Published:Updated:

பம்பா நதியில் குறைந்த வெள்ளப் பெருக்கு.. சபரிமலையில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலையில் மண்டல மகரவிளக்குக் கால பூஜை தொடங்கிய பிறகு முதன்முறையாக பக்தர்களுக்கு தரிசனம் மறுக்கப்பட்டது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல மகரவிளக்குக் கால பூஜைக்காகக் கடந்த 15-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 16-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெர்ச்சுவல் க்யூ வழியாக ஆன்லைனில் புக் செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தினசரி 30,000 பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் மூலம் புக் செய்து சந்நிதானத்தில் தரிசனம் செய்யலாம். மேலும் ஆன்லைன் புக்கிங் முப்பதாயிரத்தை எட்டாமல் இருந்தால் நேரடியாக சென்று ஸ்பாட் புக்கிங் செய்யும் திட்டமும் கடந்த வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. சபரிமலை மண்டலகால பூஜையின்போது வரும் பக்தர்கள் பம்பையில் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கெனவே தேவசம்போர்டு அறிவித்திருந்தது.

பம்பா நதி
பம்பா நதி

இந்த நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வந்ததால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே மண்டலகாலம் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை மழை வெள்ளம் அதிகமாக்கியதால் சபரிமலையில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பம்பையில் தண்ணீர் பெருக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா கலெக்டர் அறிவித்தார். அதுமட்டுமல்லாது பம்பா அணையில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. எனவே அணையைத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் பம்பையில் வெள்ளப்பெருக்கு இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

சபரிமலை
சபரிமலை

மேலும் ஆன்லைனில் புக்கிங் செய்துள்ள பக்தர்களுக்கு மற்றொரு நாள் தரிசனம் செய்வதற்கான வழிவகை செய்யப்படும் எனவும் கலெக்டர் அறிவித்தார்.

இதனிடையே தற்போது மழை நின்றதாலும், ஆற்றில் வெள்ளம் குறைந்ததாலும், பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக மவட்ட நிர்வாகம் இன்று அறிவித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு