சென்னை போரூரில் உள்ள மதனந்தபுரத்தில், சாந்த சொரூபியாக இருந்து அருள்பாலிக்கின்றனர் முப்பெருந்தேவியரும்! 'ஊருக்கு ஒரு கோயில் வேண்டும்’ எனும் நோக்கில், காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் ஆசியுடன், மதனந்தபுரம் மக்களால் கட்டப்பட்ட கோயில் இது!

மும்பை மகாலக்ஷ்மி, கூத்தனூர் சரஸ்வதி, பட்டீஸ்வரம் துர்கை ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் இங்கே தரிசிக்கலாம். விநாயகர், சக்தி விநாயகராகவும், முருகப்பெருமான், திருச்செந்தூர் செந்திலாண்டவராகவும் மற்றும் குரு தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர்.

முப்பெருந்தேவியர்
முப்பெருந்தேவியர்

செந்தில் ஆண்டவர்  சந்நிதியைச் சுற்றி, பாலமுருகன், பழநிஆண்டவர், வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான்  என பல தோற்றங்களில் காட்சி தருகிறார் கந்தக் கடவுள்.

முப்பெருந்தேவியர்
முப்பெருந்தேவியர்

புதன்கிழமைதோறும் சரஸ்வதிக்கும், வெள்ளிக்கிழமைகளில் லக்ஷ்மிக்கும் செவ்வாயன்று

முப்பெருந்தேவியர்

துர்கைக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 13 ஆண்டுகளாக, ஒவ்வொரு வருட மே மாதத்திலும் ராதா கல்யாணம் மற்றும் 'மட்டைத் தேங்காய் சங்கல்பம்’ செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஆடி மாதத்தில் ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், மற்றும் திருவிளக்குப் பூஜை ஆகியவை சிறப்புற நடைபெறுகின்றன. ஆடிப்பூர நாளில், மூன்று தேவியருக்கும் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, அந்த வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகின்றன. பௌர்ணமி பூஜையும் இங்கு விசேஷம்!

சங்கடஹர சதுர்த்தி, கந்த சஷ்டி, சித்ரா பௌர்ணமி, விநாயகர் சதுர்த்தி என அனைத்து வைபவங்களும் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. அக்கினி நட்சத்திர முடிவன்று 'கோடாபிஷேகம்’ (கோடை அபிஷேகம்) நடத்தப்படுகிறது. மாணவர்கள்,  தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டி பிப்ரவரி மாதந்தோறும் சரஸ்வதிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.

முப்பெருந்தேவியரும் அமைந்திருப்பதால், நவராத்திரி விழா, கொலு, கச்சேரி என அமர்க்களப்படுகிறது இந்தக் கோயில். அதேபோல், கடந்த 7 வருடங்களாக சண்டி ஹோமமும் பிரமாண்டமாக இங்கு நடைபெறுகிறது.

- பி.ஆனந்தி

 படங்கள்: இரா.வருண் பிரசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு