Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

Published:Updated:

வைஷ்ணவத்தின் நாதன் விஷ்ணு

விஷ்ணுவே பரம்பொருள் என்று கூறும் வேத வாக்கியத்தின் ஸாரமாக மஹாபாரதம்  சாந்தி பருவத்தில் ஒரு வருணனை காணப்படுகிறது:

அருட்களஞ்சியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலக மாந்தர் தமது நுண்ணறிவினால் அறிய வேண்டிய, ஆத்மாவில் ஒன்றியுள்ள பரம்பொருளை அறியாத நிலையிலேயே உள்ளனர். விஸ்தீரணத்தில் பூமியைவிட நீர்ப் பரப்பு உயர்ந்தது. ஒளி, நீரைப் போலல்லாமல் எங்கும் வியாபித்து நீரைவிட உயர்ந்ததாகிறது. வாயு இல்லாத இடமே இல்லையாதலால், ஒளியைவிடக் காற்று உயர்ந்ததாகும்.

இந்தக் காற்றையும் தன்னுள் அடக்கிய எங்கும் நிறைந்த ஆகாயமோ, காற்றுக்கும் உயர்வாகக் காண்கிறது. மனமோ ஆகாயத்தைக் கடந்து செல்லக்கூடிய வலிமை பெற்றிருப்பதால் ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது. மனம் லயிக்கும் விஷயங்களில் உள்ள தத்துவத்தைப் புரிந்துகொள்ளும் வலிமை அறிவுக்கே ஏற்பட்டுள்ளதால் மனத்தைக் காட்டிலும் அறிவே சிறந்தது. காலம் காட்டும் வழியிலேயே அறிவு செல்ல வேண்டியிருப்பதால் அறிவுக்கும் மேம்பட்டது காலம்.

ஆனால், பிரபஞ்சமே தானாகி, மேலே சொல்லப்பட்ட எல்லா பூதங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவனான ீமந்நாராயணனோ இவை எல்லாவற்றுக்கும் மேம்பட்டவர். பகவான் முதல், நடு, முடிவு (ஆதி மத்யாந்தம்) என்ற மூன்று நிலைகளும் அற்றவர். இந்த மூன்று நிலைகளும் அற்றவராததலால், இவரது ஸ்தானம் மாற்றப்படவே முடியாதது. இவர் சகல துக்கங்களும் அண்ட முடியாத நிலையிலேயே எப்போதும் இருப்பதால் மிக உயர்ந்தவர் ஆவார். துக்கத்துக்கு எல்லையுண்டு. இவருக்கோ எல்லையே இல்லை. இவரே விஷ்ணு எனப்படுவோர். இத்தகைய பெருமைகளைத் தாங்கிய விஷ்ணு உலக ரக்ஷகனாகத் திகழ்கிறார்.

அருட்களஞ்சியம்

மந்நாராயணனைச் சரணடைந்தோரின் இக வாழ்வில் ஏற்படும் இன்னல்களிலிருந்து அவர்களை மீட்டுப் பரத்துக்கு அவர்களைப் பாத்திரமாகச் செய்கிறார். இந்த ஸத்திய வாக்கியமே மஹாவிஷ்ணுவின் எல்லையற்ற கருணைக்கும் வைஷ்ணவத்தின் சிறப்புக்கும் ஒரு சான்றாகும்.

மேலும் ராமாநுஜரது விசிஷ்டாத்வைத சித்தாந்தமும், மத்வருடைய த்வைத சித்தாந்தமும் இந்த சர்வ வல்லமையுள்ள மந் நாராயணன், அநேக அம்சங்களாகவும் அவதாரங்களாகவும் நம்மிடையே உலவி நம்மையாள்கிறான் என வலியுறுத்துகின்றன. ஆண்டவன் அன்புக்கும் அசஞ்சலமான (அசையாத) பக்திக்கும் கட்டுப்பட்டவன், அவ்வித மனப்பான்மையுள்ளோர் என்றும் அவனைச் சுலபமாக அடைந்துவிடுவர் என்பது உண்மை.

(1965 விகடன் தீபாவளி மலரில் இருந்து) ஓவியம்: கோபுலு

அருட்களஞ்சியம்

வாரியார் வாழ்க்கையில்...

பல ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்க்கைச் சரிதத்தை வாரியார் சுவாமிகள் ஒரு நூலாக வெளியிட்டார். வாரியார் வாழ்க்கை வரலாறு என்ற அந்த நூலில் அவர் கூறியுள்ள சில அனுபவங்கள்...

அருட்களஞ்சியம்

நான் 19 வயதிலிருந்தே என் தந்தைக்குத் தெரியாமல் விரிவுரை செய்யத் தொடங்கினேன். என் தந்தையார் காங்கேயநல்லூரில் ராஜகோபுரம் கட்டியதில் 5,000 ரூபாய் கடன்பட்டிருந்தார். சென்னையில் நான் செய்த விரிவுரை மூலம் வந்த பணத்தைக் கொண்டு தந்தையார் பட்டிருந்த கடனை அடைத்தேன்.

என்னுடைய தந்தை ''உன்னை வீணை வித்துவானாக்க நினைத்தேன். நீ விரிவுரை வித்துவானாக ஆகிவிட்டாய். அதுதான் இறைவன் திருவுளம் போலும்...'' என்று கூறி ஆசீர்வதித்தார்.

ஒருமுறை  கல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி ரயில் பயணம். வண்டி போகும்போது என் அருகில் இருந்த அன்பர் ஒருவர் ஜன்னல் கதவை ஏற்றுவதும் இறக்குவதுமாக இருந்தார்.

அதைப் பார்த்த மற்றொரு அன்பர் ''இது என்ன ஓயாமல் கதவை ஏற்றுகின்றீர்; இறக்குகின்றீர்'' என்றார்.

அப்போது அடியேன் ''இது கடவுள் செய்யும் வேலையாயிற்றே?'' என்றேன்.

''இது கடவுள் வேலையா?''

''ஆம், கடவுள் அந்தந்த உயிர்களின் புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப சில உயிர்களை மேல் நிலைக்கு ஏற்றுகின்றார். சில உயிர்களை கீழ் நிலைக்கு இறக்குகின்றார். சிறையில் இருப்பவரை் பெரும் பதவியில் ஏற்றுகின்றார். பெரும் பதவிகளில் இருப்பவரை வெறும் ஆளாகச் செய்கின்றார். வறியவனைச் செல்வச் சீமானாகவும், செல்வச் சீமானை வறியவனாகவும் செய்கின்றார். குப்பைத் தொட்டியை கோபுரமாக்குகின்றார். பெரிய அரண்மனையைக் கழுதை ஒதுங்கும் குட்டிச்சுவராக்குகின்றார். இதுதான் இறைவன் புரியும் வேலை'' என்றேன்.

எனக்கு அஜீரணம் என்பது என்ன என்று இன்றுவரை தெரியாது. காரணம் அரசர் வீட்டு விருந்தானாலும், அளவோடு உண்பவன். ஒரு முஸ்லிம் அன்பர் என்னிடம் ''பசியெடுத்தபின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசியடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக்கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான்'' என்று கூறினார். இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.

(14.11.93 ஆனந்தவிகடனில் இருந்து)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism