Published:Updated:

ராஜபாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராஜபாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Published:Updated:
சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 8 சமுதாயத்தினர் இணைந்து 11 நாள்கள் இந்தக்கோயிலில் திருவிழா நடத்துவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடமாக திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில், கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு திருவிழா நடத்த அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ராஜபாளையம் மாரியம்மன் கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது. நெசவாளர்களால் புதிதாகத் திரிக்கப்பட்ட கொடிக் கயிறு, பெட்டி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்தில், கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சித்திரை 
திருவிழாகொடியேற்றம்
சித்திரை திருவிழாகொடியேற்றம்

பின்னர் கொடி மரத்தில் நெற்கதிர்கள் வைத்துக் கட்டப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 9 நாள்களுக்கும் தினம் ஒரு சமுதாயத்தின் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து திருவிழா சிகர நிகழ்ச்சியான ஏப்ரல் 16-ம் தேதி பூக்குழித் திருவிழா நடைபெற உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism