Published:Updated:

தமிழக கோயில்களில் விஐபி தரிசனம் ரத்து!

தமிழக கோயில்களில் விஐபி தரிசனம் ரத்து!
தமிழக கோயில்களில் விஐபி தரிசனம் ரத்து!
தமிழக கோயில்களில் விஐபி தரிசனம் ரத்து!

சென்னை: விழாக்காலங்களில் தமிழக கோயில்களில் வழங்கப்பட்டு வந்த விஐபி தரிசனத்திற்கான பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக கோயில்களில் விஐபி தரிசன முறையை ரத்து செய்க்கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது,விழாக்காலங்களில் தமிழக கோயில்களில் வழங்கப்பட்டு வந்த விஐபி தரிசனத்திற்கான பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

##~~##
அதற்கு பதிலாக பெயர், பதவி ஆகியவற்றை கொண்டு பேட்ஜ் வழங்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளதாகவும்,அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே விஐபி முறையில் அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த பேட்ஜ் வழங்கும் முறையில் பிரதமர்,கவர்னர்,முதல்வர்கள் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.