Published:Updated:

ஆடி அம்மன் தரிசனம்: ஆயிரம் ஆயிரம் திருநாமங்கள் கொண்ட ஆதிபீடேஸ்வரி காளிகாம்பாள்!

அன்னை காளிகாம்பாள்

இங்கு எழுந்தருளி இருக்கும் பிரத்யங்கரா தேவி பெரும் துடியான சக்தி கொண்டவள். இவளை வேண்டிக்கொண்டு புனித ரட்சையை கட்டிக்கொண்டால், உங்களை வாட்டும் கவலைகள், அச்சங்கள் யாவும் ஓடும். தீமைகள் யாவும் வீழும்.

ஆடி அம்மன் தரிசனம்: ஆயிரம் ஆயிரம் திருநாமங்கள் கொண்ட ஆதிபீடேஸ்வரி காளிகாம்பாள்!

இங்கு எழுந்தருளி இருக்கும் பிரத்யங்கரா தேவி பெரும் துடியான சக்தி கொண்டவள். இவளை வேண்டிக்கொண்டு புனித ரட்சையை கட்டிக்கொண்டால், உங்களை வாட்டும் கவலைகள், அச்சங்கள் யாவும் ஓடும். தீமைகள் யாவும் வீழும்.

Published:Updated:
அன்னை காளிகாம்பாள்
ஆதி பீட பரமேஸ்வரி என்று போற்றப்படுபவள் அன்னை காளிகாம்பாள். இவள் இரு திருக்கண்களும் அலைமகளும் கலைமகளும் உறையும் திருவிடம் என்று ஞான நூல்கள் போற்றுகின்றன. இதனால் காளிகாம்பாளை தரிசிப்பவர்களுக்கு செல்வமும் ஞானமும் எளிதில் கிட்டிவிடும் என்பது கண்கூடு.

சென்னையின் அடையாளமாக, ஏன் சென்னைக்கே அடையாளம் தந்த தேவியாக அன்னை காளிகாம்பாள் விளங்கி வருகிறாள் என்பதே உண்மை. ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் ஆலயம் பாரிமுனை தம்புச்செட்டித் தெருவில் எழிலுற அமைந்துள்ளது. ஆடி மாதம் முழுக்க அருள் வெள்ளம் சுரந்து கொண்டிருக்கும் இந்த அற்புத ஆலயத்தில் அன்னை மந்திர ரூபிணியாக, மாமணி தேவியாக, ஒளஷதப் பொருளாக வீற்றிருந்து சகல ஜீவன்களுக்கும் நல்லருள் புரிந்து வருகிறாள்.

காளிகாம்பாள் ஆலயம்
காளிகாம்பாள் ஆலயம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரையான ராகுகால வேளைகளில் காளிகாம்பாள் ஆலயமே பெரும் கூட்டத்துடனும் அதிர்வுடனும் காணப்படும். இந்த வேளையில் அன்னையை தரிசித்து எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால் தீராத பிரச்னைகள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை. அநீதி இழைக்கப்பட்ட எளிய மக்களின் காவல் தெய்வமாக இவள் விளங்குவதால் எப்போதும் இங்கு கூட்டம் நிரம்பி வழிவதைக் காணலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலம் அறிய முடியாத காலத்தே இங்கு ஆதி காமாட்சியாக, நெய்தல் நில சாந்த துர்கையாக வீற்றிருந்த தேவியை ஸ்ரீஆதிசங்கரர் வழிபட்டு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து அருள் பெற்றாராம். பிறகு இந்த தேசம் பூரணத்துவத்தோடு தர்மங்கள் நிலைபெற்று வாழ போராடிய மராட்டிய வீரசிவாஜி இந்த அன்னையை வழிபட்டு பல வெற்றிகள் பெற்றாராம். உணர்ச்சிப் பெருக்கோடு அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்த மகாகவி பாரதியாரும் இந்த அன்னையைப் பாடித் தொழுது அருள் பெற்றாராம். தீனர்களுக்கு எல்லாம் வல்லமை தரும் பேராற்றலாக, பெரும் சுடராக விளங்குபவள் காளிகாம்பாள்.

காளிகாம்பாள்
காளிகாம்பாள்

காளி என்றாலே சகலத்தையும் அருளும் தேவி என்றே பொருள். அவள் இங்கு அமைதியாக, அன்னையின் வடிவாக அமர்ந்திருப்பது நமது கொடுப்பினை என்றே சொல்லலாம். திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஏந்தி, அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அம்பாள், மேற்குப் பார்த்து எழுந்தருளி இருப்பது இந்த கோயிலின் விசேஷம். சண்டிகேஸ்வரி, சரஸ்வதி, ப்ரம்ம வித்யாம்பிகை, வைஷ்ணவி, தாக்ஷாயணி, மஹாலக்ஷ்மி என ஐந்து சக்திகளும் அம்பிகையின் சுற்றில் அமைந்திருப்பதும் சிறப்பு. கிண்ணித்தேர் அசைந்து செல்லும் அற்புத ஆலயம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னம்மன் என்று தெலுங்கு அரசர்கள் ஆட்சியில் போற்றப்பட்ட இந்த காளி, இந்த பகுதியை நிர்வாகம் செய்த சென்னப்ப நாயக்கருக்கு குலதேவி. இதனாலேயே சென்னம்மன் நினைவாக பின்னாளில் உருவான இந்த நகரமும் சென்னை என்றே பெயர் கொண்டது. இங்கு தல விருட்சம் மாமரம். தீர்த்தம் கடல் நீர். இதன் பரிவார தேவதை கடற்கன்னி. எனவே மீனவ மக்களின் இஷ்ட தெய்வமாக இந்த தேவி விளங்கி வருகிறாள். ஆரம்பத்தில் சென்னை ஜார்ஜ் கோட்டைப் பகுதியில் எழுந்தருளி இருந்த அன்னை, கோட்டை விரிவாக்கம் செய்யப்பட்ட காரணத்தால் 1639-க்கு பிறகு தம்புச்செட்டி தெருவுக்கு எழுந்தருளினாள்.

பிரத்யங்கரா தேவி
பிரத்யங்கரா தேவி

இங்கு ஈசன் கமடேஸ்வரராகவும் அண்ணாமலையாராகவும் எழுந்தருளி இருப்பதால், திருவண்ணாமலைக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்ளலாம். இங்கு எழுந்தருளி இருக்கும் பிரத்யங்கரா தேவி பெரும் துடியான சக்தி கொண்டவள். இவளை வேண்டிக்கொண்டு புனித ரட்சையை கட்டிக்கொண்டால், உங்களை வாட்டும் கவலைகள், அச்சங்கள் யாவும் ஓடும். தீமைகள் யாவும் வீழும்.

ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் ஆலய வீடியோ:

வரங்களை அருள்வதில் காமாட்சியம்மனாகவும், தீமைகளை அழிப்பதில் காளிகாம்பாளாகவும், பக்தர்களைக் காப்பதில் அன்னை கமடேஸ்வரியாகவும், மங்கல வாழ்வை அருள்வதில் ஆதிபீடேஸ்வரியாகவும் இப்படி ஆயிரம் ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு நமக்காக அமர்ந்திருக்கிறாள் அன்னை காளிகாம்பாள். இந்த ஆடி மாதத்தில் இவளை தரிசனம் செய்து வேண்டும் வரங்களைப் பெற்று வளம் பெறுவோம்.

காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism