Published:Updated:

ஆடி மாதக் கோயில்கள் - அந்நியரையும் அடிபணிய வைத்த அங்காள பரமேஸ்வரி- தேனி வட்டாரத்தில் அதிசயக் கோயில்!

அங்காள பரமேஸ்வரி

அம்மன் வடிவங்களில் தொன்மையானவள் இந்த அங்காளி. ஈசனின் இடது பாகத்தில் ஆளும் தேவி இவள் என்பதால் அங்கமாளும் தேவி அங்காளி என்றானாள்.

ஆடி மாதக் கோயில்கள் - அந்நியரையும் அடிபணிய வைத்த அங்காள பரமேஸ்வரி- தேனி வட்டாரத்தில் அதிசயக் கோயில்!

அம்மன் வடிவங்களில் தொன்மையானவள் இந்த அங்காளி. ஈசனின் இடது பாகத்தில் ஆளும் தேவி இவள் என்பதால் அங்கமாளும் தேவி அங்காளி என்றானாள்.

Published:Updated:
அங்காள பரமேஸ்வரி

"வேப்பிலை பொற்கரகம் வீதிவிளையாடிவர

ஆயிரங் கண்ணுடையாள் அங்காளி வாருமம்மா

பதினாயிரங் கண்ணுடையாள் பத்தினியே வாருமம்மா

ஏழையர் அழைக்கிறோம் இளங்காளியே வாருமம்மா!"

எங்கு அச்சமும் கவலையும் உள்ளதோ அங்கு இவளை அழைத்து வணங்கினால் அவை விலகும். அதனாலேயே மயானம் எங்கும் அங்காளியின் ஆட்சி ஆண்டு வருகிறது. அங்காளி முதன்முதலாக வந்து இறங்கிய இடம் மேல்மலையனூர். இதுவே அவளின் தாயகம் என்று எல்லோராலும் வணங்கப்படுகிறது.

கோடாங்கிப்பட்டி அங்காள பரமேஸ்வரி கோயில்
கோடாங்கிப்பட்டி அங்காள பரமேஸ்வரி கோயில்

அதன்பிறகு இவளின் அருளாட்சி தென்னகம் எங்கும் பரவியது.அப்படி அங்காளி கோயில் கொண்டு ஆட்சி செய்யும் ஓர் அற்புதத்தலம் கோடாங்கிப்பட்டி. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் குச்சனூரில் புற்றுக் கோயிலுக்கு ஓர் அங்காளியின் சிலையைச் செய்ய விரும்பினார்கள் இந்த ஊர் மக்கள். அதன்படி சுப்புத் தேவர் என்பவர், போடிக்கு அருகே உள்ள ஊருக்குச் சென்று அங்காள தேவியின் சிலையை உருவாக்கினார்.

உருவான சிலையை தங்கள் வசித்த வந்த இடத்துக்குக் கொண்டு செல்ல ஊர் மக்கள் சுமந்து வந்தனர். அப்போது போடிக்கு அருகே கோடாங்கிப்பட்டி எனும் ஊரை வந்து அடைந்தபோது களைப்பு உண்டானதால் அங்கு சிலையை இறக்கி வைத்துவிட்டு சற்று ஓய்வு எடுத்தனர். அன்னையின் திருவுளம் அங்கேயே தங்கிவிட எண்ணியது போலும். அதனால் கீழே இறக்கி வைக்கப்பட்ட திருவுருவச்சிலை மீண்டும் எடுக்கவே முடியாதபடி நிலைத்து நின்றுவிட்டது. இதனால் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த ஊர் மக்கள் கண்ணீர்விட்டுப் புலம்பி, ‘எங்கள் தாய் இருக்கும் இடமே எங்களுக்கான இடம்’ என்று உறுதி கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்காள பரமேஸ்வரி
அங்காள பரமேஸ்வரி

அன்னை குடிகொண்ட இடத்தில் ஒரு கோயிலை எழுப்ப விரும்பி போடி ஜமீன்தாரைச் சந்தித்து விண்ணப்பம் செய்தனர், அவரோ இப்போது சிலை இருக்கும் இடம் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஆங்கிலேயர் ஒருவரே அந்த இடத்துக்கு உரிமையாளர் என்றும் கூறினார். நீங்கள் அவரிடம் அனுமதி பெற்று ஆலயம் கட்டிக்கொள்ளுங்கள் என்று வழி காட்டினார். அவர்களும் அவ்விதமே அந்த ஆங்கிலேயரை அணுகி அங்காள அம்மனுக்குக் கோயில் கட்ட அனுமதி கேட்டனர். அந்த ஆங்கில அதிகாரியோ கோபமடைந்து, அவர்களை விரட்டியடிக்க தனது காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பயந்துபோன ஊர்மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வெளியே வந்தார்கள்.

அங்காளம்மன்
அங்காளம்மன்

மனிதர்களை விரட்டி அச்சப்படுத்தலாம்; ஆங்கார தேவியான அங்காளியை அடக்க முடியுமா? வானுக்கும் மண்ணுக்கும் தூணாக நின்று சகலரையும் அடக்கி வைக்கும் அந்த ஓங்காரி கொதித்து எழுந்தாள். தீமைகளை ஒரே மூச்சில் அடக்கி வைக்கும் தேவி கொடியவர்களுக்குப் பாடம் புகட்ட தொடங்கினாள். ஆம், ஆங்கிலேயரும் அவரது காவலர்களும் திடீரென்று கூச்சலிட்டு ஓடினர். ஆங்கில அதிகாரியின் மாளிகை எங்கும் தீ பரவியது. அது ஊரெங்கும் பற்றியது.

தெய்வ சன்னதம் வந்த மூதாட்டி ஒருத்தி, 'அங்காளம்மனுக்கு சொந்தமான இடத்தைக் கொடுத்துவிடுங்கள்! உங்களைப் பாவத்தில் இருந்து மீண்டு கொள்ளுங்கள்' என்று அறிவித்தாள். அந்நிய தேசத்து அதிகாரிகள் மிரண்டனர்.காவலர்கள் இப்போது ஆங்கிலேய அதிகாரியை சந்திக்க வரும்பும்படி ஊர்மக்களைக் கெஞ்சுகிறார்கள். அதிகாரிகள் ஊர்ம்களை வணங்கித் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டினர். அம்மன் நிலை கொண்ட கோடாங்கிப்பட்டி ஏரிக்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையை உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர், மேலும், ‘ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான இடம் அது’ என்று செப்பு சாசனத்தையும் வழங்கினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கோயில் மெல்ல எழும்பியது. ஒவ்வொரு நாளும் அன்னை புரிந்த அற்புதங்களால் கூட்டம் பெருகியது. இதனால் கோயில் மேலும் விஸ்தரிக்கப்பட்டு, 2003-ம் ஆண்டு மேலும் விரிவாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு 2018-ம் ஆண்டிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.தேனி-போடி சாலையில் கோடாங்கிப்பட்டி கிராமத்தில் ‘ஒத்த வீடு’ என்று அழைக்கப்படும் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து தெற்குப் பக்கம் ஒரு மண் பாதையில் 1.5 கிமீ நடந்து சென்றால் அங்காளியின் கோயில் வரும்.

தேடி வருபவருக்கு எல்லாம் வேண்டியதை விரும்பியவாறே அளிக்கும் அன்னை இன்று மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறாள். இங்கு இவளுக்கு வெள்ளி மற்றும் பௌர்ணமி பூஜைகள் மற்றும் மாசி பச்சை (மாசி அமாவாசை) மற்றும் ஆடி மாத விழாக்கள் விசேஷமானவை. ஒருமுறை இவளை தரிசித்தால் போதும், அச்சங்கள் இல்லாத சிறப்பான வாழ்வை அடையலாம் என்கிறார்கள் பக்தர்கள்.