Published:Updated:

திருச்செந்தூர் முருகன் கோயில் ஜூலை மாத உண்டியல் வசூல் ரூ.1.43 கோடி

இ.கார்த்திகேயன்
திருச்செந்தூர் முருகன் கோயில் ஜூலை மாத உண்டியல் வசூல் ரூ.1.43 கோடி
திருச்செந்தூர் முருகன் கோயில் ஜூலை மாத உண்டியல் வசூல் ரூ.1.43 கோடி

றுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை மாத உண்டியல் வசூல், ரூ.1 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 124 ரூபாய் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில், ஒவ்வொரு மாதமும் இரு முறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.  ஜூலை மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி, திருக்கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதி தலைமையில் நடந்தது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த முருக பக்தர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய உண்டியல் எண்ணும் பணி, இரவு வரை தொடர்ந்தது.

 இதில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 1 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 124 ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளது. இதில்,188 வெளிநாட்டு கரன்சிகளும்  855 கிராம் தங்கமும், 15 ஆயிரத்து 400 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளன.