Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

ஆத்மாவுக்கு ஐஸ்!வீயெஸ்வி, ஓவியம்: சசி

கலகல கடைசிப் பக்கம்

ஆத்மாவுக்கு ஐஸ்!வீயெஸ்வி, ஓவியம்: சசி

Published:Updated:

கோயில் வளாகத்தில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்ததை நான் ஒட்டுக் கேட்கவில்லை; அவர்கள் உரத்து உரையாடியது தானாகவே என் காதுகளை வந்தடைந்தது.

''ஏன் பங்கஜம்... உன் மாமனார், மாமியார் ரெண்டு பேரையும் முதியோர் இல்லத்துல கொண்டு போய்ச் சேர்த்துட்டியாமே..?''

கலகல கடைசிப் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆமா... அதுகளை வீட்டுல வச்சுட்டு என்னால சமாளிக்க முடியலே...'

''ஏன் அப்படிச் சொல்றே? வயசானவங்க வீட்ல இருந்தா உதவியாத்தானே இருக்கும்?''

''நீங்க வேற மாமி.. உதவியாவது; வெறும் உபத்திரவம்தான்..!''

''அப்படி என்னதான் உபத்திரவம் பண்ணாங்க?''

''காலை எழுந்ததுலேர்ந்து மாமனார் பிலுபிலுன்னு நச்சரிச்சுட்டே இருப்பார். டெய்லி பேப்பரை அவர்தான் முதல்லே படிக்கணும். பேப்பர் கொஞ்சம் கசங்கிப் போயிருந்தா, வீடு ரெண்டுபடும். அதே மாதிரி காபி கொஞ்சம் ஸ்ட்ராங் கம்மியாவோ, சூடு குறைவாவோ இருந்தா அவ்ளோதான்... ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பிச்சுடுவார்! வீட்டுக்கு என்னைத் தேடிண்டு யாரும் வரக்கூடாது. நானும்் யாரிடமும் போன்ல பேசக்கூடாது. வீட்ல எனக்குக் கொஞ்சம்கூட பிரைவஸியே கிடையாது!''

''வயசானவங்கன்னா இதெல்லாம் சகஜம்தானே பங்கஜம்? நாமதான் கொஞ்சம் அனுசரிச்சுப் போகணும்..!''

''முடியலையே மாமி! மாமனார்தான் இப்படின்னா, மாமியார் சரியான பத்ரகாளி. வேறு தினுசுல என் உயிரை வாங்குவா..!''

''அவங்க ரொம்ப சாதுவாச்சே, பங்கஜம்..?''

''வெளிலேர்ந்து பார்க்கறதுக்குதான் சாது. எனக்குத்தானே தெரியும் அவங்களோட லட்சணம்! நான் கிச்சனுக்குள் போனா, பின்னாடியே வந்து ஏதாவது தப்பு கண்டுபிடிப்பா. மேடை ஏன் அழுக்கா இருக்கு, கத்தரிக்காய் ஏன் புழுவா இருக்கு, சாதம் ஏன் தினமும் குழையறது... இப்படி ஆயிரத்தெட்டு கேள்வி். நான் டி.வி. பார்க்க உட்கார்ந்தா, வேணும்னே ரிமோட்டைப் பிடுங்கி சேனலை மாத்துவா. அப்பாடா... ரெண்டு பேரையும் ஹோம்ல கொண்டு தள்ளினப்புறம்தான் நிம்மதியா இருக்கேன்!''

''இது பாவமில்லையா பங்கஜம்? நீ இங்க வசதியா இருக்கறச்சே, அவங்க அங்க தனியா திண்டாடிட்டு இருக்கணுமா?''

''ஒரு பாவமும் இல்லே மாமி..! அங்கே என்ன, சாப்பாட்டுக்குக் குறைச்சலா? இல்லையே! இன்னும் பத்து வருஷமோ, இருபது வருஷமோ... அதுக்குப் பின்னாடி அவங்களுக்குத் திதி கொடுக்கப் போறது நாங்கதானே! அத நல்லா சிரத்தையா பண்ணி, வாத்தியாருக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு போட்டு, போனவங்களோட ஆத்மாவை திருப்திப்படுத்திட்டா போச்சு!'

பங்கஜத்தின் விசித்திரமான இந்த லாஜிக்கை அடியேனால் ஜீரணிக்க முடியவில்லை. உங்களால் முடிகிறதா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism