Published:Updated:

திருப்பதியில் தெப்போற்சவ திருவிழா - இன்று தொடங்கி 5 நாள்கள் நடக்கிறது!

திருமலை தெப்போற்சவம்
திருமலை தெப்போற்சவம்

திருமலையில் தெப்போற்சவம். அடுத்த ஐந்து நாள்களும் மலையப்பசாமி விசேஷ அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்.

திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் திருமலையில் ஏராளமான புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில் கோயில் அருகில் அமைந்திருக்கும் சுவாமி புஷ்கரணி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Water Chariat
Water Chariat

இந்தத் திருக்குளத்தில், இன்று மார்ச் 5 - ம் தேதி மாலை தெப்போற்சவம் நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலின் திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாள்களுக்குத் தெப்போற்சவம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இதற்காக மிக அழகிய வடிவில் புதிதாக தெப்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2.5 டன் மலர்கள் இதற்காகக் கொண்டுவரப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாள்களும் மலையப்பசாமி விசேஷ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

திருமலை தேவஸ்தானதுக்கு உட்பட்ட கோயில்களில் நடக்கும் தெப்போற்சவ விழாக்களில் புண்ணிய தீர்த்தங்களில் சுவாமி புஷ்கரணிக்குத் தனித்துவமான ஓர் இடம் உண்டு.

Tirupaty
Tirupaty
JAISEKHARQ

`பக்தர்கள் இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மலையப்ப சுவாமியைத் தரிசித்து அவரிம் அருளைப் பெறவேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

முதல் நாள் ராமர் சீதா, லக்ஷ்மண் அலங்காரம்.

2 -ம் நாள் கிருஷ்ணா ருக்மணி அலங்காரம்

3, 4, 5 - ம் நாள்களில் ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பவனி வந்து அருள் புரிகிறார்.

Tirupaty
Tirupaty
JAISEKHARQ

இதனால், 5 மற்றும் 6 - ம் தேதிகளில் ஆர்ஜித சேவா, வசந்தோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவா ஆகியவையும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவா ஆகிய சேவாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை நடைபெறவேண்டிய பௌர்ணமி கருட சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு