Published:Updated:

ஆண்டிக்கோலத்தில் அழகு முருகன்!

முருகன்
பிரீமியம் ஸ்டோரி
முருகன்

கீதா வாசு, வேலூர்

ஆண்டிக்கோலத்தில் அழகு முருகன்!

கீதா வாசு, வேலூர்

Published:Updated:
முருகன்
பிரீமியம் ஸ்டோரி
முருகன்

னலில் கருவாகிப் புனலில் உருவான கந்தப்பெருமான், உவகையுடன் கோயில்கொண்டு இவ்வுலகம் இன்பம் பெற அருள்மழை பொழியும் திருத்தலங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது அனந்தபுரகிரி எனும் தலம். அனந்தபுரம் என்ற பெயருடன் திகழும் இத்தலத்தில் அருள்மிகு தண்டாயுதபாணியாய் அருள்கிறார் முருகன்.

முருகன்
முருகன்

பழநியம்பதிக்குச் சென்று தண்டாயுதபாணியை தரிசிக்கும் ஆவல் இருந்தும் பல சூழல்களின் காரணமாக அங்கு செல்ல இயலாமல் தவிக்கும் பக்தர்களுக்கு, பழநி தரிசனப் புண்ணியத்தை அருளும் விதம் திகழ்கிறது, அனந்தபுரம் ஶ்ரீமத் தண்டாயுதபாணி திருக்கோயில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆண்டிக் கோலத்தில் காட்சியளிக்கும் தலம் அனந்தபுரம்

ஞானப்பழம் கிடைக்காததால் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு முருகப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் நின்ற இடம் பழநிமலை என்கின்றன புராணங்கள். பெரியோர்கள் ஞானப் பழமாகித் திகழும் முருகன் நின்றருளும் தலம் ஆதலால் அதற்குப் பழநி என்ற பெயர் வந்ததாகச் சொல்வார்கள். பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல், செழித்துத் திகழும் நன்செய் நிலத்தைக் குறிக்கும் என்பார்கள். ஆக, நம் புற வாழ்க்கை மட்டுமல்ல நம் அக வாழ்க்கையும் செழிக்கக் கனிவுடன் அருளும் கந்தன் அங்கு கோயில்கொண்டிருப்பது மிகப் பொருத்தமே.

இத்தகு சிறப்பு மிகு பழநி தலத்துக்கு அடுத்த படியாக, முருகப்பெருமான் ஞானப்பழமாக ஆண்டிக் கோலத்தில் காட்சியளிக்கும் தலம் அனந்தபுரம் என்கிறார்கள் பக்தர்கள்.

செஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது அனந்தபுரம். இங்கு அமைந்துள்ள முருகன் ஆலயம் 200 வருடங்கள் பழைமையா னது என்கிறார்கள். இங்கு அருளும் முருகன் வேண்டும் வரங்களை வாரி வழங்கும் வள்ளல் என்று சிலிர்ப்புடன் கூறுகிறார்கள் சுற்றுவட்டாரத்து மக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முருகன் அருளால் விரைவில் பிணிகள் தீரும்

இந்த முருகனுக்கு செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் பால் அபிஷேக வைபவம் சிறப்பான பலன்களைத் தரவல்லது. இந்தத் தலத்தில், சிறிய குன்றின் மீது முருகனின் திருப்பாதம் உள்ளது. விசேஷ நாள்களில் அதன் மீது பயபக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் பிரசாதம் அப்படியே மறைந்துபோகும் என்பது நம்பிக்கை.

முருகன்
முருகன்

தைப்பூசத் திருவிழா இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது உற்சவ விழாக்கள் கோலாகலமாக நடைபெறும். தீராத நோய்களால் அவதிப்படுவோர், இங்கு வந்து முருகனை வேண்டிக்கொள்கிறார்கள். முருகன் அருளால் விரைவில் பிணிகள் தீரும் என்பது நம்பிக்கை. அப்படி வேண்டுதல் பலித்த தும் தைப்பூசத்தையொட்டி இங்கு வந்து திருக்குளத்தில் நீராடி, வேலால் அலகுக் குத்திக் கொண்டும் காவடி சுமந்துவந்தும் முருகனை வழிபட்டுச் செல்கிறார்கள், பக்தர்கள்.

தைப் பூசத்தன்று மாலையில் நடைபெறும் தீமிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அப்போது பக்திப்பெருக்குடன் விண்ணதிர ஒலிக்கும் `முருகனுக்கு அரோஹரா' எனும் கோஷம் சிலிர்க்கவைக்கும்.

உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்கள் மட்டுமன்றி, வெளி மாவட்ட வெளி மாநில பக்தர்களும் திரளாக வந்து இங்கு வழிபட்டுச் செல்கிறார்கள். திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்கள், செஞ்சிக்கு அருகிலுள்ள இந்தத் தலத்துக்கும் சென்று முருகனை தரிசித்து மனமுருகி வழிபட்டு வாருங்கள்; அவர் அருளால் உங்கள் வாழ்க்கை இனிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism