சென்னையில்... வைகுண்டம்!

ஒரு மாலை வேளை, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில், கூட்டம் அலைமோதியது. காரணம்... 'வைகுண்டம்’ என்ற தலைப்பில் அங்கு நிகழ்ந்த நாலாயிர திவ்ய பிரபந்த நடன நிகழ்ச்சி. 'தேர்ட் ஐ கிரியேஷன்ஸ்’ என்ற அமைப்பினர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

''நடனத்தின் மூலம் வைணவ திவ்ய தேச திருத்தலங்களின் பெருமையைச் சொல்லும் வித்தியாசமான நிகழ்ச்சி இது' என்னும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களில் ஒருவரான ஆஷா தொடர்ந்து, ''திவ்யதேசங்கள் நூற்று எட்டு. அதில் நூற்று ஆறு தலங்களை பூமியில் தரிசிக்கலாம். ஆழ்வார்களும், மகான்களும் பாடிச் சிறப்பித்த அந்தத் தலங்களைப் பற்றியும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றியும் இன்றைய இளைஞர்களுக்கு சொல்லணும்னு ஆசைப்பட்டோம். அவர்களுக்கு எதையும் வித்தியாசமா சொன்னால்தான் பிடிக்கும் இல்லையா? அதற்காகத்தான் இந்த விசேஷ முயற்சி' என்கிறார்.

அவர் கூறியதை மெய்ப்பித்தது நடன நிகழ்ச்சி! மல்டி மீடியா தொழில்நுட்பத்தில் திவ்யதேச தலங்கள் குறித்த படங்கள் திரையில் விரிய... திவ்ய பிரபந்த பாடல்களுக்கு ஏற்ப ஷைலஜா குழுவினர் நாட்டியமாடினார்கள்.

ரங்கத்தில் இருந்து ஆரம்பிக்கிறது நிகழ்ச்சி. நடனக் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து, ஆதிசேஷன் மீது ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை செய்துகாட்ட, கைத்தட்ட லால் அதிர்ந்தது அரங்கம்.

அடுத்து, 'சங்கினோடும்... நேமியோடும் தாமரைக் கண்களோடும்...’ என்று அகச்சுவை ததும்ப திருக்குறுங்குடி பெருமாளைப் போற்றும் நம்மாழ்வாரின் பாசுரத்துக்கு... விநய பாவனைகளாலும், கசிந்துருகும் கண்ணசைவு களாலும் ஆழ்வாரையே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்!

வைணவ திவ்ய தேசங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியும் எல்லோரையும் கவர்ந்தது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஏ.வி.வர்கீஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் எடுத்த புகைப்படங்களாம் அவை.

'வைகுண்டம் வைஷ்ணவா யாத்ரா’ என்ற பெயரில் பக்தர்களை வைணவத் தலங்களுக்கு நேரிலேயே அழைத்துச் சென்றது போல் அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சி.

''இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்தவேண்டும் என்று அன்பர்கள் பலரும் கேட்கிறார்கள். ஆகவே இந்த நிகழ்ச்சியை மீண்டும் காணும் வாய்ப்பு உங்களுக்கு நிச்சயம் உண்டு' என்று சொல்லும் ஆஷா, ''நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை சிதிலம் அடைந்த வைணவக் கோயில்களுக்கு வழங்க திட்டமிட்டிருக்கிறோம்' என்கிறார் முத்தாய்ப்பாக.

எண்ணமும் பணியும் இனிதே நிறைவேறட்டும்.