Published:Updated:

நேர்த்திக்கடனாக... அரிசி, வெல்லம், பருப்பு, பயறு!

திருமண வரம் தருவார்!

துரையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது டி.கல்லுப்பட்டி. இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள சங்கரந்தேவன்பட்டியில் அழகுற அமைந்து உள்ளது ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்.

சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயம் இது. சாத்தூர் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ஜமீனில் திவானாக இருந்த கண்டியத் தேவன் என்பவரால் கட்டப்பட்ட கோயில் இது என்கிறது ஸ்தல வரலாறு.

ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, கல்யாண கோலத்தில் அழகுறக் காட்சி தருகிறார் ஸ்ரீநிவாசபெருமாள். கிழக்கு நோக்கிய மூலவரை தரிசித்தால், நம் வாழ்க்கையில் வளம் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள். கருடாழ்வார், ஆஞ்சநேயர், மகாலட்சுமி,  நரசிம்மர், துர்கை, விநாயகர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

நேர்த்திக்கடனாக... அரிசி, வெல்லம், பருப்பு, பயறு!
நேர்த்திக்கடனாக... அரிசி, வெல்லம், பருப்பு, பயறு!

இங்கு வந்து ஸ்ரீநிவாச பெருமாளை தரிசித்து பிரார்த்தித்தால், பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் நடந்தேறும்; பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்குவோருக்கு விரைவில் குழந்தை வரம் கிடைக்கும். திருமணம் வேண்டி இங்கு கோ பூஜை நடத்தி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும், நேர்த்திக்கடனாக அரிசி, வெல்லம், பருப்பு, பயறு ஆகியவற்றை எடைக்கு எடை வழங்குகின்றனர் பக்தர்கள்.

நேர்த்திக்கடனாக... அரிசி, வெல்லம், பருப்பு, பயறு!

புரட்டாசி மாதத்தில் இங்கு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தால், சகல சுபிட்சமும் பெறலாம் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

-  ஹா.தௌஜிதா பானு

படங்கள்: ம.நிவேதன்