Published:Updated:

திருமகள் நின்ற திருத்தலம்!

ஸ்ரீபக்தவத்சல பெருமாள்

சென்னை, திருநின்றவூரில் அழகுற அமைந்திருக்கிறது 58வது திவ்ய தேசம். 1800 வருட பழைமையான இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். ஒருமுறை, வைகுண்டத்தில் பெருமாளோடு கோபித்துக்கொண்டு, பூமிக்கு வந்துவிட்ட லட்சுமி தேவி இங்கேயே தங்கிவிடுகிறாள். அப்படி லட்சுமி வந்து நின்ற தலம்தான் திருநின்றவூர் திருத்தலம்.

லட்சுமியின் கோபம் தணிக்க பெருமாள் சார்பாக, லட்சுமி தேவியின்  தந்தை சமுத்திரராஜன் மற்றும் வருண பகவான் ஆகியோர் இங்கு வந்தனர். அப்போது லட்சுமி தேவியின் தந்தை, 'என்னைப் பெற்ற தாயே' என்று அழைத்தமையால், இங்குள்ள லட்சுமி சந்நிதி 'என்னைப் பெற்ற தாயார் சந்நிதி’ என்ற பெயருடன் விளங்குகிறது. தாயார் இங்கேயே தங்கிவிட, பெருமாளும் ஸ்ரீபக்தவத்சல பெருமாள் என்ற பெயருடன் இங்கேயே தங்கி, பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகின்றார்.

திருமகள் நின்ற திருத்தலம்!

விண்ணுலகில் இருக்கும் திருப்பாற்கடல்போல் பறந்து விரிந்திருக்கும் ஏரியின் கரையில் இந்த திவ்யதேசம் அமைந்துள்ளது. திருக்கோயிலுக்கு மேற்கே திருக்குளம் உள்ளது. திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற இந்தக் கோயிலில், கிரக சக்கரம் ஒன்று உள்ளது. தாயாரின் கிரக நிலையைக் குறிக்கும் அந்தச் சக்கரத்தில் கட்டத்துக்கு ஒன்பது என்று மொத்தம்

81 நாணயங்களை வைத்து தொடர்ந்து ஒன்பது வெள்ளி அல்லது ஒன்பது பௌர்ணமி பூஜை செய்தால், குழந்தை பாக்கியம், தனவரவு, கல்யாண யோகம் அமையும் என்று ஐதீகம்.

கு.அஸ்வின்

படங்கள்: பா.அருண்

அடுத்த கட்டுரைக்கு