Published:Updated:

காத்திருக்கும் திருப்பணிகள்!

ஏகாம் பரேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏகாம் பரேஸ்வரர்

கோயிலில் வட்டவடிவ ஆவுடையோடு கனகம்பீரமாக எழில்கோலம் காட்டுகிறார், அருள்மிகு ஏகாம்பரநாதர்.

ராணிப்பேட்டை காஞ்சனகிரி அருகே உள்ளது ஏகாம்பரநல்லூர் - அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத அருள்மிகு ஏகாம் பரேஸ்வரர் திருக்கோயில். பல உன்னதங்கள் நிறைந்த அற்புதத் தலம் இது.

இந்தத் தலத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கத்தாரிகுப்பம். இந்த ஊரில் 13-வது பீடாதிபதியாக விளங்கிய சத்சித்கணேந்திர சரஸ்வதி சுவாமிகளும், அவரின் பிரதான சீடரும் ஜீவசமாதி அடைந் தனர். இன்றைக்கும் அவர்கள் சூட்சும வடிவில் இங்கு வந்து வழிபடுவதாக நம்பிக்கை.

காத்திருக்கும் திருப்பணிகள்!

மேலும் நாயக்க மன்னர்கள் காலத்தில், முப்படைகள் சூழ காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதரை இந்தத் தலத்துக்கு எழுந்தருளச் செய்ததாகவும் செவிவழிச் செய்தி நிலவுகிறது. இந்தத் தலத்து இறைவன் பைரவர் அம்சமாகவும், இறைவி பைரவி அம்சமாகவும் அருள்புரிவதாகச் சொல்வர். மட்டுமன்றி, அஷ்ட பைரவர்களும், 64 யோகினியரும் தினமும் சூட்சும வடிவில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவதாகவும் அதனால் இந்தத் தலம் சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாகத் திகழ்வதாகவும் நம்பிக்கை.

கோயிலில் வட்டவடிவ ஆவுடையோடு கனகம்பீரமாக எழில்கோலம் காட்டுகிறார், அருள்மிகு ஏகாம்பரநாதர். அம்மையின் திருமுகத்திலும் பேரருள் கடாட்சம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காத்திருக்கும் திருப்பணிகள்!

அஷ்டபைரவர்களும் சூட்சும வடிவில் வந்து இந்தத் தலத்து இறைவனை வழிபடுவதால், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக்கொள்ளும் அன்பர்களுக்குக் கஷ்டங்கள் அனைத்தும் விலகும்; சத்ரு பயம் நீங்கும்; சந்தோஷம் நிலைக்கும். இங்ஙனம் சிறப்புகள் பல பெற்ற இந்த ஆலயத்தின் திருப்பணிகள் குறித்த கட்டுரை, 18.12.18 சக்தி விகடன் இதழில் இடம்பெற்றது.

காத்திருக்கும் திருப்பணிகள்!
காத்திருக்கும் திருப்பணிகள்!

தொடர்ந்து வாசகர்கள் மற்றும் அடியார் கள் பங்களிப்புடன் பெரும்பான்மையான திருப்பணிகள் நிறைவுற்று, தற்போது கும்பாபிஷேகத்துக்காகக் காத்திருக்கிறது திருக்கோயில். எனினும், ஆலய உற்சவத்துக் கான திருமேனிகள் உருவாக்கம், வாகனங்கள், திருவாசி ஆகியவற்றைச் செய்வது போன்ற பணிகள் மீதமுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தப் பணிகளும் முழுமையாய் நிறைவடைந்து அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயம் விரைவில் கும்பாபிஷேகம் காண வேண்டும். அதற்கு நாமும் நம்மால் இயன்ற பங்களிப்பை மனமுவந்து வழங்குவோம்.

காத்திருக்கும் திருப்பணிகள்!

ஈசன் கோயில் திருப்பணிக்குக் கொடுப்பது நம் ஏழேழ் தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும் என்கின்றன ஞானநூல்கள். நாமும் திருப்பணிக்குப் பங்களிப்போம்; சிவனருளால் வரமும் வாழ்வும் பெறுவோம்.

காத்திருக்கும் திருப்பணிகள்!

எப்படிச் செல்வது..?

ஆற்காடு - பொன்னை சாலையில் ஆற்காட்டில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலை விலுள்ள ஏகாம்பரநல்லூர் கூட்ரோடில் இறங்கி, அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள ஆலயத்தை அடையலாம்.

வங்கிக் கணக்கு விவரம்:

ARUL THARUM KAMATCHI AMBAL

UDANURAI ARULMIGU EKAMBARESHWARAR

ERAIPANI ARAKKATTALAI

A/c.No: 130900101002414

IFSC Code: CORP0001309

Bank Name: Corporation Bank,

Branch: Lalapet

மேலும் விவரங்களுக்கு:

சிவ.சண்முகம்: 9003803959