Published:Updated:

பழநி: `நான்கு சூரர்களை வதம் செய்யும் முருகபெருமான்!' - நாளை திருக்கல்யாண நிகழ்ச்சி 

பழநி

மாலை 6 மணிக்கு மலைக்கோயில் வடக்கு கிரி வீதியில் தாரகா சூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் என 4 சூரர்களை 4 இடங்களில் வதம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

பழநி: `நான்கு சூரர்களை வதம் செய்யும் முருகபெருமான்!' - நாளை திருக்கல்யாண நிகழ்ச்சி 

மாலை 6 மணிக்கு மலைக்கோயில் வடக்கு கிரி வீதியில் தாரகா சூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் என 4 சூரர்களை 4 இடங்களில் வதம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

Published:Updated:
பழநி
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 25ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து சின்னக்குமாரசாமிக்கும், சண்முகருக்கும் சிறப்பு அலங்காரம், மண்டகப்படி பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. 

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. இதன் காரணமாக மலைக்கோயில் நடை பிற்பகல் 1.30 மணிக்கு அடைக்கப்படுவதால் ரோப் கார், விஞ்ச் சேவை காலை 10 மணி முதல் நிறுத்தப்படுகிறது.

பழநி
பழநி

அனைத்துக் கட்டண சீட்டுகளும் காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டு, 11.30 மணி வரை மட்டும் பக்தர்கள் படிப்பாதை வழியாக அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையுடன் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடக்க கோயில் நடை அடைக்கப்படும். 

இதையடுத்து பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேவசேனாவுடன் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் மலை அடிவாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். இதனைத்தொடர்ந்து மலை கோயிலில் இருந்து இறங்கும் சின்னக்குமாரசுவாமி மாலை 6 மணிக்கு  மலைக்கோயில் வடக்கு கிரி வீதியில் தாரகா சூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் என 4 சூரர்களை 4 இடங்களில் வதம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

பழநி முருகன்
பழநி முருகன்

நான்கு கிரி வீதிகளிலும் சூரசம்ஹாரம் முடிந்து சின்னக்குமாரர் மலைக்கோயிலுக்கு சென்ற பிறகு சம்ரோட்சண பூஜை நடைபெறும். அதைத் தொடர்ந்து ராக்கால பூஜை நடைபெறவுள்ளது.  இதன்காரணமாக தங்க ரத நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

(அக்டோபர் 31) நாளை காலை 9.30 மணிக்கு மலைக் கோயிலில் வள்ளி, தேவசேனாவுடன் சண்முகருக்கும், இரவு 7 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தேவசேனாவுடன் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாண நிகழ்வு நடக்க உள்ளது.