கிழமை (16.8.14) அன்று நிகழவுள்ள இந்த வைபவத்திலும், மறுநாள் ஞாயிறன்று நிகழும் ஸ்ரீசூரியநாராயண பூஜையிலும் பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெற்றுச் சிறக்கலாம்.

_ சந்திரசேகரன், கல்லிடைக்குறிச்சி

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

கேட்கிறார்கள்...

வால்மீகி ராமாயணம், தமிழில் கம்ப ராமாயணம் போன்று வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு ராமாயணங்கள் உண்டு என அறிந்தேன். இப்படி மொத்தம் எத்தனை ராமாயணங்கள் உள்ளன? இதுபற்றிய தகவல்கள் அல்லது புத்தகங்கள் குறித்த விவரங்கள் அறிந்தவர்கள் சக்தி சபாவில் பகிர்ந்துகொள்ளலாமே!

- வந்தனா கார்த்திகேயன், உடுமலைப்பேட்டை

தேவார மூவரில் ஒருவரான திருஞானசம்பந்தருக்குத் தனிக்கோயில் ஒன்று உண்டு என்றும், அது 'நம்பர் கோயில்’ என அழைக்கப்படுவதாகவும் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். இந்தக் கோயில் எந்த ஊரில் உள்ளது, நம்பர் கோயில் என அழைக்கப்படுவதன் தாத்பர்யம் என்ன என்பன குறித்த விவரம் அறிந்தவர்கள் தகவல் தந்து உதவினால், பயனுள்ளதாக இருக்கும்.

- எஸ்.ரமேஷ், காரைக்குடி

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி சபா', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.