Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

சிற்பங்களின் ஆலயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிற்பங்களின் ஆலயம்!

அம்மையப்பனாக இங்கு ஈசன் ஏகாந்த நிலையில் காட்சி தரும் அருள் கோலம் இது!

கர்நாடக மாநிலம் பேளூருக்கு அருகிலுள்ளது இந்த ஹொய்சாளேஸ்வரர் திருக்கோயில். துவாராகபுரியைச் சேர்ந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்ட ஹொய்சாளர்களால் (1121-ல்) கட்டப்பட்ட இந்தச் சிவன் கோயிலில் ஹொய்சாளேஸ்வரர், சாந்தலேஸ்வரர் என இரு சந்நிதிகள் உள்ளன. இது, நுணுக்கமான சிற்பங்களைத் தன்னகத்தே கொண்டு சிற்பங்களின் ஆலயமாகத் திகழ்கிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

கோயிலின் வாசலில் வீற்றிருக்கும் இவரின் கைகளில் திகழும் ஆயுதங்களும், பேழை வயிறும், மேனியின் ஆபரணங்களும், கிரீடமும், அழகிய திருவாட்சியும் சிற்ப அற்புதங்கள். நர்த்தன கோலமும் விநாயகரைத் தாங்கும் தாமரைப் பீடமும் அழகோ அழகு. தும்பிக்கையும் இடது கை ஒன்றும் அந்நியப் படையெடுப்பால் பின்னம் அடைந்துள்ளன. எனினும் நம்பிக்கை தரும் அற்புதக் கோலம் இது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

ஹொய்சாளேஸ்வரர் கோயில் முழுக்க ஒருவகை சோப்புக் கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வடிக்க இலகுவாக மெழுகு போல இந்தப் பாறைகள் அமைந்ததால், எழுத்தில் வடிக்க முடியாத கலை நயத்துடன் இங்கு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அம்மையப்பனாக இங்கு ஈசன் ஏகாந்த நிலையில் காட்சி தரும் அருள் கோலம் இது!

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

ஹோய்சாளேஸ்வரருக்கும், சாந்தலேஸ்வரருக்கும் முன்பாக நந்தி மண்டபங்கள் உள்ளன. இங்குள்ள நந்தியும் அதன் மண்டபத் தூண்களும் கலைநயம் கொண்டவை. நந்தி மண்டபத்தைச் சுற்றி கலைநயம் மிக்க தூண்கள் உள்ளன. ஒற்றைக் கருங்கல்லினால் நந்தி வடிக்கப்பட்டுள்ளது. இரு நந்திகளும் ஒன்று போலவே உள்ளன. சிவனின் வருகைக்காகக் காத்திருக்கும் நந்தியம்பெருமானின் ஏக்கம் அவரின் கண்களில் தெரிவதுபோன்ற தத்ரூபம், வியக்க வைக்கிறது!

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

ஜசம்ஹார மூர்த்தியின் அழகியச் சிற்பமிது. தேகத்தில் அணிந்துள்ள ஆடை ஆபரணங்களில்தான் எவ்வளவு நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகள்.கரத்தில் தாங்கிய அசுரன் சிரம், கோரைப் பற்கள், சினம் கொண்டு சீறும் நந்தி... என யானையின் தோலை உரித்தாடும் இறையின் திருக்கோலம் நம்மைச் சிலிர்க்கவைக்கிறது!

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!
எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

தூக்கிய பாதத்தால் விண்ணை அளக்கும் வாமன மூர்த்தியின் அழகிய வடிவமிது. திருமாலின் பாதத்தின் கீழே மகாபலி மன்னனின் சரணடைந்த திருக்கோலம், உயிர்ச் சிற்பமாக அழகுற வடிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழுமாக அமைந்துள்ள நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் சிற்ப அதிசயங்களே! எனலாம்.

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

லயத்தின் வெளிப்புறச் சுவர்களில் அமைந்துள்ள நுட்பமான சிற்பங்கள் இவை. அடுக்கடுக்காக அமைந்துள்ள இந்தச் சிற்பத் தொகுப்புகளால் ஆலயமே அழகு பெற்றுள்ளது எனலாம். யானை வரிசைகள், யாளிக் கூட்டங்கள், இசையெழுப்பும் பெண்களின் அணிவகுப்பு, போருக்குச் செல்லும் வீரர்களின் கூட்டம், பூக்களின் வரிசை, ஓவியக் கோலங்கள் என ஆலயச் சுவரெங்கும் அமைந்திருக்கும் நுண்ணியச் சிற்பங்கள் இந்திய சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

ங்கு, சக்கரம், கதையோடு திருமாலின் அழகிய வடிவம். நடன மங்கை, இசை எழுப்பும் கந்தர்வர் புடை சூழ எழிலாகக் காட்சியளிக்கும் பெருமாள், புன்னகை வீசி நிற்கிறார். சிவனுக்கான ஆலயம் இது என்றாலும் இங்கு பிரம்மன், விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளுக்குமான சிற்பங்களும் அதிகம் காணப்படுவது விசேஷம்.

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

யோகினிகள் சுற்றி நிற்க, ஆவேசமாய் நிற்கும் துர்கை வடிவம். சூலம், டமருகம், அசுரனின் சிரம், நாக அஸ்திரம் ஆகியவற்றைத் தாங்கியிருக்கும் தேவி இவள். நாக திருவாட்சியின் கீழ் நின்றிருக்கும் இந்த அன்னையின் கோப முகத்திலும் குறுநகையைக் கீற்றாக வடித்திருக்கும் சிற்பியின் கைவண்ணம் பாராட்டத் தக்கது.

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

மும்மூர்த்திகளில் பிரம்மனும் விஷ்ணுவும் காட்சி தரும் அழகிய சிற்பமிது. இடது புறம் நடன மாதுவின் அழகிய கோலம். பிரம்மன் விஷ்ணுவின் திருப்பாதங்களின் கீழே தேவகணங்களின் தோற்றம். ஒவ்வொரு சிற்பத்தின் மேலும் திகழும் அழகிய நுணுக்கமான திருவாட்சியின் அமைப்பு கொள்ளை அழகு!

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

குதிரை மீது ஏறிச் செல்லும் போர் வீரனின் அழகிய சிற்பமிது. ஒரு சாண் அளவே கொண்ட சிற்பத்திலும் எவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள்... அழகிய கொண்டை, உடைவாள், குதிரையின் முகபாவம் என காலத்தை மீறி பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறான், இதை வடித்த சிற்பி.

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

நுண்ணிய வேலைப்பாடுகளால் உருவான சிவபெருமானின் அழகிய திருமுகக் காட்சி. வட்ட திருவாட்சியும், சுருண்ட கேசத்தால் உருவான ஜடாமுடியும் காண்பவரை பரவசம் கொள்ளச் செய்பவை. கருணை பொங்கும் விழிகளும் கனிந்து வடியும் புன்னகையுமாகத் திகழும் ஈசனின் திருமுகத்தைத் தரிசிக்கும் போது, `மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே...' என்று வேண்டுவதற்குத் தோன்றுகிறது அல்லவா!

லயத்தின் கருவறை மண்டபத்துக்கு முன்னால் ஒரு பக்தரின் தியானக் காட்சி.

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

உள்முகப் பயணத்தில் ஒரு ஜீவன் சிவனைத் தேடும் அழகியக் காட்சியிது. கலை நயத்துக்கு மட்டுமல்ல, சூழ்ந்திருக்கும் புறக்காட்சிகளால் அகத்தினுள் இறையை உணரச் செய்யும் ஆற்றல் கேந்திரமாகவும் திகழ்கிறது, இந்த ஹொய்சாளேஸ்வரர் திருக்கோயில்! ஆழ்ந்த மன அமைதிக்கும் உகந்த கோயில் என்பதை எடுத்துக்காட்டும் உன்னத சாட்சி இந்தப் புகைப்படம்.

எங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்!

வெண்கொற்றக் குடையின் கீழ் அருளும் ராஜகணபதி இவர்.கரங்களில் ஏக தந்தம், அங்குசம், செண்டு, மோதகம் தாங்கி நிற்கும் இந்தக் கம்பீர கணபதியை தரிசித்தால் பதவி உயர்வு, அரசு பதவிகள் கிட்டும் என்பது நம்பிக்கை.