சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

'மூட்டு வலி போயிருச்சு!'

ஈரோடு முகாமில் உற்சாக வாசகர்கள்!

'மூட்டு வலி போயிருச்சு!'
##~##
க்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து மனவளக் கலை யோகா உடற்பயிற்சி முகாமை தமிழகத்தின் பல ஊர்களிலும் நடத்தி வருகின்றன. கடந்த 21.8.11 அன்று, 'மஞ்சள் நகரம்’ எனப் புகழப்படும் ஈரோடு மாநகரில், மனவளக் கலை மன்றம் டிரஸ்ட் மையத்தில் முகாம் நடைபெற்றது.

கோவை, நாமக்கல், சேலம் எனச் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும், ஏன்... சென்னையில் இருந்தும்கூட வாசகர்கள் வந்திருந்தனர்.    

'இன்னிக்குக் கிருஷ்ண ஜயந்தி. ஆனாலும், இந்தப் பயிற்சியில் கலந்துக்கணுங்கறதுக்காகச் சீக்கிரமே எழுந்து, பலகாரங்களையெல்லாம் செஞ்சு வைச்சுட்டு, முகாமுக்கு வந்திருக்கேன். நல்லதொரு பண்டிகை நாள்ல, நல்லதொரு பயிற்சியைக் கத்துக்கிட்டதுல பூரிச்சுப் போயிருச்சு மனசு!'' எனக் குதூகலத்துடன் சொன்னார் வாசகி ராஜலட்சுமி.

''நின்னுக்கிட்டே பாக்கற வேலை. அதனால, ரொம்ப நாளா மூட்டுவலியால அவஸ்தைப்பட்டுக்கிட்டிருக்கேன். சக்திவிகடன்ல 'வாழ்க வளமுடன்’ தொடர் படிக்கிறப்பவே, இந்தப் பயிற்சி எடுத்துக்கிட்டா வலியெல்லாம் போயேபோயிடும்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு. இப்ப... இந்த இரண்டு மணி நேர முகாம்ல வந்து கலந்துக்கிட்டுப் பயிற்சி செஞ்சதுல, பாதி வலி போயிட்ட மாதிரி ஓர் உணர்வு!'' எனப் பூரிப்புடன் தெரிவித்தார் வாசகர் அசோக்குமார்.

'மூட்டு வலி போயிருச்சு!'

''நாங்க சென்னைல இருக்கோம். எங்க பொண்ணு ராசிபுரத்துல படிக்கிறா. இப்படியரு முகாம் நடக்கறதை அவதான் சொன்னா. உடலுக்கும் மனசுக்கும் மலர்ச்சியைத் தர்ற முகாம்ல கலந்துகிட்டதுபோலவும் ஆச்சு; மகளை ஒரு எட்டுப் போய்ப் பாத்ததாகவும் ஆச்சுன்னு சொல்லி வந்துட்டோம்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் வாசகர் தணிகாசலம்.  

''மனவளக்கலைப் பயிற்சி எடுத்துக்கணுங்கறது என் நீண்ட நாள் ஆசை. ஆனா, அதுக்கு எங்கே யாரை அணுகணும்னு தெரியாம இருந்துச்சு. சக்தி விகடன் மூலமா என் ஆசை இன்னிக்கு நிறைவேறிடுச்சு'' என்று வாசகர்கள் தியாகராஜன், இந்திராணி, கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் தெரிவித்தனர்.

'எண்ணம் போல் வாழ்க்கை’ என்று சும்மாவா சொன்னார்கள்!

- மு.கார்த்திகேயன்
படங்கள்: க.தனசேகரன்

'மூட்டு வலி போயிருச்சு!'