Published:Updated:

பழநி கோயிலில் சிறப்பு அன்னாபிஷேகம்; என்ன பின்னணி?

சிறப்பு பூஜை

வேள்வியின்போது யாககுண்டத்தில் திரவிய பொருள்கள், மூலிகை பொருள்கள், தங்கம், வெள்ளி ஆகியன பூர்ணாஹூதி செய்யப்பட்டது.

பழநி கோயிலில் சிறப்பு அன்னாபிஷேகம்; என்ன பின்னணி?

வேள்வியின்போது யாககுண்டத்தில் திரவிய பொருள்கள், மூலிகை பொருள்கள், தங்கம், வெள்ளி ஆகியன பூர்ணாஹூதி செய்யப்பட்டது.

Published:Updated:
சிறப்பு பூஜை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழநி மலைக்கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன.

பூஜை
பூஜை

மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் தங்கச்சப்பரத்தில் சண்முகநதி, ராமேஸ்வரம், காசி, கைலாஷ், உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு புனித தீர்த்தங்களில் இருந்து புனிதநீர் கலசங்களில் நிரப்பி யாகசாலை பூஜைக்காக வைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜையின் போது 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பிரதானமான வெள்ளிப்பூண் போட்ட பெரிய வலம்புரி சங்கும், வெள்ளிக்கலசமும் யாகசாலை பூஜையில் புனிதநீர் நிரப்பி வைக்கப்பட்டது. தலைமை குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணிய சிவாச்சார்யர் உள்ளிட்ட ஏராளமான சிவாச்சார்யர்கள் வேத மந்திரம் ஓதி, பாராயணம் முழங்க மேளதாளத்துடன் வேள்வி நடைபெற்றது.

சிறப்பு பூஜை
சிறப்பு பூஜை

வேள்வியின் போது யாககுண்டத்தில் திரவிய பொருள்கள், மூலிகை பொருள்கள், தங்கம், வெள்ளி ஆகியன பூர்ணாஹூதி செய்யப்பட்டது. தொடர்ந்து சப்பரத்தில் உள்ள கலசங்களுக்கு தீபாராதனை செய்யப்பட்டு கலசங்கள் கோயிலை வலம் வர, உச்சிக்காலத்தின் போது மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

உச்சிகால பூஜையைத் தொடர்ந்து மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் பெருமானுக்குப் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, அன்னம் கலந்த உணவால் சிரசில் கிரீடம், மகரகுண்டலம் செய்யப்பட்டு மார்பில் அன்னம் பூசப்பட்டது. பீடம் முழுக்க சுத்தஅன்னம், வில்வம், கனிவகைகள், மலர்கள் கொண்டு நிரப்பப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சோடஷ தீபாராதனை, சோடஷ உபச்சாரம் ஆகியன நடைபெற்றது. இதற்கான உபய ஏற்பாடுகள் பழநி சித்தனாதன் சன்ஸ் சார்பில் செய்யப்பட்டது.