Published:Updated:

முடிந்தது பாகப்பிரிவினை: பத்ரிநாத் கோயிலில் வழிபட்ட முகேஷ் அம்பானி; ரூ.5 கோடி காணிக்கை!

பத்ரினாத் கோயிலில் வழிபாடு

தொழிலதிபர் முகேஷ் அம்பானி பத்ரிநாத் கோயிலில் வழிபட்டு ரூ.5 கோடியை காணிக்கையாகச் செலுத்தினார்.

Published:Updated:

முடிந்தது பாகப்பிரிவினை: பத்ரிநாத் கோயிலில் வழிபட்ட முகேஷ் அம்பானி; ரூ.5 கோடி காணிக்கை!

தொழிலதிபர் முகேஷ் அம்பானி பத்ரிநாத் கோயிலில் வழிபட்டு ரூ.5 கோடியை காணிக்கையாகச் செலுத்தினார்.

பத்ரினாத் கோயிலில் வழிபாடு

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது சொத்துக்களை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். சில்லறை வணிகத்தை தனது மகளுக்குக் கொடுத்துவிட்டார். பெட்ரோலிய வியாபாரத்தை ஒரு மகனுக்கும், மொபைல் வியாபாரத்தை மற்றொரு மகனுக்கும் கொடுத்துவிட்டார். முறைப்படி அவர்களிடம் சொத்துக்கள் ஒப்படைக்கப்படாவிட்டாலும், அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு மூன்று பேரிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. சொத்துக்களை சட்டப்படி பிரிக்கும் முன்பு அவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் சொத்தை இப்போதே நிர்வகிக்கும் பொறுப்பை முகேஷ் அம்பானி கொடுத்து இருக்கிறார்.

அம்பானி
அம்பானி

இதன் மூலம் தொழிலில் ஏதாவது பிரச்னை வந்தாலும் அதனைத் தான் முன்னின்று சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்து முடித்துள்ளார். அதோடு ஜியோ மொபைல் நாட்டிலேயே முதல் முறையாக 5 ஜி சேவையை வழங்க இருக்கிறது. பிரதமர் ஜியோவின் 5 ஜி சேவையை ஏற்கெனவே முறைப்படி தொடங்கிவைத்துவிட்டார். ஆனால் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. தற்போது அம்பானி குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக முடிந்துவிட்டதால் இப்போது முகேஷ் அம்பானி கோயில் கோயிலாக சுற்ற ஆரம்பித்திருக்கிறார். கடந்த மாதம் தான் திருப்பதி பாலாஜி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அதனைத் தொடர்ந்து குருவாயூர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அடுத்ததாக பத்ரிநாத் மற்றும். கேதார்நாத் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டார். சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வந்த முகேஷ் அம்பானியுடன் அவரது கம்பெனி அதிகாரிகள் சிலரும் வந்திருந்தனர். கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் மேம்பாட்டிற்காக ரூ.5 கோடியை நன்கொடையாக வழங்கினார். இத்தகவலை துணைத்தலைவர் கிஷோர் பன்வார் தெரிவித்துள்ளார்.