செப்டம்பர் 2 முதல் 15 வரை
சூரியன் 13ம் தேதி வரை பூரம் நட்சத்திரத்திலும், 14ம் தேதி முதல் உத்திரம் நட்சத்திரத்திலும் செல்கிறார்.
செவ்வாய் 5ம் தேதி வரை விசாக நட்சத்திரத்திலும்; 6ம் தேதி முதல் அனுஷத்திலும்,புதன் 15ம் தேதி வரைஅஸ்தம் நட்சத்திரத்திலும் 16ம் தேதி முதல் சித்திரை நட்சத்திரத்திலும் செல்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குரு பகவான் ஆயில்யத்திலும், சுக்ரன் 11ம் தேதி வரை மகம் நட்சத்திரத்திலும்; 12 முதல் பூரம் நட்சத்திரத்திலும், சனி 8ம் தேதி வரை சுவாதி நட்சத்திரத்திலும்; 9 முதல் விசாகத்திலும் பயணிக்கிறார்கள்.
ராகு சித்திரையிலும், கேது ரேவதி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர். அசுவினி, கிருத்திகை, பூசம், அஸ்தம், மூலம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கடன் குறையும். வீடு, மனை அமையும். வழக்கில் திருப்பம் உண்டாகும்.
பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், விசாகம், பூராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திரக் காரர்களுக்கு அலைச்சலும், சிறு சிறு விபத்துகளும் வந்து நீங்கும்.





நட்சத்திர பலன்கள்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்