Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

அம்மாவீயெஸ்வி, ஓவியம்: சசி

கலகல கடைசிப் பக்கம்

அம்மாவீயெஸ்வி, ஓவியம்: சசி

Published:Updated:

ண்களைக் கசக்கிக் கொண்டே வந்தான் என் கல்லூரித் தோழன். அழுது அழுது அவன் முகம் வீங்கியிருந்தது.

''என்ன ஆச்சு? ஏதாவது பிரச்னையா?'' என்றேன்.

''பிரச்னை எதுவும் இல்லை. அம்மாவை நினைச்சேன். அழுகையைக் கட்டுப்படுத்த முடியலே...' என்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திடுக்கிட்டேன். ''நீயுமாடா..?'' என்றேன் ஆச்சரியத்தோடு!

'என்ன நீயுமாடா..? நான் மட்டும் எப்படிடா விதிவிலக்கா இருக்க முடியும்? மத்தவங்களைவிட என்கிட்ட அம்மாவுக்கு பிரியம் ஜாஸ்தி! நான் கேட்காமலேயே எனக்கு வேண்டியதை எல்லாம் அவங்க செஞ்சு கொடுப்பாங்க. ஆனா, அவங்களுக்குன்னு நான் இதுவரைக்கும் எதுவும் செஞ்சதில்லே! போன தீபாவளியின்போது ஒரு புடைவைகூட அவங்களுக்கு எடுத்துக் கொடுக்காம போயிட்டேன்...''

கலகல கடைசிப் பக்கம்

எனக்குப் புரிந்தது. தோழன் தொடர்ந்தான்...

''நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சப்போ எனக்குச் சம்பளம் ரொம்பக் கம்மி. அம்மாவுக்குன்னு ஸ்பெஷலா எதுவும் செய்ய முடியலே. சம்பளம் கணிசமா உயர்ந்தபோது, எனக்குன்னு ஒரு குடும்பம் வந்து கையைக் கட்டிப்போட்டுடுச்சு. இப்போ தீபாவளி நெருக்கத்துல அம்மா பத்தின நினைப்பு ரொம்பவே வருது'' என்ற தோழன், என் தோளில் சாய்ந்தான்.

'அம்மாவுக்கு ஏதாவது செய்யணும்கிற உன் நினைப்பும், அம்மா மீதான அன்புமே போதும். இந்த முறை ஊருக்குப் போகும்போது உன்னால முடிஞ்ச ஏதாவது ஒரு பொருள், அம்மாவுக்குப் பிடிச்ச இனிப்பு ஏதாவது வாங்கிட்டுப் போ! அம்மா மனம் நெகிழ்ந்து உன்னை ஆசீர்வதிப்பாங்க! கவலைப்படாதே!' என்றேன் ஆறுதலாக.

'தாயன்பைப் போலக் கலப்படமே இல்லாத பூரணமான அன்பை வேறு எங்குமே காண முடியாது.’

'பரிபூரணமான அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும் அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடியும்.’

அம்மாவின் பெருமைகளை 'தெய்வத்தின் குரலி’ல் இப்படி பத்திப் பத்தியாக விளக்குகிறார் பரமாசார்யார்.

''இந்தச் சரீரத்துக்கு மட்டும் அம்மாவாக இல்லாமல், உயிருக்கும் அம்மாவாக இருக்கிற ஒருத்தி இருக்கிறாள். இந்த உயிரின் அம்மாதான் நமக்கு சாசுவதமாக, நிரந்தரமாக, எந்நாளும் தாயாராக இருந்துகொண்டிருக்கிறாள்.

எதுவுமே கேட்டுப் பெறத் தெரியாத குழந்தைக்குத் தேவையானதை அதன் தாய் எப்படி தானே அக்கறையுடனும் அன்புடனும் பார்த்துப் பார்த்துச் செய்கிறாளோ, அப்படியே ஜகன்மாதாவாகவும், கருணாமூர்த்தியாகவும் உள்ள அம்மா, தன்னிடம் உண்மையான பக்தி வைத்தவர்கள் வாய்விட்டு எதுவும் கேட்காவிட்டாலும்கூட, தானாகவே அவர்களுக்கு இகலோகத்தில் வித்தை, செல்வம், தேக காந்தி முதலியனவற்றைத் தந்து, பின்பு ஞானத்தில் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அருள் புரிவாள்.'

மகா பெரியவரின் இந்த அமுத வாக்கைப் பிரதி எடுத்து, சற்றுமுன் வருத்தப்பட்டுவிட்டு சென்ற என் கல்லூரிநாள் தோழனுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism