Published:Updated:

அவிநாசி லிங்கேஸ்வரர் தேரோட்டம்: விண்ணைப்பிளந்த `அவிநாசியப்பா கோஷம்' - பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம்!

அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோட்டம்

அவிநாசியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 'அரோகரா அவிநாசியப்பா' என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Published:Updated:

அவிநாசி லிங்கேஸ்வரர் தேரோட்டம்: விண்ணைப்பிளந்த `அவிநாசியப்பா கோஷம்' - பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம்!

அவிநாசியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 'அரோகரா அவிநாசியப்பா' என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோட்டம்
கொங்கு மண்டலத்தின் ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாமுமாக விளங்குகிறது கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில்.

இந்தக் கோயிலில் ஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கிய சித்திரைத் தேர்த் திருவிழா மே 8-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. கடந்த ஏப்ரல் 29-ம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்கள் காடசியளிக்கும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து, திங்கள்கிழமை (மே 1) இரவு 9:30-க்கு கற்பக விருட்சம், திருக்கல்யாணம், யானை வாகனக் காட்சி ஆகியவை நடைபெற்றன. அப்போது, யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.

தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்
தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 2-ம் தேதியில் தொடங்கி மே 4-ம் தேதிவரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதன்படி, அவிநாசியப்பர் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாகத் தொடங்கியது. இதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிவாசார்யர்கள், ஆன்மிகப் பெருமக்கள், பக்தர்கள் என அனைத்துத் தரப்பினரும் 'அவிநாசியப்பா', 'அரோகரா', 'நமசிவாயா' போன்ற கோஷங்கள் எழுப்பினர். திருப்பூர் சிவனடியார்களின் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர் சொர்ண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோட்டம்
அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோட்டம்

தெற்கு ரத வீதியில் தொடங்கப்பட்ட தேரோட்டம், மேற்கு ரத வீதி வழியாக வந்து, வடக்கு ரத வீதி வளைவில் நிறுத்தப்பட்டவுள்ளது. மீண்டும் புதன்கிழமை காலை (மே 3) வடக்கு ரத வீதியில் இருந்து தேரோட்டம் நிலை சேருதல் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை (மே 4) அம்மன் தேரோட்டமும் நடைபெறவுள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் காரணமாக அவிநாசி பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.