Published:Updated:

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரங்கமன்னார்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் திரு ஆடிப்பூர திருத்தேரோட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் திரு ஆடிப்பூர திருத்தேரோட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

Published:Updated:
ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரங்கமன்னார்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் திருக்கோயில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் அவதாரத் தலம் இது. இங்கே ஆண்டாளின் அவதாரத் தினமான ஆடிப் பூரம் திருநாளன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும்.

ஆடிப்பூரம் - தேரோட்டம் என மொத்தம் 10 நாள் கோலாகலமாக திருவிழா நடைபெறும். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருக்கோயில் வளாகத்துக்குள்ளேயே நடைபெற்று வந்த ஆண்டாள் திருஆடிப்பூர உற்சவம், இந்த வருடம் வெகு விமரிசையாக வழக்கம்போல் கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பிரசித்திபெற்ற இந்தப் பெருவிழா, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருத்தரோட்டம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முன்னதாக ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரங்க மன்னாருக்குச் சிறப்பு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்தில் ஏற்றப்படுகின்ற கொடிப்பட்டமானது நான்கு மாட விதிகள் வழியாகக் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், கோயில் முன்பு அமைந்துள்ள துவஜ ஸ்தம்பமாகிய கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கொடிமரத்திற்குப் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.

கொடியேற்றம்
கொடியேற்றம்

ஆடிப்பூரத் திருவிழாவின் 5-ம் திருநாளன்று (28-ம் தேதி) கருட சேவையும், 7-ம் திருநாளன்று (30-ம் தேதி) சயன சேவையும் அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமான திருஆடிப்பூர தேரோட்டம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியும் நடைபெறவுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக களையிழந்து காணப்பட்ட திருஆடிப்பூர வைபவம் இந்த வருடம் மிகவும் கோலாகலத்துடன் தொடங்கப்பட்டதில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.