Published:Updated:

குழந்தைப் பேறு அருளும் காந்திமதி அம்பாள் சந்நிதியில் இன்று காலை கொடியேற்றம்!

குழந்தைப் பேறு கொடுக்கும் காந்திமதி அம்பாள் சன்னதி

நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் ஆடிப்பூர திருவிழாவின் நான்காம் நாளில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கும். அன்று அம்பாளுக்கு வளையல் சாத்திவிட்டுத் தானும் அணிந்துகொள்ளும் பெண்களுக்கு நிச்சயமாகக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தைப் பேறு அருளும் காந்திமதி அம்பாள் சந்நிதியில் இன்று காலை கொடியேற்றம்!

நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் ஆடிப்பூர திருவிழாவின் நான்காம் நாளில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கும். அன்று அம்பாளுக்கு வளையல் சாத்திவிட்டுத் தானும் அணிந்துகொள்ளும் பெண்களுக்கு நிச்சயமாகக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Published:Updated:
குழந்தைப் பேறு கொடுக்கும் காந்திமதி அம்பாள் சன்னதி

நெல்லையின் அடையாளமாகத் திகழும் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும், ஆடி மாதத்தில் நடக்கும் ஆடிப்பூர திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவையொட்டி, குழந்தைப் பேறு அருளும் காந்திமதி அம்பாள் சந்நிதியில் இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.

நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் திருக்கோயில்
நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் திருக்கோயில்

கொரோனாப் பெருந்தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக இந்த நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் நடந்த நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதால் ஏராளமான சிவபக்தர்கள் ஆர்வத்துடன் இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிகாலையில் மூலஸ்தானத்தில் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கோயிலின் உள்பிராகாரத்தில் கொடிப்பட்டம் வலம் வந்து பூஜைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு கோபுர ஆரத்தி மற்றும் நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடந்தது.

குழந்தைப் பேறு கொடுக்கும் காந்திமதி அம்பாள் சன்னதி
குழந்தைப் பேறு கொடுக்கும் காந்திமதி அம்பாள் சன்னதி

கொடியேற்றம் நடந்த இன்று முதல் பத்து நாள்களுக்குத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். விழாவின் நான்காம் நாளான 25-ம் தேதி (திங்கள் கிழமை) அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்க உள்ளது.

அம்பாளின் வளைகாப்பு தினத்தில் பக்தர்கள் அம்பாளுக்கு வளையல் சாத்துவார்கள். 10-ம் நாளில் அம்பாளுக்கு ஆடிப்பூர முளைப்பாரி கட்டும் வைபவம் ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதன் பின்னர் காந்திமதி அம்பாள் சந்நிதியிலிருந்து ரிஷப வாகனத்தில் நான்கு ரத வீதிகளிலும் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

அம்பாளுக்கு வளைகாப்பு நடக்கும்போது வளையல்கள் சாத்தி வழிபட்டால் குழந்தைப் பேறு நிச்சயமாகக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
நெல்லையப்பர் கோயில் பக்தர்கள்

இந்த விழா குறித்து பக்தர்கள் கூறுகையில், “பரணி நட்சத்திரத்தில் இன்று காந்திமதி அம்பாள் சந்நிதியில் கொடியேற்றம் நடத்தப்பட்டு பூரம் நட்சத்திரத்தில் அம்பாளுக்கு சீமந்தம் நடத்தப்படும். நான்காம் திருநாளில் அம்பாளுக்கு வளைகாப்பு நடக்கும். அன்று கலந்துகொண்டு அம்பாளுக்கு வளையல் சாத்தி தாங்களும் அணிந்து கொண்டால் திருமணம் நடக்காதவர்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைப்பதுடன், குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும்.

கடைசி நாளில் நடக்கும் சீமந்த விழாவுக்காக இரு தினங்களுக்கு முன்பே பயிறு ஊறவைத்து, அதை அம்பாள் மடியில் கட்டி சீமந்த விழா மிகவும் சிறப்பாக நடக்கும். அந்த முளைப் பயிறு, நாடு செழிக்கவும் மக்கள் அனைவரும் நலம் பெறவும் நடத்தப்படுகிறது.

நெல்லையப்பர் கோயில்
நெல்லையப்பர் கோயில்

உலகம் முழுவதையும் அம்பாள் உயிர்ப்பித்துக் காப்பதற்காக அம்பாளுக்கு இந்த விழா நடத்தப்படுவதாக ஐதிகம். அதனால் பத்து நாளும் அம்பாளுக்கு மனம் குளிர வழிபாடு செய்தால் அனைவருக்கும் நல்லது கிடைக்கும். அம்பாளுக்கு சாத்திய முளைக்கட்டிய பயிறு சாப்பிட்டால் வயிற்றில் உள்ள நோய்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை” என்று பக்தர்கள் தெரிவித்தார்கள்.