Published:Updated:

வெள்ளெருக்கு இலையில் தயிரன்னம் பிரசாதம்! - திருமங்கலக்குடி மங்களாம்பிகை

ஸ்ரீபிராணநாதேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீபிராணநாதேஸ்வரர்

நவராத்திரி தரிசனம் அம்பிகை வருவாள்!

`மங்கலம்’ என்ற சொல் நமது பாரம்பர்யத்தில் மிகுந்த போற்றுதலுக்குரியது. குறிப்பாக இல்லங் களில் சகல மங்கலங்களும் நிறைந்திருக்க வேண்டி, நம் நாட்டில் பெண்கள் மேற்கொள்ளும் விரதங் களும், பூஜைகளும் ஏராளம்.

அவ்வகையில், சகல மங்கலங்களையும் அள்ளித் தரும் அன்னையாய் அம்பிகைகோயில் கொண் டிருக்கும் தலம்தான் திருமங்கலக்குடி.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ளது திருமங்கலக்குடி. இங்குள்ள ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீபிராணநாதேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. காளிதேவி, பிரம்மன், காவிரி, அகத்தியர், நவகிரகங்கள் ஆகியோர் வழிபட்டு அருள்பெற்ற க்ஷேத்திரம் இது. சமயக் குரவர்களால் பாடல்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 38-வது புண்ணியத் தலம் இது.

வெள்ளெருக்கு இலையில் தயிரன்னம் பிரசாதம்! - திருமங்கலக்குடி மங்களாம்பிகை

பஞ்சமங்கல க்ஷேத்திரம்!

இந்தத் தலத்தின் மங்கலாம்பிகை சர்வ மங்கலங்களும் நிரம்பியவளாய், தன்னை நாடி வந்து வழிபடும் பக்தர்களுக்கு மங்கல வரங்களை அருள்பவளாய்த் திகழ்கிறாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்ரீபிராணநாதேஸ்வரர்
ஸ்ரீபிராணநாதேஸ்வரர்

திருமங்கலக்குடி எனும் இந்த க்ஷேத்திரமும் பஞ்ச மங்கலங்களால் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. இத்தலத்திற்கு உரிய விசேஷ மூர்த்தமாகிய அம்பிகையின் திருநாமம் ஸ்ரீமங்களாம்பிகை; தலத்தின் பெயர் திருமங்கலக்குடி; தீர்த்தம் - மங்கல தீர்த்தம்; விமானம் - மங்கல விமானம்; தல விநாயகரும் ஸ்ரீமங்கல விநாயகராக அருள்கிறார்.

இப்படி ஐந்துவித மங்கலங்கள் பொருந்தித் திகழ்வதால், இந்தத் தலத்துக்கு பஞ்சமங்கல க்ஷேத்திரம் என்ற பெரும் சிறப்பு உண்டு.

ஸ்ரீமங்களாம்பிகை
ஸ்ரீமங்களாம்பிகை

இத்தகு சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்துக்கு வழிபடும் பெண்களுக்கு சர்வ மங்கலங்களும், மாங்கல்ய வரமும், பலமும் அருளும் கருணை நாயகியாய் அம்பாள் அருள்கிறாள். அதற்கு சாட்சியாக, தன்னுடைய திருக்கரங்களில் எப்போதும் மங்கலச் சரடுகளை ஏந்தியவளாய் அருள்பாலிக்கிறாள், ஸ்ரீமங்களாம்பிகை.

இதனாலேயே இந்த அன்னை `மாங்கல்யம் காத்திடும் மங்களாம்பிகை' என்று பக்தர்களால் போற்றப்படுகிறாள். அன்னையின் மகிமையைச் சொல்லும் புராணக்கதை ஒன்றையும் பக்தர்கள் சிலிர்ப்போடு பகிர்ந்துகொள்கிறார்கள்.

மாங்கல்யம் காத்திடுவாள் மங்களாம்பிகை!

ஒருகாலத்தில் வெள்ளெருக்கங்காடாய் இருந்த காவிரிக் கரைப் பிரதேசம் இது. ஒரு முறை காலவ முனிவரின் சாபத்தால் பெரும் பிணிக்கு ஆளான நவகிரகங்களும் இந்த வனப் பகுதிக்கு வந்து தவமிருந்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றனராம்.

ஸ்ரீநடராஜர் ஸ்ரீசிவகாமி அம்மை
ஸ்ரீநடராஜர் ஸ்ரீசிவகாமி அம்மை

கி.பி. பதினோராம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க மன்னனின் பிரதான அமைச்சர் ஒருவரின் மேற்பார்வையில் காவிரி தேசத்தில் சிவாலயத் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. புதுக்கோட்டை மலைப் பகுதிகளில் உடைக்கப்பட்ட பாறைகள் வண்டி களில் ஏற்றப்பட்டு, திருப்பணிகள் நடைபெறும் கோயில்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

திருமங்கலக்குடி ஈசன் மீது பெரும் பக்தியும் பேரன்பும் கொண்டவர் சொழ அமைச்சர். ஆகவே, இந்தத் தலத்தின் கோயிலைக் கற்றளியாக கற்கோயிலாக மாற்றவேண்டும் என்று விரும்பினார். பாறையைச் சுமந்து செல்லும் வண்டிகள் இந்தத் தலத்தின் வழியாகவே செல்லவேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அமைச்சர் என்ன செய்தார் தெரியுமா?

ஒவ்வொரு முறையும் வண்டிகள் இப்பகுதியைத் தாண்டும் போது, வண்டிக்கு ஒரு பாறை வீதம் இந்தத் தலத்தில் இறக்கிவைக்க வேண்டும் என்று கட்டளை இட்டார். விளைவு... காவிரி தீரம் முழுக்க ஆங்காங்கே சோழ மன்னன் கட்டளைப்படி திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில், மங்கலக் குடியிலும் கற்றளிக் கோயில் வளரத் தொடங்கியது. இதையறிந்த தீயோர் சிலர் அமைச்சரைப் பற்றி மன்னனிடம் புகார் செய்தனர். கோபம் கொண்டான் மன்னன்; அமைச்சர் சிரச் சேதம் செய்யப்பட்டார்.

ஸ்ரீபைரவர்
ஸ்ரீபைரவர்

அதனால் மிகவும் கலங்கிப்போன அமைச்சரின் மனைவி அம்பிகையின் சந்நிதிக்கு ஓடோடி வந்தாள். அவளிடம் முறையிட்டு அரற்றினாள். அனுதினமும் தன்னை வழிபடும் அந்தப் பெண்ணின் கண்ணீரைக் கண்டு பொறுக்காத அம்பிகை, அவளின் மாங்கல் யத்தைக் காக்க திருவுளம் கொண்டாள். அம்பிகையின் விருப்பத்தையும் எண்ணத்தையும் புரிந்துகொண்ட எம்பெருமானும் அமைச்சரை மீண்டும் உயிர்ப்பித்து அருள்புரிந்தார். மன்னனும் தனது தவறை உணர்ந்து ஓடோடி வந்தான்; அனைவரையும் பணிந்தான்.

ஸ்ரீசூரியன்
ஸ்ரீசூரியன்

அன்று முதல், அமைச்சரின் உயிரை மீட்டுத் தந்த சிவனாருக்கு ‘உயிர் கொடுத்த பிராணநாதேஸ்வரர்’ என்றும், பெண்ணின் மாங்கல்யம் காத்திட்ட அன்னைக்கு ‘மாங்கல்யம் காத்த மங்களாம்பிகை’ என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டன.

ஐந்து தீபங்கள்... மாங்கல்ய சரடு!

ஜாதக தோஷங்களால் பிரச்னைகள் சூழும் வேளையிலும், உயிராபத்து ஏற்படும் காலத்திலும், கணவர் நோய்வாய்ப்பட்டு அவதியு றும் காலத்திலும்... இந்தத் துன்பங் களிலிருந்து விடுபட வேண்டி, இந்த அம்பிகையை வழிபடுகிறார்கள் பெண்கள். தொடர்ந்து 5 வெள்ளிக் கிழமைகள் அன்னையின் சந்நிதியில் தீபமேற்றி அர்ச்சித்து, வழிபடுகின்றனர். அவளின் திருக் கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடுகளை பிரசாதமாகப் பெற்று அணிந்துகொள்கின்றனர். அம்பிகையின் அருளால் பிரச்னைகள் தீர்ந்ததும் அம்பிகைக்கு புடவை சாற்றி வழிபடுகின்றனர். அதேபோல், புதிதாக திருமண மாங்கல்யம் வாங்குபவர்கள், அதை அம்பிகையின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து வணங்குவதும் வழக்கம்.

வெள்ளெருக்கு இலையில் தயிரன்னம் பிரசாதம்! - திருமங்கலக்குடி மங்களாம்பிகை

பங்குனிப் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள் இரவில் திருக்கல்யாண வைபவம் நிகழும். மாப்பிள்ளை அழைப்பு, ஊஞ்சல், நலுங்கு, மாலை மாற்றுதல், திருக்கல்யாணம் என கோலாகலமாக நிகழும் இந்த வைபவத்தின்போதும் பெண்களுக்கு மாங்கல்யசரடு வழங்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெள்ளெருக்கு இலையில் தயிரன்னம் பிரசாதம்!

நவராத்திரி காலத்தில் தினமும் சந்தனக்காப்பு அலங் காரத்தில் அருளும் மங்களாம்பிகையை தரிசிப்பது விசேஷம். இங்கு வந்து வழிபட்ட பின்னர், அருகிலுள்ள சூரியனார் கோயிலில் அருளும் நவகிரகங்களை வழிபட வேண்டும். இதனால் கிரக தோஷங்கள் நீங்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப் படும் உச்சிக்கால பிரசாதமான தயிரன்னத்தை அருமருந் தாகப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீசந்திரன்
ஸ்ரீசந்திரன்

நீங்களும் ஒருமுறை திருமங்கலக்குடிக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; உங்கள் வீட்டில் சர்வ மங்கலங்களும் எப்போதும் நிறைந்திருக்கும்.

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: திருமங்கலக்குடி

ஸ்வாமி: அருள்மிகு பிராணநாதேஸ்வரர்

அம்பாள்: அருள்மிகு மங்களாம்பிகை

தலச் சிறப்பு: ஐந்து மங்கலங்கள் நிரம்பியது. தலம் - மங்கலக்குடி. தீர்த்தம் - மங்கல தீர்த்தம். விமானம் - மங்கல விமானம், விநாயகர் - மங்கல விநாயகர். மாங்கல்யச் சரடும், வெள்ளெருக்கு இலையில் தயிரன்னம் பிரசாதமும் விசேஷம். மாங்கல்ய பலத்துக்கு வழிபடவேண்டிய க்ஷேத்திரம்.

எப்படிச் செல்வது?: கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ் சாலையில் ஆடுதுறையிலிருந்து 3 கி்.மீ. தொலைவில் திருமங்கலக்குடி அமைந்துள்ளது. கார், ஆட்டோ வசதியுண்டு.