Published:Updated:

தினம் ஒரு திருவிளையாடல் - மதுரையில் களைகட்டும் ஆவணிப் பெருவிழா!

சைலபதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது ஆவணி மூலத் திருவிழா. இந்தத் திருவிழாவில் ஈசன் செய்த திருவிளையாடல்கள் உற்சவமாக நிகழ்த்தப்படும்.

Lord Siva
Lord Siva

தமிழகத் திருத்தலங்களுள் முக்கியமானது மதுரை. இங்கு ஈசன் கோயில் கொண்டுள்ள திருத்தலங்கள் அநேகம். மதுரையைச் சுற்றிய நிலப்பகுதியில் ஈசன் தன் பக்தர்களுக்காக நடத்திய திருவிளையாடல்களும் மிகுதி. அப்படியான திருவிளையாடல்கள் உற்சவங்களாகக் கொண்டாடப்படும் திருவிழாவே ஆவணி மூலத் திருவிழா.

Lord siva
Lord siva

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்களில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அவற்றில் ஆவணி மூலத் திருவிழா மிகவும் முக்கியமானது.

ஆவணி மூலத் திருவிழா நடைபெறும் நாள்களில் ஈசனின் திருவிளையாடல்கள் நடைபெறும். இந்த விழா இன்று (26.8.19) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Lord Siva
Lord Siva

இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளான, திருவிளையாடல் வைபவம் 1.9.19 முதல் நடைபெற இருக்கிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை (1.9.19) , நாரைக்கு முக்தி கொடுத்த லீலை (2.9.19) , மாணிக்கம் விற்ற லீலை (3.9.19), தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை (4.9.19) , உலாவக் கோட்டை அருளிய லீலை (5.9.19) , பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை (6.9.19), வளையல் விற்ற லீலை (7.9.19), நரியைப் பரியாக்கிய லீலை (8.9.19), பிட்டுக்கு மண் சுமந்த லீலை (9.9.19), விறகு விற்ற லீலை (10.9.19) ஆகிய லீலைகள் உற்சவங்களாக நடத்தப்படும்.

உற்சவ நாள்களில் சிவபெருமான் மீனாட்சி அம்மையோடு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வார்.

Lord Siva
Lord Siva

ஈசனின் திருவிளையாடல்கள் நடைபெற்றதாகக் கருதப்படும் மதுரை மாநகரில் நடைபெறும் சிவபெருமானின் திருவிளையாடல்களைக் கண்டு தரிசிப்பதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம் என்பது ஐதிகம்.