Published:Updated:

`அரிசிலி ஆலயத்தில் பிரதோஷம் சிறப்பு!'

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

இறைவனுடைய மலையைத் தான் பெயர்த்து விடலாம் என்று அகந்தை யில் இறுமாந்தவனுக்குக்கூட, வாளும் வரமும் கொடுத்துப் பெருமைப் படுத்திய ஈசன் கோயில்கொண்டிருக்கும் தலம்தான் அரசிலி

`அரிசிலி ஆலயத்தில் பிரதோஷம் சிறப்பு!'

இறைவனுடைய மலையைத் தான் பெயர்த்து விடலாம் என்று அகந்தை யில் இறுமாந்தவனுக்குக்கூட, வாளும் வரமும் கொடுத்துப் பெருமைப் படுத்திய ஈசன் கோயில்கொண்டிருக்கும் தலம்தான் அரசிலி

Published:Updated:
சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

திண்டிவனத்திலிருந்து பயணித்தால், கிளியனூரும் தைலாபுரமும் தாண்டிய பின்னர், ஒழிந்தியாப்பட்டு எனும் கைகாட்டியைப் பார்க் கலாம். அங்குள்ள கிளைப் பாதையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் ஊர் உள்ளது. இவ்வூரின் ஆதிப்பெயர் திருஅரிசிலி. திருஞானசம்பந்தர் இவ்வூரை அரிசிலி என்றே பாடுகிறார்.

வண்ண மால்வரை தன்னை மறித்திடல் உற்ற வல்லரக்கன்

கண்ணும் தோளும் நல்வாயும் நெரிதரக் கால்விரலூன்றிப்

பண்ணின பாடல்வகை நரம்பால் பாடிய பாடலைக் கேட்டு

அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே

- எனப் போற்றிப் பரவுகிறார் திருஞானசம்பந்தர்!

பெரிய கயிலைமலையைப் பெயர்த்துவிடலாம் என்று நினைத்துத் தூக்கிய ராவணனின் கண்ணும், தோளும், வாயும், முகமும் திணறும்படி, தம் கால் பெருவிரலை லேசாக அழுத்தினார் சிவனார். அழுத்தப்பட்டுத் தவித்த ராவணன் தனது வீணையை மீட்டி சாம கானம் இசைத்தான். அவன் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருளினார் இறையனார். வாள் கொடுத்தார்; வரம் கொடுத்தார்.

இறைவனுடைய மலையைத் தான் பெயர்த்து விடலாம் என்று அகந்தை யில் இறுமாந்தவனுக்குக்கூட, வாளும் வரமும் கொடுத்துப் பெருமைப் படுத்திய ஈசன் கோயில்கொண்டிருக்கும் தலம்தான் அரசிலி என்று சிறப்பிக்கிறார் ஞானசம்பந்தர். இவ்வூர் இறைவனுக்கு அரசிலீஸ்வரர், அச்வதேஸ்வரர் என்றும் திருநாமங்கள் உண்டு. கல்வெட்டுகளில் அரசிலி ஆளுடையார் என்றும் அரசிலி ஆலாலசுந்தரர் என்றும் இந்த சுவாமியின் பெயர் காணப்படுகிறது. அம்பாள் - பெரியநாயகி. இங்கே பிரதோஷ தினத்தில் சென்று சிவதரிசனம் செய்வது மிகவும் சிறப்பு.

ஈஸ்வரன் தமக்குள் அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் நேரமே பிரதோஷ நேரமாகும். நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று ஐந்து பிரதோஷங்கள் இருந்தாலும், மாதாமாதம் வரும் கிருஷ்ண பக்ஷத் திரயோதசி நாள், மாதப் பிரதோஷமாகக் கொண்டாடப்படுகிறது. இதுவே, சனிக்கிழமையன்று இணைந்து வந்தால், அது மகா பிரதோஷம் என்று அழைக்கப்படும்.

பிரதோஷ நாளில், சூரியாஸ்தமனத்துக்கு முன்னதாக இருக்கும் மூன்றே முக்கால் நாழிகை நேரத்தில் சிவ தரிசனம் செய்வது மிகவும் புண்ணியம். சிவ பக்தராகத் திகழ்ந்த வாமதேவ முனிவர், பிரதோஷ நாளில் இவ்வூர் சிவனாரை வழிபட்டு, பிரதோஷ நாளிலேயே முக்தி பெற்றார் என்கிறது தலபுராணம்.

ஆக, பிரதோஷத் திருநாளில் இவ்வூருக்குச் சென்று நந்திக்குக் காப்பரிசி படைத்து, சிவபெருமானுக்கு விலவம் சார்த்தி, மனமுருக வழிபட்டு வந்தால், நம் கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.

- தி.திவ்யா, சேலம்